ராம்குமார் கொலை?

 2016-ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஸ்வாதி என்ற பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.



இந்தக் கொலை நடந்த சில மணி நேரங்களில் நடிகரும் பாஜக பிரமுகருமான ஓய்.ஜி. மகேந்திரன் பிலால் மாலிக் என்ற முஸ்லீம் திவீரவாதி பிரமாணப் பெண்ணை கொன்று விட்டதாக எழுத இந்தியா முழுக்க இந்த கொலை வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால், இந்தக் கொலைக்கு காரணமானவர் என்று சொல்லி திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறை சொன்னது.


ஒரு தலைக்காதலே இந்த கொலைக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும் ராம்குமாருக்கும் ஸ்வாதிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும் ஸ்வாதி ராம்குமாரைப் பற்றி இழிவாகப் பேசியதால் இக்கொலை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், எது எப்படி இருந்தாலும் ஸ்வாதி கொல்லப்பட்டது தவறானது என்றே பெரும்பான்மையோர் கண்டித்தனர்.




இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வந்த நிலையில் மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. இப்போது அந்த விசாரணையில் ஆஜரான ராமகுமார் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் இருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அதில்,


 “நான் முன்பு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றிய போது ராம்குமார் என்ற நபரின் மூளை மற்றும் இதர உறுப்புகள் திசு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. நானும் இன்னொரு மருத்துவரும் பரிசோதனை செய்தோம்.


மூளைத் திசு பரிசோதனை செய்ததில் நல்ல நிலையில் இருந்தது. இதய திசுக்களை பரிசோதனை செய்ததில் அதுவும் நல்ல நிலையில் இருந்தது. நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேலுதடு, கீழுதடு, சிறுநீரகம் போன்றவற்றின் திசுக்களை பரிசோதனை செய்து அறிக்கையில் அவை நல்ல நிலையில் இருந்ததாக சான்று வழங்கி இருக்கிறோம்” என உடற்கூராய்வு மருத்துவர் கூறியுள்ளார்.


ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக காவல்துறையினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை அவரது மரணம் மின்சாரத்தில் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.



சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திருநெல்வேலி அருகே மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.


ஜூலை 1 ஆம் தேதி ராம்குமாரின் வீட்டை போலீஸார் சுற்றி வளைத்த போது ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சுவாதி மீது ராம்குமாருக்கு ஒரு தலை காதல் என சொல்லப்பட்டது. தனது காதலை ஏற்காததால் ராம்குமார் இந்த கொலையை நிகழ்த்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுவாதி மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பலர் தெரிவித்துக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில் புழல் சிறையில் இருந்த ராம்குமார் அதே ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி மின்சார வயரை கடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடுவதாக ராயப்பேட்டை மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து அனுமதித்தனர்.


ஆனால் ராம்குமார் மரணமடைந்து விட்டதாக ஆய்வு செய்த மருத்துவர் தெரிவித்தார். சுவாதியை ராம்குமார்தான் கொலை செய்தார் என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே தங்கள் மகன் ராம்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து வழக்கு


 தொடர்ந்தனர். போராட்டம் நடந்தது. செப்.22 முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஊடக வெளிச்சம் இன்றி போனது ராம்குமார் விவகாரம்

இந்த வழக்கு குறித்த விசாரணையை மாநில மனித உரிமை ஆணையம் கையிலெடுத்த நிலையில் பல்வேறு தகவல்களை மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளது வழக்கு யூடர்ன் அடிக்கும் நிலைக்கு போவதாக தெரிகிறது. ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஹிஸ்டோபாதாலஜி (Histopathology) துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.


மேலும் இந்த அறிக்கையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அப்போது பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் ஆண்டாள், வேணு ஆனந்த் ஆகியோர் கடந்த 2016, அக்டோபர் 7ஆம் தேதி ராம்குமாரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது மூளை, இதய திசுக்கள் , நுரையீரல்கள், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருந்ததாக சான்றளித்துள்ளனர்.


மின்சாரம் தாக்கினால் உடலில் இருக்கும் திசுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா என மனுதாரர் தரப்பில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள் பெரும்பாலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமார் உடலில் அப்படியேதும் ஏற்படவில்லை. 


அவரது திசுக்களை ஆராய்ந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமாரின் உடல் கொண்டு வரப்பட்டது. அந்த உடலுடன் சிறைத் துறை மருத்துவரும் வந்திருந்ததாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவ அதிகாரி டாக்டர் சையது அப்துல் காதர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து எந்த நகலையும் சிறை மருத்துவர் அளிக்கவில்லை. மேலும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்பட்ட நிலையில் ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.


மின்சாரம் தாக்கியதில்


நான் வழங்கிய பதிவேட்டிலும் மின்சாரம் தாக்கியதால் ராம்குமார் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக எங்கும் குறிப்பிடவில்லை. அதே வேளையில் அவரது உடலில் விறைப்புத் தன்மை இருந்தது. பொதுவாக ஒருவர் இறந்து 12 மணி நேரம் கழித்துதான் விறைப்புத் தன்மை ஏற்படும். அவரது உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல. இருந்த போதிலும் அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. உடலை நான் அவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்யவே இல்லை. அவருக்கு மின்சாரம் தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக தவறுதலாக நான் முதலில் அளித்த தகவலில் கூறிவிட்டேன் என மருத்துவர் சையது கான் தெரிவித்துள்ளார். ராம்குமார் வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


ராம்குமார் மரண வழக்கு எங்களை சரிவர விசாரிக்காமலே முடித்து வைக்கப்பட்டது என்பது வழக்கறிஞர் ராம்ராஜின் வாதம், ராம்குமார் மட்டுமே இக்கொலையை செய்துவிட்டு சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. சிறை மரணம், 12 மணி நேரம் கழித்து விரைப்புத்தன்மை வரும் என மருத்துவர் அளித்துள்ள வாக்குமூலம் அனைத்தும் பல்வேறு விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது, இது கண்டிப்பாக மீண்டும் விசாரிக்கப்பட்டால் பலர் சிக்குவார்கள் என்கிறார் ஓய்வு காவல் அதிகாரி ஒருவர். ராம்குமார் மரணம் வழக்கு தோண்டப்பட்டால் அது ராம்குமார் வழக்கோடு நிற்காது சுவாதி மரணத்தின் மர்மத்தையும் அது நீக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். நம்மால் அதை மறுக்க முடியாதுதான்.


கடந்த அதிமுக ஆட்சியில் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் ராம்குமார் எப்படி கொல்லப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-------------------------------------------------------------------

கொரோனாவிலும் பொருளாதார வளர்ச்சி

செய்த மோடி.

கொரோனா பெருந்தொற்று காரணமான ஊரடங்கு, பொருளாதார  மந்தம், விலைவாசி உயர்வு என கோடிக்கணக்கான இந்தியர்கள் பட்டினியின் பிடியில் தள்ளப்பட்டுள்ளார்கள். கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளார்கள். சிறு தொழில்கள் நசிந்து ஏராளமானோர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளார்கள்.


பள்ளிகளில் இருந்து இடை நிற்றல், வறுமை காரணமாக தற்கொலைகள், குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு, இளம் வயது திருமணங்கள் என  இந்தியாவில் வறுமை காரணமாக பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.


இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும், ரிச் இந்தியா நிறுவனம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 9 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.


இவர்கள் சொத்து மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவு கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளது.கொரோனா பரவுதலுக்குப் பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் அனைத்து செல்வந்தர்களுக்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாகக் கடும் இழப்பு ஏற்பட்டது. இந்தக் கால கட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் 28% வீழ்ந்து 3,30,000 கோடியாகக் குறைந்தது. அதன் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக், கூகுள், சில்வர் லேக் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டால் மதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த நான்கு மாதங்களில் ரிலையன்ஸ் அதிபரின் சொத்துகளின் மதிப்பு 85% உயர்ந்தது. அதாவது, இந்தக் காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது 2,77,000 கோடி அதிகரித்து, 6,58,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்திலும் ரிலையன்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு கணிசமாக உயர்ந்ததும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு சில நிறுவனப் பங்குகளின் மதிப்பு இந்தக் காலகட்டத்தில் இரு மடங்கு அதிகரித்ததும்கூட இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த லிஸ்ட்டின் மூலம் தெரிய வந்திருக்கும் மிக சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், லாக்டவுன் ஆரம்பத்திலிருந்து முகேஷ் அம்பானி மணிக்கு 90 கோடி ரூபாய் சம்பாதித்து வந்திருப்பது தெரியவந்துள்ளது






‘ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹருண் இந்தியா ரிச் லிஸ்ட் 2020’ பட்டியலில் 1,000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்து மதிப்பு கொண்டவர்கள் 828 பேர். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும். அதோடு இந்த 828 பேரில், 627 பேரின் சொத்துகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக 75 பேர்கள், இம்முறை பட்டியலிலேயே இடம் பெறவில்லை. முந்தைய பட்டியலில் இடம் பிடித்திருந்தவர்களில் 6 பேர் இறந்துவிட்டனர்.


பெண்களைப் பொறுத்தவரை 32,400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், கோத்ரேஜ் குழுமத்தைச் சேர்ந்த ஸ்மிதா வி கிருஷ்ணா முதலிடம் பெற்றுள்ளார்.


இவரை அடுத்து, பயோகான் நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் மஜும்தார் ஷா 31,600 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்த 828 பேர் பட்டியலில், 21 பேர் 40 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். இவர்களில், 17 பேர் சுயமாகச் சம்பாதித்து, முன்னுக்கு வந்தவர்கள். பட்டியலில் இடம்பெற்றுள்ள 828 பேரின் மொத்த சொத்து மதிப்பு 60.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 10.29 லட்சம் கோடி ரூபாய் அதிகம்.



கடந்த ஏழு ஆண்டுகளாக மோடியின் ஆட்சியில் அதானி,அம்பானி,  கிரண் மஜூம்தார் போன்ற தொழிலதிபர்கள் அரசின் அரவணைப்பில் ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள். இவர்களுக்கு பிற நிறுவனங்கள் ஒடுக்கப்படுகின்றன.


இந்த கோடீஸ்வரர்கள் அனைவரும் மோடியின் சிறந்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


---------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?