ஆயிரம் கோடிகளுக்கு மேலே

 1,007 பேர்கள்.

ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹுரூன் இந்தியா' என்ற அமைப்பு இந்தியாவின் 2020ம் ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பானது, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, ₹7,18,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. 5,05,900கோடி ரூபாயுடன் கவுதம் அதானி 2 வது இடத்தில் உள்ளார். HCL இன் ஷிவ் நாடார் 2,36,600 கோடியுடன் 3 வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் 1007 தனிநபர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளார்கள். கடந்த ஆண்டை விட 179 பேர் அதிகரித்துள்ளனர். முதல் முறையாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.இந்தப் பட்டியலில் உள்ள பணக்காரர்கள் ஒவ்வொரு நாளும் ரூ2020 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். இது கடந்த 10 ஆண்டுகள் அதிகமான வளர்ச்சி ஆகும்.

image


எஸ்பி ஹிந்துஜா & பேமிலி மற்றும் எல்என் மிட்டல் முறையே 4 மற்றும் 5 வது இடங்களைப் பெற்றுள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவல்லா 1,63,700 கோடியுடன் 6 வது இடத்தில் உள்ளார்.இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் முகேஷ் அம்பானியின் வளர்ச்சி 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேபோல ஒருநாளில் அவர் ஈட்டும் வருமானம் 163 கோடி மட்டுமே. ஆனால், இரண்டாம் இடத்தில் இருக்கும் கௌதம் அதானி மற்றும் குழுமத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. நாள் ஒன்றுக்கு அதானி குழுமம் ஈட்டும் வருமானம் 1,002 கோடி. அதேபோல கடந்த ஆண்டை காட்டிலும் 261சதவீதம் கூடுதல் வளர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ள வினோத் சாந்திலால் அதானி குழமத்தின் வளர்ச்சியும் 212 சதவீதம் உயர்ந்துள்ளது.

 இந்த பட்டியலிலேயே நாள் ஒன்றுக்கு அதிக வருமானம் ஈட்டுவதிலும், அதிக  வளர்ச்சியிலும் முன்னிலையில் இருக்கிறது கௌதம்அதானி குழுமம்.

--------------------------------------------------------------------------


 புளுகு(அண்ணா)மலை

விழுப்புரம் அருகிலுள்ள அன்னியூர் பகுதியில் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மாநில பிஜெபி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு உரையாற்றினார். அண்ணாமலை உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த பொது மக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அண்ணாமலை: பாஜக கட்சி பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைக்கும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து விலையை குறைப்போம்.


தமிழக நிதி அமைச்சர் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வளைகாப்புக்கு சென்றுவிட்டார். இது தான் திமுகவின் அவலமான நிலை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிஜெபி அரசு தயாராக உள்ளது. பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரக்கூடாது என நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும். சத்தியம் செய்கிறேன் பாஜக பெட்ரோல் விலையை குறைப்பதற்காக தொடர்ந்து போராடுவோம்.மாநில அரசு வரியை குறைக்க வேண்டும். திமுகவுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுத்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முன்வரவேண்டும். என பேசினார்.


தொடர்ந்து பொது மக்கள் கேள்விகளை எழுப்பியவாரு இருந்ததால் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு அண்ணாமலை கிளம்பினார். கேள்வி கேட்ட வர்களுக்கும், பாஜகவினர்களுக்கும்  தகராறு ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.


உண்மையிலேயே பெட்ரோல் விலை உயர்விக்கு யார் பொறுப்பு?

ஐயம் வேண்டாம் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியினர்தான்.


தற்போது மோடி அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 32ரூபாய் 90 பைசா உயர்த்தியுள்ளது.


2014 முதல் 2021 வரை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியிலிருந்து மத்திய அரசின் வருவாய் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் மத்திய அரசு இந்தத்தகவலை தெரிவித்தது.


2014 ஆம் ஆண்டில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .9.48 ஆக இருந்தது. அது இப்போது லிட்டருக்கு ரூ .32.90 ஆக அதிகரித்துள்ளது.


டெல்லியில் பெட்ரோல் விலை பற்றிய விரிவான விளக்கம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பொது மக்களிடம் இருந்து யார் எவ்வளவு வரி வசூல் செய்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இதில் சரக்குக் கட்டணம் (சரக்குக் கப்பல்கள் வரும்போது செலுத்தப்படும் வரி) லிட்டருக்கு 0.36 ரூபாய். 32.90 ரூபாய் கலால் வரி மத்திய அரசின் கணக்கிற்கு செல்லும். டீலரின் லாபம் ரூ. 3.85 இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பிறகு டெல்லி அரசு நிர்ணயித்த VAT ரூ .23.43 வசூலிக்கப்படுகிறது. இதனால் டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ .101.54 ஆனது.


டெல்லி அரசு பெட்ரோலுக்கு 30 சதவிகிதம் வாட் வரியை விதிக்கிறது. இது பெட்ரோல் மீதான கலால் வரி, டீலர் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் அதற்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.


ஆனால் மத்திய அரசால் விதிக்கப்படும் கலால் வரியானது, பெட்ரோலின் அடிப்படை விலை, டீலரின் லாபம் மற்றும் சரக்கு கட்டணம் ஆகியவற்றுக்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.


அரசு இதற்கு ஒரு சதவிகிதத்தை நிர்ணயிக்கவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட மொத்த தொகையை முடிவு செய்கிறது. ஜூலை 16 -ன் தரவுகளின்படி, தற்போது இது ரூ. 32.90 ஆகும்

மத்திய பிரதேச அரசு பெட்ரோலுக்கு அதிகபட்ச வாட் வரியை விதிப்பதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மக்களவையில் ஜூலை 26 அன்று கூறினார். இது லிட்டருக்கு 31.55 ரூபாயாகும். அதே நேரத்தில், ராஜஸ்தான் அரசு டீசல் மீது அதிகபட்ச வாட் வரியை அதாவது லிட்டருக்கு 21.82 ரூபாயை விதிக்கிறது. அதாவது, பெட்ரோலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநில அரசு வசூலிக்கும் தொகையானது, மத்திய அரசின் கலால்வரியைக்காட்டிலும் குறைவாகவே உள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகள் மிகக் குறைவான VAT வசூலிக்கிறது. அங்கு பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு ரூ. 4.82 ஆகவும், டீசல் மீது லிட்டருக்கு 4.74 ரூபாயாகவும் உள்ளது.


மாநில அரசுகள் சில நேரங்களில் VAT உடன் வேறு சில வரிகளையும் சேர்க்கின்றன. அவற்றிற்கு பசுமை வரி, நகர விகித வரி போன்ற பெயர்கள் சூட்டப்படுகின்றன.


மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் முக்கிய வருமான ஆதாரங்களாகும்.


உண்மை சரிபார்ப்பு: தற்போது முன்வைக்கப்படடுள்ள வாதம் தவறானது என்று எங்கள் உண்மை சரிபார்ப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசால் வசூலிக்கப்படும் கலால் வரி, எந்த ஒரு மாநிலமும் வசூலிக்கும் மதிப்பு கூட்டு வரியைவிட அதிகம். நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மத்திய அரசே இதை ஒப்புக்கொண்டுள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும்  தமிழக அரசு வரியில் மூன்று ரூபாய்களை நுகர்வோர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் நூறு ரூபாயைத் தொட்ட பெட்ரோல் விலை குறைந்து 97 ஆனது.

ஆனால் அண்ணாமலை பெட்ரோல் விலை உயர்வுக்கு தி.மு.க வை பொறுப்பாக்கி பாதியிலேயே மேடையை விட்டு  இறங்கும்போதே மோடி அரசு விலையை உயர்த்தி 101 ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டது.சமையல் எரிவாயு உருளை வியையும் 1000 ரூபாய்களைத் தொட வைத்துவிட்டது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?