பணக்காரக் கட்சி

ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு கழகம், அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது, அதில் நாட்டிலேயே பாஜகவின் சொத்து மதிப்பு தான் அதிகம் எனத் தெரியவந்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தாமாகவே அளித்த தகவல்களை கொண்டு ஆய்வு செய்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது அவ்வமைப்பு.

இதில் 2019-20 நிதியாண்டில், பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.4,847.78 கோடியாக முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சி ரூ.698.33 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்திலும், நாட்டின் பழமையான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், ரூ.588.16 கோடி சொத்துடன் 3வது இடத்திலும் இருக்கின்றன.

7 தேசிய கட்சிகள் மட்டுமல்லாமல் 44 மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 7 தேசிய கட்சிகளில் 2019-20 ஆம் ஆண்டுக்கான சொத்து மதிப்பு ரூ.6,988.57 கோடி என்ற அளவிலும், மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பு கூட்டாக ரூ.2,129.38 என்ற அளவிலும் உள்ளது.

பாஜக ஃபிக்சட் டெபாசிட்டாக ரூ.3,253.00 கோடி வைத்துள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி தான் அந்த வகையில் ரூ.618.86 கோடி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மாநிலக் கட்சிகளில், 2019-20 ஆம் நிதியாண்டில் உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சிதான் ரூ.563.47 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சி உள்ளது. அதன் சொத்து மதிப்பு ரூ.301.47 கோடி. மூன்றாவது இடத்தில் ரூ.267.61 கோடி சொத்து மதிப்புடன் அதிமுக உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே பணக்கார்ர்களுக்கு சேவை செய்யும் பா.ஜ.க,தான் பணக்காரக் கட்சி.


-------------------------------------------+----------------------------

பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்க 

ஓப்ந்தம் செய்த மோடி.


இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன.

இதற்கிடையே பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அந்தநாடுகள் அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்து விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. 

அக்கட்டுரையில், 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது. இது இந்திய அரசியல் வட்டாரங்களில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெகாசஸை பயன்படுத்தியதன் மூலம் மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது முதன்மை ஜனநாயக நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸை வாங்கியுள்ளது. அரசாங்க அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பாதுகாப்பு படைகள், நீதித்துறை என அனைவரும் இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்பால் குறிவைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தேசத்துரோகம். மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளது" என கூறியுள்ளார்.

-----------------------------------------------------------------------+

ஏழைத்தாய் மகன் ஆட்சியில்

எல்லோருமே ஏழை.

மத்தியில் ஆளும் பாஜ அரசு கார்பரேட்கள்,பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனை கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுப்பதாகவும், இந்த ஆட்சியில் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றன. 

இதை நிரூபிக்கும் வகையில், பொருளாதார ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் குறித்த மக்கள் ஆய்வு (பிரைஸ்) என்ற அமைப்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் ஆய்வு நடத்தியது.

இதில் 2.42 லட்சம் குடும்பங்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

 நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் உள்ள 120 நகரங்கள் மற்றும் 800 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில், 100 சதவீத மக்கள் ஏழைகள், கீழ்மட்ட நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம், உயர்மட்ட நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என (தலா 20 சதவீதம்) என 5 பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த ஆய்வு முடிவில், கடந்த 5 ஆண்டில் நாட்டில் உள்ள ஏழை மக்கள் தங்கள் வருமானத்தில் பாதியை இழந்துள்ளதாக கூறி உள்ளது.

அதாவது, 20 சதவீத ஏழை இந்தியக் குடும்பங்களின் ஆண்டு வருமானம் 2015-16ல் இருந்ததை விட அடுத்த 5 ஆண்டில் 2020-21ம் ஆண்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக 52.6 சதவீதம் குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இதே காலகட்டத்தில் 20 சதவீத பணக்காரர்களின் ஆண்டு வருமானம் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கீழ்மட்ட நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கத்தினர் ஆண்டு வருமானம் முறையே 32.4 சதவீதம், 8.9 சதவீதம் சரிந்துள்ளது.

 அதாவது நாட்டின் 60 சதவீத மக்கள் 5 ஆண்டுக்கு முன்பு ஈட்டிய வருமானத்தை விட தற்போது குறைவான வருமானம் ஈட்டுவதாகவும் அதே சமயம் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

https://youtu.be/OKPd4KOXK3A

---------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?