கூகுளாண்டவர்


உங்களுடைய ஒட்டு மொத்த ஜாதகமும் கூகுளில் உள்ளது. இதிலிருந்து தப்பிக்க நீங்கள் சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஆனால், இதன் மூலம் நீங்கள் உங்களுக்கென உள்ள கஸ்டமைசேஷன் (customization) வசதியை இழப்பீர்கள். இணையத்தில் உங்களுடைய கூகுள் அக்கவுண்டுக்கு செல்லுங்கள். இதில் மொத்தம் 6 பிரிவுகள் உள்ளன. இதில் முதல் இரண்டு பிரிவுகள் வெப் மற்றும் ஆப் செயல்பாடு தொடர்பானது. Chrome-ல் நுழையும் போது, நீங்கள் தேடும் அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதில் மேலே சென்று பார்த்தல் தேதி வாரியாக உங்கள் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதில் நீங்கள் பில்டர் ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்போது delete பொத்தானை க்ளிக் செய்து அழிக்கலாம்.

மேலும் அப்பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகள் (symbol) க்ளிக் செய்து, தனிப்பட்ட தரவுகளையும் நீக்கலாம். சமீபத்தில் கூகுள் வெளியிட்ட அறிக்கையின் படி, ‘மூன்று மாதங்களுக்கு மேல் அல்லது 18 மாதங்களுக்கு மேல் உள்ள தகவல்களை கூகுள் தானாகவே நீக்கி விடும் என கூறப்படுகிறது.

கூகுள் அசிஸ்டன்ட்’ பற்றி..... 

கூகுள் அசிஸ்டன்ட் வசதி உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்றால், கீழ்கண்ட முறைகளை செய்யும் போது அதன் செயல்பாட்டை நிறுத்தலாம்.உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் அல்லது டேப்லெட்டில் ‘ஹே கூகுள்,ஓபன் அசிஸ்டன்ட் செட்டிங்ஸ்’ என்று சொல்லவும். அதில் ஆன் மற்றும் ஆஃப் வசதி இடப்பெற்றிருக்கும். அதில் ஆஃப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அல்லது செட்டிங்ஸ் பகுதியில் சென்று, “கூகுள் அசிஸ்டன்ட்” என்ற பக்கத்தை தேடவும்.

அதில் “அசிஸ்டன்ட் டிவைஸ்” என்பதை க்ளிக் செய்து,ஒரு பாப் - அப் தோன்றும். அதில் ‘ஆஃப்’என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான் இனி நீங்கள் கூகுளால் கண்காணிப்பட மாட்டீர்கள். உங்களது பற்றிய தகவல்களும் இனி கூகுளுக்கு கிடைக்கவும் கிடைக்காது.



https://youtu.be/ewVnRBp1BGEhttps://youtu.be/ewVnRBp1BGE

----------------------------------------------------------------------------


பழைய எந்திரங்களை வாங்கி, அதனை உடைத்து விற்பனை செய்யும் ஒருவர், பழைய ஏ.டி.எம் ஒன்றை 300 டாலருக்கு வாங்கியுள்ளார். அதனை உடைக்கும்போது பழைய ஏ.டி.எம்மில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இதனை அவரால் நம்பவே  ரூபாயில் 22 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருள் மூலம் ஒன்றை லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்றால், அதனை அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?. இந்த வீடியோ கேப்டன் சாஹில் என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பழைய ஏ.டி.எம்மை கொண்டு வந்து உடைக்க தொடங்குகின்றனர். அந்த ஏ.டி.எம்மின் சாவி தொலைந்துவிட்டதால், அதனை பழைய உரிமையாளர் விறபனை செய்துள்ளார்.


பணம் ஏதும் இருக்காது என்ற எண்ணத்தில் அவர் விற்பனை செய்துள்ளார். இதனை வாங்கிய அவர்கள் வழக்கம்போல் சுத்தி, உளி ஆகியவற்றைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கின்றனர். அப்போது, ஏ.டி.எம் மெஷினுக்குள் பணம் இருப்பதைக் கண்ட அவர்களால், ஆச்சர்யத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், கவனமாக மெஷினை உடைக்கின்றனர்.
சுமார் 20.16 நிமிடங்கள் அந்த வீடியோ இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அனைத்து கருவிகளையும் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கின்றனர். முழுமையாக உடைத்தபிறகு அதில் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்க்கும்போது, அதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம். ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்ற அவர்கள், அந்தப் பணத்தை மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?