"பன்டோரா"

 அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகப் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்டிருக்கிறது.


பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அந்தப் பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 


பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் சச்சின் சட்டவிரோதமாக முதலீடு செய்து நிறுவனம் ஒன்றினை தொடங்கியதாகவும், பின்னர் பனாமா ஆவணங்கள் வெளியான பிறகு மூன்று மாதம் கழித்து தனது நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் பண்டோரா ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.


14 சர்வதேச கார்ப்பரேட் பெரு நிறுவனங்களிலிருந்து கசிந்த சுமார் 1.90 கோடி கோப்புகளைக் கொண்டு 600-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களால் புலனாய்வு செய்யப்பட்டு, இந்த `பண்டோரா பேப்பர்ஸ்' வெளியிடப்பட்டிருக்கிறது.2016-ம் ஆண்டு 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் முக்கிய ஆவணங்கள் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த பனாமா பேப்பர்ஸ் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி மற்றும் டி.எல்.எஃப் நிறுவன தலைவர் கே.பி.சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பனாமா ஆவணங்களின் தொடர்ச்சியாகவே தற்போது வெளியாகியிருக்கும் பண்டோரா ஆவணங்களும் பார்க்கப்படுகிறது. வரி ஏய்ப்பைப் பிரதானமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இந்தப் பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


2016-ல் வெளியான பனாமா ஆவணங்களைப் புலனாய்வு செய்து வெளியிட்ட அதே பத்திரிகையாளர்கள் குழுவே இந்த பண்டோரா ஆவணங்களுக்கும் புலனாய்வுப் பணி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 117 நாடுகளிலிருந்து, 150-க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். நேற்றைய தினம் வெளியான இந்த பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களில் 330-க்கும் மேற்பட்டோர் இந்நாள் மற்றும் முன்னாள் அரசியல் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஆப்பிரிக்காவின் சீஷெல் தீவு, ஹாங்காங் மற்றும் மத்திய அமெரிக்காவின் பெலிஸ் உள்ளிட்ட கடல்சார் தீவுகளை தங்கள் புகலிடமாகப் பயன்படுத்தி கொண்டு சட்டவிரோதமாக முதலீடுகள் செய்து, வரிஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.



-------------------------------------------------------------

தங்கத்தை விட மதிப்புள்ள மரம் அகர்.

தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை நவரத்தினங்கள் தான் உலகின் விலைமதிப்பு மிக்கது என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், அதை இன்றோடு மறந்துவிடுங்கள். இந்த நகைகளை காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் அகர் மரம். அக்குலேரியா என்ற மரத்தின் ஒருவகைதான் இந்த அகர் மரம்.

இந்த மரத்துக்கு வேறுசில பெயர்களும் உண்டு. அவை கற்றாழை மரம் அல்லது கழுகு மரம். ஜப்பானில் கியாரா அல்லது கயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரமே உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும்.

-----------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?