வெள்ளி, 14 ஜனவரி, 2022

பத்தாண்டுகள்.

 நன்றி!

14.01.2011 "சுரன்" வலைப்பூ ஆரம்பம்.

 இன்று 14.01.2021.

பத்தாண்டுகளை கடந்து வந்தது.

கண்டிப்பாக என்னைப் பொறுத்தவரை சாதனைதான்.

நான் " சுரன்" வலைப்பூ ஆரம்பித்த போது ஏற்கனவே ஆயிரக்கணக்கில் வலைப்பூக்கள்.


வலைப் பூக்களை வாசகர்களுக்கு அறிமுகப் படித்த பல தொகுப்புகள்.

இன்ட்லி,தமிழ்10, தமிழ்வெளி,திட்டம்,சங்கம் என பல.

தினம்தோறும் பல வலைப் பூக்கள் ஆரம்பிக்கப் பட்டன.

அன்று சுரன் உடன் ஆரம்பமான வலைப்பூக்கள் 90% முடிவை எட்டி விட்டன.அதற்கு முன்பிருந்தவைகளும் காணாமல் போனது.

எனவே இன்றுவரை தினமும் 300 பார்வையாளர்கள் "சுரன்" வலைப்பூவை நாடி பார்வையிடுவது சாதனைதானே.ஆனால் முன்பு பார்வையாளர்கள் 1200 ஐ தொட்டன.அது வலைப்பூக்களின் வசந்த காலம்.

பத்தாண்டுகளில்" சுரன்" பார்வையாளர்கள் எண்ணிக்கை18,27,201.

வலைப்பூக்கள் நடத்தியவர்கள் பலர் முகநூல்,டுவிட்டர்,வாட்ஸ் அப் என தடம் விலகி சென்று விட்டனர்.அதற்கு பார்வையாளர்கள் பலர் அங்கு முன்பே இடம் பெயர்ந்த்துதான் காரணம்.

இன்று வலைப்பூவை பார்க்க வருவார்கள் என்ற எண்ணம்தான் தொடர்ந்து " சுரன்" இயங்க காரணம்.

தொடர்ந்து பயணிப்போம் .

உங்கள் வருகையும் தொடரட்டும்.

வலைப்பூக்களுக்கு மீண்டும் வசந்தம் வரலாம்.

மாறுதல் ஒன்றுதானே மாறுதலே இல்லாதது.

நன்றி!

என்றும் அன்புடன்,

சீ.அ.சுகுமாரன்,