சாலையோரம் விளையாண்டால் சிறை.

இணையத்தில் பலியானால் வேடிக்கை.

சூதாட்டம், லாட்டரி போன்றவை சட்டப்பூர்வ மாக தடை செய்யப்பட்டிருந்தபோதும், ஆன்லைன் என்ற பெயரில் சூதாட்டம் அமோகமாக அரங்கேறி  வருகிறது. 

இந்த சூதாட்டச்சுழலில் சிக்கி பணத்தை இழந்து கடனாளி ஆகுபவர்களின் எண்ணிக் கையும், தற்கொலை செய்து கொள்வோரின் எண் ணிக்கையும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம் பொம்மனூரைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட் டத்தில் ஈடுபட்டு கடனாளியானதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 



 கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் இரண்டு தற் கொலைகளும், ஒரு கொள்ளையும் நடந்துள்ளது. 

சென்னை பெருங்குடி பகுதியைச்சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆன்லைன் சூதாட் டத்தால் பணத்தை இழந்ததோடு நண்பர்களிடம் கடன் வாங்கிச் சூதாடியுள்ளார்.

 கடன் சுமை  காரணமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை  கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் பறக்கும் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளையில் அங்கு பணியாற்றிய டீக்காரம் என்பவர் மனைவியோடு சேர்ந்து கொள்ளை நடந்ததாக நாடகமாடி யுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

ஆன்லைன் சூதாட்டத்தில் டீக்காரம் பணத்தை இழந்ததுதான் இதற்குக் காரணம் என்று புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டமெனும் ஆக்டோபசின் கரங்களில் சிக்கி தற்கொலை செய்து கொள்ப வர்களில் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் உண்டு.

 இளைஞர்கள்தான் இதற்கு அதிகமாக பலியாகி வருகின்றனர். 

இணையதளங்களில் ஆன்லைன் ரம்மி குறித்து இடைவிடாத விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. வேறு தேடலுக்காக இணையத்துக்குள் நுழைபவர்களை ஈர்க்கக் கூடிய விளம்பரங்களால் உள்ளிழுத்து பல குடும் பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது ஆன்லைன் ரம்மி.



 பிரபல தொலைக்காட்சிகளிலும் கூட இந்த சூதாட்டம் குறித்து வெளிப்படையான விளம்பரங்கள் வெளியாகின்றன. 

இந்த நிறுவனங்களால் மோசடி செய்யப்படு வோர்கள் இந்தியாவில் வழக்கு தொடுக்க முடியாத நிலை உள்ளது. வெளிநாட்டு நீதிமன்றங்களில் தான் வழக்கு தொடர முடியும்.

 சில நாடுகள் இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்துள்ளன. சில நாடுகள் வரைமுறைப்படுத்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் எந்த வரைமுறையும் இல்லை.


ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இணையத்தில் கருத்துரிமையை பறிக்க காட்டும் அக்கறையில் ஒரு பங்கைக்கூட இத்தகைய மோசடியை தடுப்பதில் காட்டுவது இல்லை. 

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மனித குல முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

 மாறாக, திட்டமிட்டு கொள்ளையடிப்பது தடுக்கப் பட வேண்டும். ஆன்லைன் ரம்மி என்ற நவீன சூதாட்டத்தை முற்றாக தடை செய்ய ஒன்றிய அரசு முன் வரவேண்டும்.

---------------------------------------------------------------------+

பல்லியால் உண்டான பலி

https://youtu.be/N9z7kcjkHVI


-------------------------------------------------------------------------+

கொள்ளை லாபம் 

குவிக்க அல்ல

பொதுத்துறை.......

பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பது என்பது லாபநட்ட கணக்கு பார்க்கும் வியாபார மல்ல. அது தேசத்தைப் பாதுகாக்கும் தேசபக்த கடமை என்று கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முன்னெடுத்து வருகிறது. 

கேரள மாநிலம் காசர்கோடு பெல் - இஎம்எல் நிறுவனம் மற்றும் கோட்டயம் வெல்லூரில் உள்ள இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தையும் நஷ்டம் எனக் கூறி மோடி அரசு விற்றுத் திங்க முடிவு செய்தது.


 அதே நேரம்  கேரள அரசு அதனை ஏற்று நடத்த தயார் என அறிவித்தது. சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும்  மோடி அரசு அதனை ஒப்படைக்க மறுத்து ஏலத்திற்கு விட்டது. ஏலத்தில் பங்கேற்ற கேரள இடதுசாரி அரசு இரண்டு நிறுவனங்களையும் கைப்பற்றி தற்போது பொதுத்துறை நிறுவனமாக மாற்றியிருக்கிறது. 

ஒரு மாநில அரசால், நஷ்டமாகும் பொதுத் துறை நிறுவனத்தை எடுத்து லாபத்தில் இயங்க வைக்க முடியுமெனில் ஒன்றிய அரசால் முடியா தா?  இங்கே பிரச்சனை அந்த நிறுவனமா, அல்லது நிர்வாகத் திறமையின்மையா,  அல்லது ஒன்றிய அரசு பின்பற்றும் கொள்கையா என்பதை மக்கள் ஆராய்ந்தறிய வேண்டும்.  மோடி அரசு வழக்கம் போல் தனது நிர்வாகத் தோல்வியையும், பொரு ளாதார தோல்வியையும் மூடி மறைக்க இதுவரை பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டம் எனக் கூறி வந்தது. ஆனால் தற்போது லாபத்தில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் கூறு கட்டி விற்க முனைந்திருக்கிறது. 

அதற்கு ஒன்றிய அரசு சொல்லும் காரணம் நாடு கஷ்டத்தில் இருக்கிறது. அதனால் பொதுத்துறைக ளைப் பணமாக்கப் போகிறோம் என்கிறது. அது உண்மையா என்றால் அதுவும் மிகப்பெரிய பித்த லாட்டமாகவே இருக்கிறது. உதாரணமாக சென்ட ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (செல் ) நிறுவனம் லாபத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனம் ஆகும். அதன் மதிப்பு  ரூ.957 கோடியிலிருந்து ரூ.1600 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மோடி அரசு நந்தல் பைனான்ஸ் அண்ட் லீசிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் நிறு வனத்திற்கு வெறும் ரூ.210 கோடிக்கு மட்டுமே விற்றிருக்கிறது. 

அந்த நிறுவனத்தின் 2020-21ஆம் நிதியாண்டின் லாபம் மட்டும் ரூ.136 கோடி ஆகும். அந்நிறுவ னத்தின் கையில் இருக்கும் ஆர்டர்களை மட்டும் நிறைவேற்றினால் ரூ.730 கோடி கிடைக்கும். இதில் எங்கே இருக்கிறது பணமாக்கல்? மொத்தத்தில் மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களைப் பிண மாக்கல் வேலையைத்தான்  செய்து வருகிறது. 

கேரள அரசு ஒன்றும் மிகவும் வசதி படைத்த அர சல்ல. மாறாக 2016 முதல் 2021 வரை இரண்டு மிகப் பெரிய இயற்கைச் சீற்றங்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்தது.


 அப்போது கூட ஒன்றிய அரசு போதிய உதவி செய்யவில்லை. அதையடுத்து கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றையும் எதிர்கொண்டு வரு கிறது.  நேர்த்தியான திட்டமிடல், மிக அரிதான வளங்களை முறையாகப் பகிர்ந்து அளிப்பது, எந்த ஒரு பிரிவினரும் வளர்ச்சிப் பாதையில் விடுபடா மல் பார்த்துக் கொள்வது ஆகிய மூன்றையும் முன் னெடுத்து இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. 

 கேரள இடதுசாரி அரசு.



---------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?