வியாழன், 24 பிப்ரவரி, 2022

3 வது உலகப் போர்?

 உக்ரைன் மீது போரை அறிவித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உலக நாடுகளை பெரும்பீதியில் ஆழ்த்தியுள்ளார்.

RussiaUkraine crisis: Tanks, soldiers fighter jets

3-வது உலகப்போரை  உலகம் தாங்காது என்ற ரீதியில் இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்கரீதியில் பேச்சு நடத்த உலகநாடுகள் அறிவுறுத்தின. 

ஆனால், யாரும் எதிர்பாராமல் இருக்கையில் போரை புதின் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் களமிறங்கினால், விளைவு மிக மோசமானதாகஇருக்கும் என்பதில் மறுப்பதற்கில்லை. 

RussiaUkraine crisis: Tanks, soldiers fighter jets

முன்னாள் சோவியத்யூனியன் நாட்டில் ஒருஅங்கமாகத்தான் உக்ரைன் இருந்தாலும், சோவியத் சிதறுண்டபின் தனிநாடாக உதயமானது. 

இருப்பினும், உக்ரைனை ரஷ்யா தனது ஆளுகைக்குள் உட்படுத்தவே முயற்சி செய்துவந்தது என்பது கடந்த கால வரலாற்றில் தெரியவருகிறது. 
படை பலம், வீரர்கள் எண்ணிக்கை, விமானங்கள், கப்பல், ஆயுதங்கள் என அனைத்திலும் ரஷ்யா வல்லரசு என்பதை நிரூபித்தாலும், உக்ரைனுடன் மோதும்போது சேதம் ஏற்படாமல் இருக்காது. 

ரஷ்யாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உக்ரைன் நாடும் ஆயுதங்கள், வீரர்கள், விமானங்களை வைத்துள்ளனர். 

உலக நாடுகளின் ராணுவ வல்லமையை மதிப்பிடும் 'குளோபல் ஃபயர் பவர்' எனும் இணையதளம் மற்றும் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடீஸ் ஆகிய நிறுவனங்களின் அறிக்கையில் இரு நாடுகளின் படை பலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RussiaUkraine crisis: Tanks, soldiers fighter jets

தரைப்படை

தரைப்படையைப் பொறுத்தவரை உக்ரைன் நாட்டைவிட 5மடங்கு வீரர்களை ரஷ்யா வைத்திருக்கிறது. உக்ரைனிடம் 2 லட்சம் ராணுவ வீரர்கள் இருந்தால், ரஷ்யாவிடம் ஏறக்குறைய 10 லட்சம் ராணுவ வீரர்கள்  பணியில் உள்ளனர். 

இரு நாடுகளிடமும் 2.50 லட்சம் ராணுவ வீரர்கள் ரிசர்வில் வைக்கப்பட்டுள்ளனர். உக்ரைனிடம் 50ஆயிரம்துணை ராணுவத்தினர் இருக்கையில் ரஷ்யாவிடம் 2.50 லட்சம் பேர் உள்ளனர்

RussiaUkraine crisis: Tanks, soldiers fighter jets

டாங்கிகள்

ரஷ்யாவிடம் 12,240 டாங்கிகள் உள்ளன,ஆனால், உக்ரைனிடம் 2,596 டாங்கிகள்தான் உள்ளன. கவசவாகங்கள் 30ஆயிரத்துக்கும் மேல் ரஷ்யாவிடம் இருக்கிறது. ஆனால் உக்ரைனிடம் 12,303 மட்டுமே இருக்கிறது.

 ரஷ்யாவிடம் எஸ்பிஏ ஆயுதம் 6,574 உள்ளன, உக்ரைனிடம் 7,571 மட்டும இருக்கிறது. டாவ்டு ஆர்டிகல் பொறுத்தவரை ரஷ்யாவிடம் 1,607ம் உக்ரைனியம் 2ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன.

RussiaUkraine crisis: Tanks, soldiers fighter jets

இது தவிர ரஷ்யாவிடம் கொத்துக் குண்டுகள், ராக்கெட்டுகள், நவீன ஏவுகனைகள், மோசமான சேதத்தை ஏற்படுத்தும் குண்டுகள், போர்விமானங்களை துரத்தி அழிக்கும் ஏவுகணைகள், வானில் இடைமறித்து அழிக்கும் ஏவுகணை என பல்வேறு நவீன மரண ஆயுதங்கள் உள்ளன.

விமானப்படை
விமானப்படையைப் பொறுத்தவரை ரஷ்யா ஜாம்பவான். 4,178 பல்வேறு வகையான நவீன போர்விமானங்களை ரஷ்யா வைத்துள்ளது. உக்ரைனிடம் 318 விமானங்கள் மட்டும் இருக்கின்றன.

772 ஜெட்போர் விமானங்கள் ரஷ்யாவிடம் இருக்கின்றன, உக்ரைனிடம் 69 மட்டுமேஇருக்கிறது. 544 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவிடம் உள்ளநிலையில் 34 மட்டுமே உக்ரைனிடம் இருக்கிறது

RussiaUkraine crisis: Tanks, soldiers fighter jets

கப்பற்படை
ரஷ்யாவிடம் 605 பல்வேறு விதமான போர்க்கப்பல்கள் உள்ளநிலையில் உக்ரைனிடம் 38 மட்டுமே உள்ளன. ரஷ்யாவிடம் ஒரு விமானம் தாங்கி கப்பலும், 15 போர் கப்பல்களும், 70 நீர்மூழ்கிகப்பல்களும் உள்ளன.

 உக்ரைனிடம் ஒரு போர் கப்பல் மட்டுமே இருக்கிறது. சிறிய ரக போர்க்கப்பல்கள் ரஷ்யாவிடம் 11 இருக்கிறது, உக்ரைனிடம் 86 உள்ளன.

இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா  ஆயுதங்களையும்,தனது படைவீரர்களை லட்சக்கணக்கிலும் அனுப்பிக்கொண்டுள்ளது.

--------------------------------------------------------------------------


"நேட்டோ" ஒப்பந்தம்?

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின.

இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.

ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது.

வார்சா ஒப்பந்தத்தின்படி இணைந்த நேச நாடுகளில் பல 1991இல் சோவித் யூனியன் பிளவுபட்ட பிறகு ஒப்பந்தத்தில் இருந்து விலகி நேட்டோவில் உறுப்பினர்களாயின. இப்போது நேட்டோ அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் யுக்ரேன்.

அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு கட்டத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர யுக்ரேன் அனுமதிக்கப்படலாம் என கருதலாம்.

ஆனால், அப்படியொன்று நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.

எனினும், நேட்டோவுடன் யுக்ரேன் நட்பு பாராட்டுவதற்கு தடை விதிக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மறுத்து வருகின்றன. தமது பாதுகாப்பு கூட்டாளிகளை சுயமாக தேர்வு செய்யும் சுதந்திரம் இறையாண்மை மிக்க நாட்டுக்கு இருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் கூறி வருகின்றன.

மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டணியில் இணையும் தமது இலக்கில் 'வளைந்து கொடுத்துப் போகவே' யுக்ரேன் விரும்புவதாக பிரிட்டனுக்கான யுக்ரேனிய தூதர் வாடிம் ப்ரிஸ்டெய்க் சமீபத்தில் கூறினார்.

ஆனால், அவரது கருத்துடன் முரண்பட்ட யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் செய்தித்தொடர்பாளர், யுக்ரேனிய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் தமது ஆர்வத்தில் தங்கள் நாடு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

யுக்ரேனில் ரஷ்யாவுடன் நெருங்கிய சமூக மற்றும் கலசாார தொடர்புகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இனவாத ரஷ்ய மக்கள்தொகை உள்ளது. கேந்திர ரீதியாக இந்த வாய்ப்பை அந்நாட்டுக்குள் நுழையும் பின்வாசல் வழியாகப் பார்க்கிறது. யுக்ரேனியர்களும், ரஷ்யர்களும் ஒரே மக்கள் என்று எழுதுகிறார் விளாதிமிர் புதின்.

ரஷ்யா நேட்டோ

மேற்கத்திய சக்திகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு நேட்டோ அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புதின் கூறுகிறார். மேலும், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ தனது ராணுவ செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்று 1990இல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறி விட்டதாக அதிபர் புதின் நீண்ட காலமாக வாதிட்டார்.

ஆனால், ரஷ்யாவின் கூற்றுகளை நிராகரிக்கும் நேட்டோ அமைப்பு, ரஷ்யாவுடனான எல்லையை பகிரும் தமது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை வெகு குறைவு என்றும் அவற்றுடனான தமது கூட்டணி தற்காப்பு அடிப்படையிலானது என்றும் தெரிவித்துள்ளது.

map

2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யுக்ரேனியர்கள் தங்கள் 'ரஷ்ய ஆதரவு' அதிபரை பதவியில் இருந்து அகற்றியபோது, யுக்ரேனின் தெற்கு கிரைமிய தீபகற்பத்தை தன்னுடன் ரஷ்யா இணைத்துக் கொண்டது. கிழக்கு யுக்ரேனின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய தமது ஆதரவு பிரிவினைவாதிகளையும் ரஷ்யா ஆதரித்தது.

அந்த விவகாரத்தில் நேட்டோ தலையிடவில்லை. ஆனால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோ அதன் படைகளை முதல் முறையாக நிலைநிறுத்தி எதிர்வினையாற்றியது. இந்த படைகள் நேட்டோவின் பிராந்தியத்தை ரஷ்யா ஆக்கிரமிக்க முனைந்தால், அந்த நிலைமையை செயலிழக்கச் செய்யும் வகையில் இந்த நேசப் படைகளின் தன்மை வடிவமைக்கப்பட்டுள்ளன.

நேட்டோ ரஷ்யா

பட மூலாதாரம்

படக்குறிப்பு,


பன்னாட்டு போர்த்தளவாட துருப்புகள் அடங்கிய நான்கு படையணிகளை எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா, போலாந்து ஆகியவற்றில் நேட்டோ கொண்டிருக்கிறது.

உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானம் ஊடுருவினால் அதை தடுக்கும் வகையில் வான் கண்காணிப்பையும் பால்டிக் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவுபடுத்தியுள்ளது.

இந்த படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.

நேட்டோவின் கிழக்கு எல்லைகளை வலுப்படுத்த அமெரிக்கா கிட்டத்தட்ட 3,000 கூடுதல் துருப்புக்களை போலந்து மற்றும் ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. மேலும் போரை எதிர்கொள்ளும் 8,500 துருப்புக்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. எனினும், யுக்ரேனுக்குள் அவற்றை அனுப்பும் திட்டத்தை இன்னும் நேட்டோ கொண்டிருக்கவில்லை.

இதேவேளை, யுக்ரேனுக்கு ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட 200 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை நேட்டோ அனுப்பியுள்ளது. இது தவிர, அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை யுக்ரேனுக்கு பிற நேட்டோ நாடுகள் அனுப்பவும் அனுமதித்துள்ளது.

யுக்ரேனுக்கு குறுகிய தூர இலக்கை தாக்கும் திறன் கொண்ட 2,000 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பிரிட்டன் வழங்கியுள்ளது. மேலும் போலந்திற்கு கூடுதலாக 350 துருப்புக்களையும், எஸ்டோனியாவுக்கு 900 கூடுதல் துருப்புக்களை அனுப்பி தமது பலத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது பிரிட்டன்.

Turkish fighter jets on patrol for Nato over Poland

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

கிழக்கு ஐரோப்பாவில் தனது ராணுவ பாதுகாப்பை நேட்டோ முடுக்கிவிட்டுள்ளது

இது தவிர, தெற்கு ஐரோப்பாவுக்கு பிரிட்டன் விமானப்படையின் மேலதிக போர் விமானங்களையும் கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள நேட்டோ போர்க்கப்பல்களுக்கு உதவியாக கடற்படை கண்காணிப்பு கப்பல்களையும் பிரிட்டன் அனுப்பியிருக்கிறது.

யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டால், ஆயத்த நிலையில் இருக்குமாறும் 1,000 துருப்புக்களுக்கு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.

டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தும், கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன.

ருமேனியாவில் நேட்டோ போர்க் குழுவை வழிநடத்துவதற்காக அங்கு தமது படைகளை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. 

----------------------------------------------------------------------------