தேசீய அளவில் சமூக நீதி அமைப்பு.

 

சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை தொடங்கவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

AIBCF, SRA, PAGAAM, BAMCEF, We The People மற்றும் LEAD INDIA ஆகிய அமைப்புகள் இணைந்து “சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்” என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது.

undefined

இந்த கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில உணவு, நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆதிமுலப்பு சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. வில்சன், டெரிக் ஓ பிரையன், மனோஜ் குமார் ஜா, ஈ.டி. முகம்மது பஷீர், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் வீரேந்திர சிங் யாதவ், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, PAGAAM நிறுவனர் சர்தார் தஜிந்தர் சிங் ஜல்லி, BAMCEF நிறுவனர் பி.டி. போர்க்கர், LEAD அமைப்பின் தலைவர் (அமெரிக்கா) டாக்டர் ஹரி எப்பனபள்ளி, AIBF ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளர் நீதியரசர் வி. ஈஸ்வரய்யா ஆகியோர் கலந்து கொண்டு, மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி உரையாற்றினர்.

இதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய தலைமையுரையில், “எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று உலகப் பொருளாதார மேதை அமர்த்தியா சென் சொல்லியிருக்கிறார். அத்தகைய நீதியை உருவாக்கவே திராவிட இயக்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது
இரத்த பேதம் இல்லை - பால் பேதம் இல்லை என்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம். சமூகநீதியும் - பெண்ணுரிமையும்தான் தலையாய இலட்சியம். இந்த மகத்தான கொள்கையைத் தமிழத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் தொடங்க இருக்கிறோம்.
சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். சமூக நீதி குறித்து அக்கறை கொண்ட அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள். சமூக நீதி சார்ந்த சட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற இந்த கூட்டமைப்பு விரைவான பரிந்துரைகளை வழங்கும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விகிதாச்சாரம் மாறுபடலாம். ஆனால் சமூக நீதி கொள்கை ஒன்றுதான். எல்லாருக்கும் எல்லாமும் என்பதே இந்தக் கூட்டமைப்பின் அடித்தளம். கூட்டாட்சி இலக்கை அடைய இந்த கூட்டமைப்பு செயல்படும். நாம் அடிக்கடி சந்தித்து சமூக நீதியை உயர்த்திப்பிடிப்போம்” என்று பேசினார்.

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ததற்காக ஏற்கெனவே வட இந்திய தலைவர்களும், சமூக நீதி செயற்பாட்டாளர்களும் ஸ்டாலினை பாராட்டினர். குறிப்பாக ஓபிசி பிரிவினரிடையே ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை தொடங்கவிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
---------------------------------------------------------------+--------
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 
பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
---------------------------------------------------------------------+-----------
அரசு விருதுகள் அறிவிப்பு.-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப்
பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு
பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது.

அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவித்துள்ளார். அவ்வகையில், 2021 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, நாஞ்சில் சம்பத்
அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது, பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமன் அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருது, சூர்யா சேவியர் அவர்களுக்கும்...
மதுக்கூர் ராமலிங்கம்
சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்கும், தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயர் அவர்களுக்கும், சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரன் அவர்களுக்கும், உமறுப்புலவர் விருது திரு நா. மம்மது அவர்களுக்கும், கி.ஆ.பெ. விருது முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், கம்பர் விருது திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும், ஜி.யு.போப் விருது திரு ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மறைமலையடிகள் விருது திரு.சுகி.சிவம் அவர்களுக்கும், இளங்கோவடிகள் விருது நெல்லைக் கண்ணன் அவர்களுக்கும்,
அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கும் வழங்கிட ஆணையிடப்படுகிறது.

இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்ச் ரூபாயாக உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன
வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
--------------------------------------------------------------+-------------
ரெயில் துறை வேலையும்
பீகார் வன்முறையும்

ரயில்வே வாரியமானது, ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள நிலைய மேலாளர், ஜூனியர் கிளார்க், ரயில் உதவியாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்பம் சாராத 35,000 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பின்னர் இந்த தேர்வு 2020 மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக அந்த தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

35,000 பணியிடங்களுக்காக 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்ததால் 2020 ஏப்ரல் - ஜூஆன்லைன்லை மாத காலகட்டத்தில் அந்த தேர்வை  வாயிலாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி CBT-1 எனும் அத்தேர்வு 133 ஷிப்டுகளாக 68 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 14 அன்று வெளியானது. தேர்வு முறையில் பிரச்னைகள் இருப்பதாக தேர்வு எழுதிய தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்திலும் தங்களின் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.


இந்நிலையில் பீகார் மாநிலம் கயா ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேர்வர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். கயா ரயில் நிலையத்தினுள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் மீது கல்லெறிந்தனர். இதில் ஒரு ரயிலுக்கு (Shramjeevi Express) தீ வைக்கப்பட்டது. தீ வைப்பு சம்வத்தில் சிக்கிய ரயில் தீக்கிரையானது. கயா ரயில் நிலையமும் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்வர்களை வன்முறைக்கு தூண்டியதாக பிரபல யூடியூபர் கான் சார் மற்றும் 400க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாட்னாவில் வன்முறையை தூண்டிவிட்டதாக போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் கான் சார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ராஜேந்திர நகர் ரயில் முனையத்தி ஆயிரக்கணக்கான தேர்வர்கள் கடந்த திங்களன்று ரயில்வேக்கு சொந்தமாக சொத்துக்களை அடித்து சேதப்படுத்தினர், மேலும் சுமார் 5 மணி நேரம் ரயில் சேவையும் இதனால் தடைபட்டது.

போராட்டம் நடத்திய மாணவர்கள் சிலரை கைது செய்து போலீசார் விசாரித்த நிலையில், கான் சார் தங்களை போராட ஊக்கப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். சாலைகளில் திரண்டு போராடினால் மட்டுமே ரயில்வே தேர்வு ரத்து செய்யப்படும் என கான் சார் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

தேர்வர்களின் வாக்குமூலம், வைரல் வீடியோக்கள் போன்றவற்றை ஆராய்ந்ததில் பயிற்சி மையத்தின் தலைவர்கள் பாட்னாவில் வன்முறையை தூண்டிவிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கான் சார், பயிற்சி மைய தலைவர்கள் என சுமார் 400 பேர் மீது தற்போது வழக்கு பதிவு ்செய்யப்பட்டுள்ளது.

யார் இந்த கான் சார்?

கான் சார் பாட்னாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர். 


இவர் ஜிஎஸ் ரிசர்ச் மையம் என்ற பிரபல பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். திறமையான பயிற்சிகளால் இவரிடம் பயிற்சி பெற்ற பலர் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற பிரபலமானார். 

இந்நிலையில் கான் சார் வன்முறையை தூண்டியதாக தகவல்கள் பரவிய நிலையில், அவர் மாணவர்களை போராட வேண்டாம் என கோரிக்கை விடுத்து புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------+----------------

https://youtu.be/TSamtLvLqj0




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?