உயிர்தெழும் ஊழல்.

 இந்திய ஒன்றிய அரசு பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி வாங்கிய ரபேல் போர் விமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விசாரணை நடத்தக் கோரியது.

ரபேல் போர் விமான ஊழல் சர்ச்சைகளுக்குப் பின்னரும் மோடி மீண்டும் வென்று ஆட்சியமைத்தார். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை கொள் முதல் செய்ய 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அதில் 23 விமானங்களை இந்தியா வாங்கியும் விட்டது. மீதி 36 விமானங்கள் 2022- ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்க இருக்கும் நிலையில் இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு ஆன்லைன் செய்தி நிறுவனம் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.


இந்த ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு பொது நலன் வழக்கை விசாரித்து, 2019 நவம்பரில் அதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று கூறியது.
இது சர்சைக்குள்ளாகி ஓய்ந்த நிலையில் இப்போது இந்தியாவுக்கும் பிரான்ஸ் விமான உற்பத்தியாளரான டசால்ட்டுக்கும் இடையில் 36 போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பிரான்ஸ் பொது விவாகரங்களுக்கான வழக்கு மையத்தின் குற்றப்பிரிவு இதை விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
மீடியா பார்ட் பத்திரிகையும் தன்னார்வ நிறுவனமான ஷெர்பாவும் கொடுத்த புகாரை அடுத்து இந்த விசாரணை துவங்கப்பட இருக்கிறது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் செய்யப்பட்ட போது பிரான்ஸ் அதிபர் பதவியில் ஹாலண்ட் இருந்தார். இப்போது மக்ரோன் இருக்கிறார். அன்றைய ஹாலண்டின் அரசின் நிதியமைச்சராக இருந்த மக்ரோன் இன்று அதிபராக இருக்கிறார். விசாரணைகளின் போக்கு இந்திய அரசியலில் புயல் கிளப்பக் கூடும்.
--------------------------------------------------------------------------------
தடுப்பூசியால் தள்ளா(மோ)டி

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 3-ஆம் அலையின் தாக்கம் தென்படத் துவங்குகிறது. ஆனால் மூன்றாம் அலையில் இருந்து மக்களைக் காக்க தடுப்பூசி வேகம் பெற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், மத்திய அரசோ தடுப்பூசியில் தெளிவான ஒரு கொள்கையை இதுவரை உருவாகவில்லை. தடுப்பூசியை அதிக விலைக்கு விற்ற மத்திய அரசு திடீரென தடுப்பூசி இலவசம் என அறிவித்தது.

ஆனாலும் போதுமான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்கவில்லை, இதனால் மக்கள் ஏமாந்து செல்கிறார்கள்.முதல் தடுப்பூசி போட்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி போடுவதற்குக் கூட தடுப்பூசி இல்லை. ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி பற்றாக்குறை சரி செய்யப்படும் என மோடி அரசு சொன்ன போதும் நிலமை அப்படி இல்லை.

கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது.. இந்தியாவில் தற்போது 34 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையும் உண்மைதானா எனத் தெரியவில்லை.காரணம் வட மாநிலங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கும் போட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி கொள்கையை விமர்சித்துள்ள ராகுல்காந்தி “

‘‘ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி’’ என்று கேட்டு இருந்தார்.

இந்த நிலையில் ராகுல்காந்தி இன்று ஒரு ஒட்டுமொத்த தடுப்பூசி டிராக்கர் என்னும் வரைபடத்தை வெளியிட்டு உள்ளார். அதில் கொரோனா 3வது அலையை தவிர்க்க கொரோனா தடுப்பூசி ஓவ்வொரு நாளும் 69 லட்சம் போடவேண்டும் எனவும் ஆனால் தற்போது 50.8 லட்சம் தடுப்பூசிகளே போடப்பட்டு வருகிறது. இதற்கான இடைவெளி 27 சதவீதம் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி  இடைவெளியை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என டுவிட் செய்து உள்ளார்.

-----------------------------------------------------------------------------

நீட்டைக் காக்கும் சாமி.

“இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா?” என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்கிறார்  எடப்பாடி பழனிசாமி. கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைய வில்லை. காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வந்த  போதும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றியவர்கள் இவர்கள். திமுகவின் அடிப்படைக் கொள்கை என்னும் அளவில் அது நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரானது.

ஆனால், மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் தயவில் தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள நீட் என்னும் நீதியற்ற தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டவர் எடப்பாடி பழனிசாமி என்பது அனைவருக்குமே தெரியும்.


இப்போது அவர் கேட்கும் “இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா?” என்ற கேள்விக்குள் உள்ள டோன் அதிகாரத்திமிர் மிக்கது. மோடியும் நானும் சேர்ந்து நீட் தேர்வை கொண்டு வந்தோம். தமிழகத்தில் கஜானாவையே சூறையாடி விட்டு மோடியின் பாதுகாப்பில் இருக்கிறோம். இன்னும் எங்க பாஸ் மோடிதான் பிரதமராக இருக்கிறார். உன்னால் நீட் தேர்வை ரத்து செய்து விட முடியுமா என்பதுதான் அந்த திமிர் பிடித்த அழுக்கான வார்த்தைகளின் அர்த்தம். நீட் தேர்வால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.கிராமபுற ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பற்றி கவலைப்படாமல் நான் கொண்டு வந்த நீட்டை நீ ஒழித்து விடுவாயா என்பது போல பேசுகிறார். மேலும், அவரது குரல் பாஜக நீட்டுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் பாஜக தரப்பை வலுப்படுத்துவதற்காக இந்தகுரலை மீண்டும் மீண்டும் ஒலிக்கிறார். சென்னை உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ தலையிட்டு நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு முன்னெடுக்கும் முயற்சிகளை முடக்கி விட தூபம் இடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

--------------------------------------------------------------------------

பிரேசில்,பாரத் பயோடெக்கின் கோவேக்சின் 

ஒப்பந்தம் ரத்தானது ஏன்?



பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கையாண்ட விதத்தை எதிர்த்து அந்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசியை அதிக விலை கொடுத்து வாங்க பிரேசில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்த சில நாட்களிலேயே, தங்களிடம் ஒரு டோஸ் தடுப்பூசி வாங்க ஒரு அமெரிக்க டாலர் லஞ்சமாகக் கேட்கப்பட்டது என்று ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து பிரேசிலில் பல இடங்களில் போராட்டங்கள் தொடங்கின.

கடந்த மாதம் கோவிட்-19 காரணமாக அந்த நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்தது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக பிரேசில் உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பிரேசில் சுகாதார அமைச்சகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் லஞ்சம் பெற்றத்தைத் தாம் மூன்று மாதங்களுக்கு முன்னரே அதிபரிடம் எச்சரித்து இருந்ததாகவும், ஆனால் அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அமைச்சகத்திலேயே பணியாற்றும் ஒருவர் அதிபர் சயீர் பொல்சனாரூ மீது குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த முறைகேட்டில் சயீர் பொல்சனாரூவின் பங்கு என்பது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று அனுமதி வழங்கியது.

சயீர் பொல்சனாரூ

பட மூலாதாரம்,

முன்னதாக இரண்டு கோடி டோஸ் தடுப்பூசி வாங்க பாரத் பயோடெக் நிறுவனத்திடம் பிரேசில் சுகாதார அமைச்சகம் செய்துகொண்டிருந்த 324 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை, அந்த நாட்டின் தலைமைத் தணிக்கையாளரின் பரிந்துரையின்பேரில் செவ்வாயன்று பிரேசில் அரசு ரத்து செய்தது.

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் பாரத் பயோடெக்கை விடவும் குறைந்த விலைக்கு தடுப்பூசி வழங்க முன்வந்தும் பிரேசில் அரசு அதைப் பரிசீலிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

புதனன்று பிரேசிலில் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த அவசரகால அனுமதி கோரி பாரத் பயோடெக் அளித்திருந்த விண்ணப்பமும் போதிய தரவுகள் இல்லையென்று கூறி நிராகரிக்கப்பட்டது.

ஊழல் புகார் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சரும் தெரிவித்திருந்தார்.

பாரத் பயோடெக் நிறுவனமும் முறைகேடு நடந்ததை மறுத்துள்ளது. தடுப்பூசிகள் உற்பத்தித் துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்துக்கு சுகாதார அமைச்சகம் முன்கூட்டியே பணம் வழங்கும் என்றும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு, ஒப்புக்கொள்ளப்பட்ட அளவு தடுப்பூசிகளை ஒப்புக்கொள்ளப்பட்ட காலவரையறைக்குள் நிறுவனம் தயாரித்து வழங்கும் என்றும் பாரத் பயோடெக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் எந்த விதமான தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சயீர் பொல்சனாரூ, தமக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகளை தொடங்குவதற்காக எதிர்க் கட்சிகள் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகத் தெரிவிக்கிறார் .

A person holds a sign reading "Bolsonaro out" during a protest calling for the impeachment of Brazil's President Jair Bolsonaro in Rio de Janeiro, Brazil, on 3 July 2021

பட மூலாதார

தடுப்பூசிகள் குறித்து சந்தேகம் வெளியிட்டது, பொதுமுடக்கம் மற்றும் கட்டாய முகக் கவசம் அணிதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றில் தளர்வுகள் வேண்டும் என்று கூறியது, தேசிய அளவிலான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தத் தவறியது உள்ளிட்டவற்றின் காரணமாக சயீர் பொல்சனாரூ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தார்.

பெரியவர்களில் 11% பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ள பிரேசில் நாட்டில் சூழ்நிலை மிகவும் தீவிரமாக உள்ளது என்று அந்த நாட்டின் அரசு சுகாதார முகமை சமீபத்தில் தெரிவித்திருந்தது.

பிரேசிலில் மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் கடைகள் ஆகியவை கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் பொதுவெளியில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

--------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?