வியாழன், 18 நவம்பர், 2021

நீதிக்கு தலை வணங்கு,

 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து  சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கொலீஜியம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தலைமை நீதிபதியை மாற்றியதற்கு சென்னை  வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இது இந்தியா முழுக்க கவனிக்கப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி ஏன் மாற்றப்பட்டார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேற்குவங்க மாநிலத்தின் கொல்கொத்தா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி முக்கிய வழக்குகளில் பாஜகவை பாதிக்கும் வகையில் தீர்ப்புகளை வழங்கியதால் மோடி-அமித்ஷா தலையீட்டால் கொல்கொத்தாவில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். 

ஆனால், இங்கு வந்த பின்னரும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட சஞ்சிப் பானர்ஜி, கொரோனா காலத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான ஆக்சிஜன்கள் வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், நீலகிரியில் டி23 புலியை உயிருடன் பிடிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நீட் தேர்வு தொடர்பான உத்தரவு ஒன்றிய அரசில் உள்ள பாஜகவினரை அதிருப்தியடையச் செய்ய மீண்டும் அவரை மேகாலயாவுக்கு மாற்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

 ஏற்கனவே தாஹில் ரமானி என்ற நீதிபதியை இதே போன்று மாற்ற முயல அவரோ பதவியை ராஜிநாமா செய்து விட்டுச் சென்றார்.அவரை மாற்றும் உத்தரவில் இருந்து கொலிஜீயம் பின்வாங்காத நிலையில் இன்று பிரிவு உபசார விழாவை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக கொல்கொத்தாவுக்கு பயணம் ஆனார். பின்னர் அவர் சென்னை வழக்கறிஞர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

“சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து நீடிக்க முடியாததற்காவும் மன்னியுங்கள். என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன்.

என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல. நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள்.

நேரில் சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள். ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறீர்கள் முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை. சொந்த மாநிலம் என தமிழகத்தை 11 மாதமாக சொல்லி கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன். 

ஐகோர்ட்டில் இருந்து விடைபெற்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.