சில குறிப்புகள்.
எச்சரிக்கை;
இன்று அரசியல் கிடையாது.
சமையல் செய்ய
சில குறிப்புகள்.
சமையலில் சேர்க்கக்கூடிய பொருட்களை கையாளும் முறை, சில பொருட்களை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் முறை போன்றவற்றை தெரிந்து வைத்திருந்தால் நமக்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும். அந்த வகையில் உங்களுக்கு தெரியாத இந்த 12 விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு 1:
எப்போதும் முட்டைகோஸை சமைக்கும் பொழுது நீங்கள் ஒரு சிறு துண்டு அளவிற்கு இஞ்சியை துருவி சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் அப்படியே இருக்கும்.
குறிப்பு 2:
முட்டை வேக வைக்கும் பொழுது விரிசல் விழாமல் இருக்க உங்களிடம் வினிகர் இருந்தால் கொஞ்சம் சேர்த்து பாருங்கள், ஒரு முட்டை கூட உடையாமல் வரும்.
குறிப்பு 3:
ஓவன் பயன்படுத்துபவர்கள் நீங்கள் அதில் கேக் பேக் செய்த பின்பு அப்படியே திறக்காமல் வைத்திருந்து உங்களுக்கு தேவையான நேரத்தில் திறந்தால் சரியாக இருக்கும்.
குறிப்பு 4:
இஞ்சி, பூண்டு சட்னி செய்பவர்கள் இஞ்சியை குறைவாகவும் பூண்டை அதிகமாகவும் சேர்த்து செய்து பாருங்கள், 2 க்கு 3 என்கிற விகிதத்தில் சேர்த்தால் அருமையான ருசி கிடைக்கும்.
குறிப்பு 5:
முட்டை பழையதா? புதியதா? என்று பார்ப்பதற்கு ஒரு சிறு யோசனை உண்டு! ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உப்புக் கரைந்த பின்பு முட்டையை போட்டால் முட்டை மூழ்க வேண்டும். மூழ்கினால் புதிய முட்டை என்றும், மிதந்தால் பழைய முட்டை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு 6:
ஒரு மாதம் ஆனாலும் பச்சை மிளகாய் அப்படியே கெட்டுப் போகாமல் இருக்க ஒரு பேப்பர் கவரில் சிறு ஓட்டை போட்டு பச்சை மிளகாய்களை வைத்து இரண்டாக மடித்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
குறிப்பு 7:
வெங்காயம் நறுக்கும் பொழுது கண்ணீர் வருகிறதா? ஐந்து நிமிடம் ஐஸ் வாட்டரில் தோலை உரிப்பதற்கு முன்னர் போட்டு எடுத்து பின்னர் தோலுரித்து நறுக்கி பாருங்கள், கண்ணில் கண்ணீர் வராது.
குறிப்பு 8:
கோதுமைக்கு மாவு அரைக்க கோதுமையுடன் கொஞ்சம் சோயாபீன்ஸ் ஐயும் சேர்த்து அரைத்து பாருங்கள் ஊட்டச்சத்துள்ள சப்பாத்திகள் நல்ல ருசியுடன் கிடைக்கும்.
குறிப்பு 9:
ஊறுகாய் செய்யும் பொழுது நீங்கள் மரத்தாலான கரண்டியைப் பயன்படுத்தி செய்து பாருங்கள், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
குறிப்பு 10:
தேங்காயை சரிபாதியாக உடைக்க தெரியவில்லையா? ஒருமுறை தேங்காயை தண்ணீரில் நன்றாக நனைத்து கொள்ளுங்கள். 2 நிமிடத்திற்கு பின்னர் உடைத்தால் சரியாக உடையும். முக் கண்களுக்கு நேராக ஒரு கோடு போல தெரியும். அந்தக் கோட்டில் வைத்து உடைத்தால் கச்சிதமாக உடையும்.
குறிப்பு 11:
பழங்கள், பழச்சாறுகள், சாலட் வகைகள் தயாரிக்கும் பொழுது சர்க்கரை சேர்ப்பதை விட தேன் சேர்த்து செய்து பாருங்கள் ரொம்பவே சுவை அட்டகாசமாக இருக்கும்.
குறிப்பு 12:
கொத்தமல்லி, கீரைத் தண்டுகள், வாழைத்தண்டுகள் போன்றவற்றை வடாமல் பாதுகாக்க அதனை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி வையுங்கள்.
---------------------------------------------------------------------------------
தூத்துக்குடி நிலத்தடிநீர் ஆபத்து.
-------------------------------------------------------------------------------
வாட்ஸ் அப் செயலிக்கு
மாற்றான செயலிகள்.
பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப், 2021 ஆரம்பத்தில் மேற்கொண்ட புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை காரணமாக, பலர் அன்-இன்ஸ்டால் செய்து வேறு தளங்களுக்கு மாற்றிக்கொண்டனர்.
இதையடுத்து, பயனர்களை தக்கவைத்திட பாலிசியில் சில மாற்றங்களை வாட்ஸ்அப் கொண்டு வந்தது.
இருப்பினும், பாலிசியில் முழுமையாக உடன்படாதவர்களும், வாட்ஸ்அப் அம்சங்கள் போதுமானதாக இல்லை என கருதுபவர்களும், அன்றாடப் பணிக்காக மிகவும் தனிப்பட்ட, பாதுகாப்பான செயலியை பயன்படுத்த விரும்புவோர்களாகவும் நீங்கள் இருந்தால், வாட்ஸ்அப் செயலிக்கான மாற்றாகப் பயன்படுத்த சில செயலிகளைப் பார்ப்போம்.
iMessage
நீங்களும், உங்கள் நண்பர்களும் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்துவோர் என்றால், இச்செயலி தேவைப்படாது. இது ஆப்பிளின் இன்-பில்ட் செயலி ஆகும்.
புதிய அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட UI இடைமுகம், மற்ற ஆப்பிள் சாதங்களுடன் டேட்டாவை இணைத்தல் போன்ற வசதிகள் உள்ளன. பயனர்கள் சில உணர்ச்சிகளை வெளிப்படுத்த மெமோஜிகளை உருவாக்கி பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட மெசேஜ்களுக்கு எஃபெக்ட், ரியாக்ஷன் சேர்ப்பது போன்றவை முயற்சிக்கலாம். வாட்ஸ்அப் போலவே, எல்லா உரையாடல்களும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை, எந்த வெளி தரப்பினரும் உங்கள் உரையாடலை படிக்க முடியாது.
Discord
டிஸ்கார்ட் கேமர்ஸூக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. தற்போது, அனைவரும் தினசரி பயன்பாட்டிற்கு உபயோகிக்கின்றனர். இதில், மெசேஜ் செய்வதை காட்டிலும் வாய்ல் கால் செய்யும் வசதி உள்ளது.
ஒரு மெசேஜில் 8எம்.பி வரையிலான டேட்டாவை அனுமதிக்கும் என்பதால், நீங்கள் GIFகள், எமோஜிகள் மற்றும் பைல்களை அனுப்பலாம்.
சந்தா கட்டணம் செலுத்தக்கூடிய டிஸ்கார்ட் நைட்ரோ செயலி மூலம், 100 எம்.பி வரையிலான பைல்களை அனுப்பிட முடியும். இதுதவிர, இதிலிருந்து Steam, Twitch, Spotify அல்லது YouTube கணக்குகளுடன் தடையின்றி அணுகலாம்.
டெலிகிராம்
டெலிகிராம் செயலியை திருட்டு தனமாக பகிரப்படும் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யவும், ஷேர் செய்யும் பயன்படுத்தகீறிர்கள் என்பதை நன்கு அறிவோம்.
ஆனால், சில அம்சங்களால் வாட்ஸ்அப்பை காட்டிலும் டெலிகிராம் முன்னிலையில் உள்ளது. டெலிகிராமில் ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை சேரக்கூடிய சூப்பர் குரூப் ஆரம்பிக்கலாம். அதே போல், நாம் அனுப்பும் மெசேஜ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாக டெலிட் செய்யும் வகையில் டைமர் செட் செய்ய முடியும்.
இதில் வீடியோ அழைப்பு அம்சம் இல்லை. ஆனால், டைம் பாஸூக்கு மினி கேம்ஸ்கள் உள்ளன. மூன்று அடுக்கு பாதுகாப்பு இருப்பதால், அதன் உரையாடல்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
கூகுள் சாட்
முன்பு Hangouts என அறியப்பட்ட Google Chat, உங்கள் இன்பாக்ஸுக்கு அருகில் இருப்பதால், பணி வேலைகளுக்கு சிறந்தது ஆகும். உங்களில் பெரும்பாலானோர் வோர்க் மெயில் ஐடியை மொபைலில் லாகின் செய்யாமல் இருப்பீர்கள்.
அவர்களுக்கு, இச்செயலி உதவியாக இருக்கும். அர்ஜன்ட் மெசேஜ்கள், தனிப்பட்ட நபர்களிடமிருந்து வரும் மெயில் என பிரித்து உங்களுக்கு வழங்கும் தன்மை கொண்டது. இச்செயலி WhatsApp போலவே செயல்படுகிறது. கூடுதலாக ஒரே கிளிக்கில் மிட்டிங்கில் நுழையும் வசதி உள்ளது.
Bridgefy
காடு போன்ற இடங்களுக்கு டிரக்கிங் செல்கையில் இன்டர்நெட் கிடைக்காமல் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை உண்டு. அப்போது, ஆப்லைனில் மெசேஜ் அனுப்பிட இச்செயலி உதவியாக இருக்கும்.
Bluetooth மூலம் வோர்க் செய்யும் இச்செயலி மூலம், 330 அடி தூரத்திற்குள் இருக்கும் நபருடன் உரையாடலாம். பிராட்காஸ்ட் முறை மூலம் பெரிய குழுக்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப உங்களை அனுமதிக்கிறது. தொடக்கப் பதிவிறக்கச் செயல்முறையைத் தாண்டி உங்களுக்கு இணைய இணைப்பு தேவையில்லை.
இது மிகவும் சிறப்பானது, ஆனால் வரம்பிற்குள் வேறு Bridgefy பயனர்கள் இல்லை என்றால் உபயோகம் இல்லாமல் போய்விடும்.
Signal
சிக்னல் செய்யும் விளம்பரத்தில், எலாம் மஸ்க் பெரிய பங்கு வகித்துள்ளார். இச்செயலியின் பயன்பாடு முழுவதுமாக ஓப்பன் சோர்ஸ் ஆகும்.
மெசேஜ்களை தானாக டெலிட் செய்யும் வசதி, ஹை பாதுகாப்பு அம்சம், ஸ்கிரீன் ஷாட்கள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் திரைப் பாதுகாப்பு அம்சம் போன்ற வசதிகள் உள்ளன. எந்தவித விளம்பரங்களும் தோன்றாது.
ஒரே நேரத்தில் 40 பேர் வரை, மிகவும் பாதுக்காப்பாக வீடியோ கால் செய்யலாம். ஆனால், மறுபுறம் WhatsApp, ஒரு நேரத்தில் 8 உறுப்பினர்களை மட்டுமே ஆதரிக்கிறது.
KIK
பழைய சாட்டிங் செயலியான கிக்கை உபயோகிக்க மொபைல் நம்பர் தேவையில்லை. மெயில் ஐடியை மட்டும் பதிவிட்டால் போதும்.
இச்செயலியில் வாட்ஸ்அப் போலவே, வாய்ஸ் கால், ஸ்டிக்கர்கள், மீடியா பகிர்வு, குரூப் சாட் போன்ற அம்சங்களை பெறுவீர்கள்.
நீங்கள் வினாடி வினாக்களில் பங்கேற்பது, செய்திகளை படிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். உங்கள் தனிப்பட்ட மொபைல் நம்பரை இன்டர்நெட்டில் பதிவிடுவதை விரும்பாதோர், இதனை முயற்சிக்கலாம்.
----------------------------------------------------------------------------
பழைய சாத இடியாப்பம்.
இடியாப்பம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
சில நேரங்கள் குழந்தைகள் திடீரென ஆப்பம் சாப்பிட வேண்டும் என்று கேட்பார்கள்.
அந்த சமயத்தில் வருந்த வேண்டாம்.
காலையில் வடித்த சாதம் இருந்தால் இரவு இடியாப்பம் சுட்டு கொடுத்துவிடுங்கள்.
தேவையான பொருட்கள் :
சாதம் - 1கப்
பச்சரிசி மாவு- 1 கப்
உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை :
சாதத்தை மிக்ஸியில் மைய மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
அரைத்த சாதத்தை வழித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
இப்போது அதில் அரிசி மாவை சேர்த்து நன்கு கைகளால் பிசைந்துகொள்ளுங்கள்.
மாவு சப்பாத்தி மாவு போன்ற பதத்தில் இருக்க வேண்டும்.
அதற்காக அதிக கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
மாவை நன்கு பிசைந்ததும் தேவையான அளவு எடுத்து இடியாப்ப அச்சில் போட்டுக்கொள்ளுங்கள்.
பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி எப்போதும்போல் பிழிந்துகொள்ளுங்கள்.
இதற்கு குருமா, தேங்காய்ப்பால் பொருத்தமான சைட்டிஷ்.