ஆதார்: முகவரி மாற்ற
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் என்பது மிகவும் கட்டாயமான தனிநபர் அடையாள ஆவணமாகும். வங்கி, நிலச் சொத்து மற்றும் அரசு அலுவலகம் தொடர்பான பணிகளுக்கு ஆதார் அட்டை அவசியமாகும்.
சில சமயங்களில் வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தால், அப்போது ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அச்சமயத்தில், முகவரியை மாற்ற ஆதார் மையத்திற்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டியதில்லை
கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி, வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
முதலில் UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in க்குச் செல்ல வேண்டும்
அடுத்து, ஹோம்பேஜ்ஜில் உள்ள ‘MY Aadhaar’ பகுதிக்குச் செல்லவும்
பின்னர் தோன்றும் திரையில், ‘Update Your Aadhaar’ என்ற பகுதியை காண்பீர்கள், இதில் நீங்கள் Update Demographics Data Online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, Proceed to Update Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவிட்டப்பிறகு, Send ஓடிபி கொடுக்க வேண்டும்.
உங்கள் மொபைலுக்கு வரும் 6 டிஜிட் எண்ணை, திரையில் கேட்கப்பட்டுள்ள இடத்தில் பதிவிட வேண்டும்.
தொடர்ந்து, நீங்கள் Update Demographics Data ஆப்ஷனை கிளிக் செய்து, தகவலை பதிவிட்டு பூர்த்தி செய்ய வேண்டும்
அனைத்து இடங்களிலும் கேட்கும் இடங்களை பூர்த்தி செய்துவிட்டு, Proceed என்பதைக் கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு, சரியான ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைச் சமர்ப்பிக்கவும். முகவரி மாற்றுவதற்கு, சரியான ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும். Preview ஆப்ஷன் மூலம் நீங்கள் மாற்றிய முகவரி சரியாக உள்ளதா என்பதை பார்க்கலாம்.
இறுதியாக சமர்ப்பித்த பிறகு, அப்டேட் ரெக்வெஸ்ட் நம்பர் (URN) கிடைக்கும். அதன் உதவியுடன் UIDAI இணையதளத்தில் அப்டேட் நிலையைச் சரிபார்க்கலாம்.
குறிப்பு: எத்தனை முறை வேண்டுமானாலும் . ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக்கொள்ளலாம.
ஒமிக்ரானோடு ஒழிந்து போய்விமா
கொரோனா அலைவரிசை.
https://youtube.com/shorts/2kFkRXqq3Dg?feature=share
--------------------------------------------------------------------
முதல்வரின் விழிப்புணர்வு.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. ஒமைக்ரானை தடுப்பதற்கான கேடயம் முகக்கவசம் மட்டும்தான் என்று கூறிவரும் முதலமைச்சர் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.
நோய் பரவலில் இருந்து நம்மைக்காக்கும் ஒரே ஆயுதம் முகக்கவசம் மட்டும்தான். எனவே மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணாசாலையில் வாகனத்தில் வந்துகொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீரென வாகனத்தை நிறுத்தி இறங்கி, சாலையில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என ஆய்வு செய்தார்.
கடைப் பகுதியில் நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை எனக் கேட்டு, முகக்கவசங்களை வழங்கி அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
மேலும், சிலருக்கு தானே முகக் கவசம் அணிவித்து, கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க முகக்கவசம் முக்கியமான கேடயம் என அறிவுறுத்தினார்.
-----------------------------------------------------------------
ஏர் இந்தியா விற்பனை ஊழல்.
-சுப்பிரமணியசாமி
ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இது பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறானது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாஜகவின் எம்.பி சுப்பிரமணிய சாமி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் ஜோதி சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதிட்டார். அப்போது, வருவாய் இழப்பை அரசால் ஈடுசெய்ய முடியாததால்தான் ஏர் இந்தியா தனியாருக்கு விற்கப்பட்டதாக கூறினார்.
மேலும், தனியாருக்கு ஏர் இந்தியாவை விற்பனை செய்தது அரசின் கொள்கை முடிவுப்படி எடுக்கப்பட்ட முடிவு என்றும் வாதிட்டார்.
இதனையடுத்து வாதிட்ட சுப்பிரமணியன் சாமி, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை திரும்பப் பெறுவதற்கான ஏல முறை தன்னிச்சையானது, ஊழல் நிறைந்ததாக உள்ளது.
அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் பொது நலனுக்கு எதிரானது.
டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக மோ(ச)டி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
டாடா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏலம் முழுமையாக முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டது.
மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிடும்.
இந்த தகவல்கள் பொதுவெளியில் உள்ளது. விமான நிறுவனத்தை நடத்துவது கடினமானது.
அரசு எஞ்சிய தொகையை தருவதாக உறுதி அளித்துள்ளது. ஆனாலும், பதட்டமாக உள்ளது. என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கு தீர்ப்புக்காக ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.