நிலக்கரியைக் காணோம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதிற்கும் இருப்பில் உள்ளதிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்தத் தவறில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.





மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இந்த மின்துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் தெரியவரும்போது உள்ளபடியே கடந்த அதிமுக ஆட்சியை நினைத்து வருத்தப்படுவதா? அல்லது அந்த நிர்வாக திறமையைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு ஒரு மோசமான நிர்வாகம் செயல்பட்டிருக்கிறது. இதேபோல், தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்விற்கு பிறகு அதன் உண்மை நிலையும் தெரிவிக்கப்படும். என்று கூறினார்.

----------------------------------------------------------

 மழை வருது

-------------------

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதனையடுத்து, நாளை கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் ,திருவள்ளூர், அரியலூர் ,பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

மேலும், வருகின்ற 22ம் தேதி சேலம் தர்மபுரி, கள்ளக்குறிச்சி ,விழுப்புரம் ,திருவண்ணாமலை, நீலகிரி, பெரம்பலூர் ,பெரம்பலூர் ,டெல்டா மாவட்டங்கள், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

இந்நிலையில், 23ம் தேதி தேதி சேலம் தர்மபுரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் , மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 24ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------------------------------------------------+

கொடநாடு.

முன்னாள் முதலமைச்சர் அம்மா, அம்மா என கூறிவிட்டு அவருக்கே குழிப்பறிக்கும் வகையில் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் தனது ஆட்களை ஏவி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார் என பகிரங்கமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு பங்களாவில் நடந்த குற்றச்செயல்கள் மீதான வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றம் சாட்டப்பட்டவராக கருதப்படும் சயானிடம் கோத்தகிரி போலிஸார் சுமார் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அதில், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பெயரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், அவருக்கு பல்வேறு வசதிகளை கூடலூரைச் சேர்ந்த அ.தி.மு.க வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவன் செய்து தந்ததாகவும் சயான் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இவை அனைத்தும் முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சயான் அளித்த பேட்டியின் விவரங்களும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதில், "கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்குள் யார் யாரெல்லாம் சென்று கொள்ளை மற்றும் கொலையில் ஈடுபட்டது குறித்து தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரும் எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான கனகராஜ் மற்றும் கூடலூரைச் சேர்ந்த மர வியாபாரியும் அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவனின் ஏற்பாட்டின் பேரிலேயே கொடநாட்டில் கொள்ளை அரங்கேறியது.

சம்பவம் நடப்பதற்கு முதல்நாள், கொடநாடு பங்களாவில் நுழைவதற்காக 11 பேருடன் சென்று நோட்டமிட்டோம். பின்னர் காவலாளியை கயிற்றால் லாரியில் கட்டி வைத்துவிட்டு நான், கனகராஜ் உட்பட நான்கு பேர் மட்டுமே சம்பவத்தன்று பங்களாவுக்குள் நுழைந்தோம்.

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அறையை காட்டி பூட்டை உடைக்கச் சொன்ன கனகராஜ் அங்கு பீரோவில் இருந்து ஆவணங்களை எடுத்தார். ஆனால் எந்த பணமும் நகையும் எடுக்கவில்லை. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இந்த கொள்ளை எனக் கூறி சேலத்துக்கு விரைந்தார் கனகராஜ்.

இந்த கொள்ளைக்காக ரூ.5 கோடி தருவதாக கனகராஜ் கூறியிருந்தார். ஆனால் ஆவணங்களை கைகளுக்கு வந்ததும் கொள்ளையடித்தவர்களை திட்டமிட்டு கொலை செய்துவிட்டார்கள். அந்த விபத்தில் நான் தப்பித்திருக்காவிட்டால் இந்த உண்மைகள் ஏதும் வெளி வந்திருக்காது.

மேலும் கணினி பொறியாளர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததே எடப்பாடி பழனிசாமி தரப்புதான் காரணம். இந்த கொடநாடு வழக்கு விவகாரத்துக்கு எடப்பாடி பழனிசாமிதான் முழுமுதற் காரணம் என்று நிச்சயமாக கூறுகிறேன். அப்படி அவருக்கு தொடர்பில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு மாற்றட்டும்.

இவ்வாறு சயான் தெரிவித்திருக்கிறார்

இதனைத் தெரிந்து கொண்டதால்தான் எடப்பாடி பழனிசாமி  வெளிநடப்பு,போராட்டம்,ஆளுநர்,பிரதமர் சந்திப்பு என அல்லாடுகிறார்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?