மீன் பிடி மசோதா

 மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ள இந்திய தீபகற்பத்தைச் சுற்றி மூன்று பக்கமும் 8.118 கி.மீ நீளத்துக்கு கடல் உள்ளது. 3,300 கிராமங்களில் 3.5 மில்லியன் மக்கள் குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை பாரம்பரிய மீனவர்களாக


 வாழ்கிறார்கள்.ஆண்டொன்றுக்கு 30,000 கோடி ரூபாய் கடற்தொழிலில் இருந்து வருமானம் வருகிறது. பெருமளவு அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவதும் மீன்பிடித்தொழில்தான். பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்ட கேரள எல்லையான நீரோடி வரைக்கும் சுமார் 1026 கிலோ மீட்டர் நீளமுடையது நமது தமிழக கடற்கரை. இந்த கடற்கரையை தனியார்கள் சூறையாடத் தடையாக இருந்தது மீனவ குடியிருப்புகள். சுனாமி வருவதற்கு முன்பே மீனவ மக்களை எப்படியாவது கடலோரங்களை விட்டு அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற முயற்ச்சி மத்திய மாநில அரசுகளிடம் இருந்ததுவிதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரப்படவுள்ள தண்டனைகளையும் இச்சட்டம் பட்டியலிட்டுள்ளது. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால், படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். அப்படகில் இருந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சோதிக்க விடாமல் தடுப்பவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம்; பன்னிரண்டு கடல்மைல் தாண்டினால் ஒன்பது லட்சம் அபராதம்; படகின் சொந்தக்காரருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் உண்டு. மீன்களும் பறிமுதல் செய்யப்படும். படகின் நீளம் 12 மீட்டருக்கு மேல் இருந்தாலும் தண்டனை உண்டு.



கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்துவருவதால், 12 கடல்மைல்களைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் இன்றைய நிலைமையாக உள்ளது. விசைப்படகேறி, கடலில் நெடு4ந்தொலைவு பயணித்து, பல நாட்கள் தங்கியிருந்து, மீன் பிடிக்க ஒரு முறை போய்வரும் செலவு மட்டுமே ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இந்நிலையில்,
இந்திய அரசு, “ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிற நாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும் மீன் பொருள்களையும் ஏற்றுமதி செய்வதென்றால், இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டுமென்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கிணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை” எனக் கூறுகிறது

.1990-களில் நரசிம்மராவ் அரசால் அறிவிக்கப்பட்ட மீன்வளக் கொள்கை, ‘கூட்டு முயற்சி’ எனும் பெயரில் பன்னாட்டு ஆலைக் கப்பல்கள் இந்தியக் கடல்களில் மீன்பிடிக்க உரிமம் வழங்கியது.
தேசிய மீன்வளக் கொள்கையின் கீழ் கூட்டு மீன்பிடி திட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன் பிடி உடிமம் வழங்கியதன் தொடர்ச்சியே இது.

ஆனால், அன்றைய தினத்தில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவு அன்றைய நரசிம்மராவ் அரசால் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு முன்பும், பின்பும் பல்வேறு ஒழுங்காற்று மசோதாக்கள் கொண்டு வரப்பட்டும் மீன்வர்களின் அயராதப் போராட்டங்களினால் அவை தோல்வியையே தழுவி இருக்கின்றன. குறிப்பாக தற்போது 2021-ல் கொண்டு வரப்போகும் மசோதா ஏற்கனவே 2009, 2019-ல் கொண்டு வரப்பட்டு மீன்வர்களின் பரவலான எதிர்ப்பால் கைவிடப்பட்டன.



இம்முடிவுதான், மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் படிப்படியான தாக்குதலைத் தொடுத்திட வழிகோலியது. இந்தியக் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிறுவனங்களின் கப்பல்கள், நவீன கருவிகளைக் கொண்டு முட்டை, குஞ்சு வேறுபாடின்றி அப்படியே மீன் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து, மீன்களை இரகம் வாரியாகப் பிரித்தெடுத்து இன்னொரு கப்பலுக்குக் கைமாற்றி விடுகின்றன. எஞ்சிய மீன்குஞ்சுகளையும்,
கரையில் அரசு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்ட மீன் வகைகளை மட்டுமே பிடிக்க வேண்டும். இதை மீறினால் முதல்முறை அபராதமும்; இரண்டாவது முறை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையும்; மீன்றாவது முறையும் மீறினால் படகு பறிமுதல் செய்யப்படும்; மீண்டும் தொழில் செய்ய முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது முடக்கப்படும்.

அப்படியென்றால் மீதமுள்ள கடல் மைல்களில் யார் மீன் பிடிப்பார்கள்? ராட்சத பகாசுரக் கம்பெனிகளும் அதன் ராட்சதக் கப்பல்களும் வலைகளும் தான். இவைகளன்றி மீன் பிடி தொழிலில் ஈடுபடும் (கட்டுமரப்படகு, நாட்டுப்படகு) எந்திர நாட்டுப்படகு, எந்திரப்படகு, விசைப்படகு என்ற 3 வகையினரை பெரும் அளவில் பாதிக்கும்.

மேலும், 12 கடல் மைல் தொலைவுக்குள் மட்டும்தான் மீன் பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை. இதனால் முதலீடு, பராமரிப்பு செலவுகளுக்கேற்ற வருவாய் இருக்காது. நடுக்கடலுக்கு செல்லும்போது மட்டுமே இதற்கான வருவாயை எட்ட முடியும்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?