வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

செல்வாக்கு...யாருக்கு.?

தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றது. 

அதன் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டப்பட்டது.

 பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு மண்டலத்தை மொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது திமுக. 

இந்த தேர்தலில், மாநகராட்சி வார்டுகளில் அனைத்து கட்சிகளும் பெற்றிருக்கும் வாக்கு வங்கி என்ன? 

கடந்த தேர்தல் காலத்தில் இருந்து இது உயர்ந்திருக்கிறதா? 

21 மாநகராட்சியில் அமைந்திருக்கும் 1374 வார்டுகளில் 57 கட்சிகளைச் சேர்ந்த 11200 பேர் போட்டியிட்டுள்ளனர்.

 சுயேட்சையாக மொத்தம் 3038 வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். 

அதற்கு அடுத்த படியாக அதிமுக 1363 வேட்பாளர்களை களம் இறக்கியது. 

திராவிட முன்னேற்றக் கழகம் 1121 வார்டுகளில் தங்களின் வேட்பாளர்களை இறக்கியது. 

தனித்து நின்று களம் கண்ட பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி முறையே 1134 மற்றும் 1114 வார்டுகளில் வேட்பாளர்களை களம் இறக்கினார்கள். 

மக்கள் நீதி மய்யம் 671 இடங்களில் நின்றது.

பல்வேறு கட்சிகள் ஒற்ற இலக்க வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டனர். 

இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி, ஜனதா கட்சி, 

லோக் தந்த்ரிக் ஜனதா தளம்,

 மக்கள் முன்னேற்ற கட்சி, 

நாம் இந்தியா 

நாம் இந்தியர் கட்சி போன்ற கட்சிகள் தலா 1 வார்டுகளில் போட்டியிட்டனர்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தலைமை வகிக்கும் திமுக 1121 வார்டுகளில் தங்களின் வேட்பாளர்களை களம் இறக்கியது. அதில் 948 பேர் வெற்றி பெற்றனர்.

 இந்த தேர்தலில் மொத்தமாக 35,57,262 (43.59%) வாக்குகளைப் பெற்று முன்னணி பெறுகிறது .

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய தேசிய கட்சி காங்கிரஸ். இந்த தேர்தலில் 122 இடங்களில் போட்டியிட்டு 73 இடங்களில் வெற்றி பெற்றனர். மொத்தமாக 2,57,881 (3.16%) வாக்குகளை அவர்கள் பெற்றுள்ளனர்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ.எம் முறையே 30 மற்றும் 66 வார்டுகளில் போட்டியிட்டனர். சி.பி.ஐ. கட்சி 13 இடங்களில் 47053 வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்தது. 

சி.பி.ஐ.எம் கட்சி 69565 வாக்குகளைப் பெற்று 24 வார்டுகளில் வெற்றி பெற்றது. மொத்தமாக இவ்விரண்டு கட்சியும் முறையே இந்த தேர்தலில் 71,884 (0.88%) மற்றும் 1,06,990 (1.31%) வாக்குகளைப் பெற்றனர்.

மதிமுக 27 இடங்களில் போட்டியிட்டு 21 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமாக 73827 வாக்குகளைப் பெற்ற அவர்களின் வாக்கு வங்கி (0.90) ஆக உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 11 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றன. மொத்தமாக 22293 வாக்குகளை அவர்கள் பெற்றுள்ளனர். இவர்களின் வாக்கு சதவீதம் 0.27%.

164 அதிமுக வேட்பாளர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

 தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 3,83,971. மொத்தமாக 21 மாநகராட்சியிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 19,61,005. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பின்னடவை சந்தித்தது அதிமுக. இந்த தேர்தலில் அவர்களின் வாக்கு வங்கி 24.00% ஆக உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 879 வேட்பாளர்களை களம் இறக்கியது. ஆனால் அதில் 3 நபர்கள் மட்டுமே மொத்தமாக 7602 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர். அநேக இடங்களில் வெற்றியை நிலை நாட்ட இயலவில்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக 21 மாநகராட்சி வார்டுகளில் இக்கட்சிக்கு பதிவான வாக்குகள் 1,12,653 ஆகும். இவர்களின் வாக்கு விகிதம் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 1.38%.

பாஜகவை பின்னுக்கு தள்ளிய சுயேட்சைகள்

இந்த முறை பல்வேறு வார்டுகளில் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமாக 3038 வேட்பாளர்கள் தனித்து போட்டியிட்டு 73 பேர் அதில் தேர்வும் செய்யப்பட்டுள்ளனர். 

திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக, காங்கிரஸுக்கு இணையாக இவர்கள் வெற்றியை உறுதி செய்துள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 1,41,897 வாக்குகளைப் பெற ஒட்டுமொத்தமாக 3038 வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் 6,92,829. இந்த தேர்தலில் 8.48% வாக்குகளை இவர்கள் பெற்றுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து நின்று தேர்தலை சந்தித்தது பாஜக. 1134 இடங்களில் 22 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது இக்கட்சி. 

வெற்றி வேட்பாளர்கள் மொத்தமாக 36807 வாக்குகளை பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் அவர்கள் 5,85,826 வாக்குகளைப் (தபால் வாக்குகள் நீங்கலாக) பெற்று தங்களின் வாக்கு விகிதத்தை 7.17% ஆக வைத்துள்ளனர்.

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 671 இடங்களில் போட்டியிட்டு 1,48,334 (1.82%) வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி எந்த வார்டிலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் 1114 வார்டுகளில் போட்டியிட்ட அவர்கள் பெற்ற வாக்குகள் 205392 (2.51%) ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி 569 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. அவர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 115741 (1.41%) ஆகும்.

இவை கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் அடிப்படையிலான விழுக்காடுதான்.  .(℅)கட்சிகள் போட்டியிட்ட இடங்களின் ,பெற்ற வாக குகள் அடிப்படையில் என்றால் அதிகம்,குறைவு என மாற்றம் உண்டாகலாம்.

ஆனால் அதுதான் உண்மையான விழுக்காடாகும்(℅).

உதாரணமாக ம.நீ.மய்யம்671 இடங்களில் மட்டும் போட்டியிட்டு1,48,334 (1.82%) வாக்குகளையும்,நாம் தமிழர் கட்சி 1114 வார்டுகளில் போட்டியிட்டு  வாக்குகள் 205392 (2.51%) பெற்றுள்ளது.

மேலும் வட்ட அளவில் வேட்பாளர்களை கட்சிஅடிப்படையில் மட்டும் தேர்வு செய்வதில்லை.தனிப்பட்ட செல்வாக்கு,சாதி,மதம் போன்றவைகள்தான முன்னிற்கும்.

இதனால்தான் சுயேட்சைகள் அதிகம் நிற்பார்கள் கணிசமான அளவு வெற்றியும் பெறுவார்கள்.

-----------------------------------------------------------------------

நேட்டோ

NATO -  North Atlantic Treaty Organization


இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு முன்னாள் ரவுடி இங்கிலாந்தும் இந்நாள் ரவுடி அமெரிக்காவும் கனடா மற்றும் வேறு சில ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. இன்றைய தேதியில் 30 நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாக உள்ளன. 

ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட படை என்று கூறி கொண்டாலும் இது உலகளவில் நடைமுறைபடுத்திய பயங்கரவாதங்கள்தான் அதிகம். 

போஸ்னியா, செர்பியா, செகோஸ்லாவாக்கியா, ஜார்ஜியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், வியட்நாம், தென் கொரியா என்று இந்த படை நுழைந்த இடமெல்லாம் நாசமாகி போனது வரலாறு.


நன்றாக உற்று கவனித்தால் ஒன்று புரிய வாய்ப்புள்ளது. நேட்டோ படைகள் ஒரு நாட்டுக்குள் நுழைவது அந்த நாடுகளுக்கு நன்மை பயக்கவோ பாதுகாப்பு அளிக்கவோ இல்லை.

 மாறாக தனக்கு போட்டியாக வளரும் நாடுகளின் அண்டை நாடுகளை தேர்ந்தெடுத்தே அது நுழையும். அங்கு தன் ராணுவ தளவாடங்களை நிறுத்தி வளரும் நாடுகளை அச்சுறுத்துவதே அதன் இலக்கு. தென்கொரியா சிறந்த உதாரணம்.

 வட கொரியாவை காரணம் காட்டி  தென் கொரியாவிற்குள் டென்ட் போட்ட நேட்டோ படைகளுக்காக எத்தனை லட்சம் தென் கொரிய பெண்கள் விபச்சாரத்துக்குள் தள்ளப்பட்டார்கள் என்பது அந்த அரசாங்கத்திற்கே வெளிச்சம்.

 ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நேட்டோ ஏற்படுத்திய நாசகார வேலைகளை உலகம் வேடிக்கைதான் பார்த்தது.


தற்போது ரஷ்யாவை குறிவைத்து அதன் அண்டை நாடுகளில் தன் துருப்புகளை நிறுத்த துடிக்கிறது. எந்தவொரு நாடும் தன் எல்லைகளில் தன் எதிரி நாட்டு ராணுவத்தை நிறுத்த அனுமதிக்காது. 

 2008ஆம் ஆண்டில் இதே போன்று நேட்டோ படை அளித்த தைரியத்தில் ஜார்ஜியா ரஷ்யாவின் மீது படையெடுக்க சோவியத் யூனியன் பிளவால் துவண்டு போய் மீள் கட்டமைப்பு செய்து கொண்டிருந்த ரஷ்யா இனியும் பொறுக்க முடியாது என்று வீறு கொண்டு திருப்பி அடித்தது. 

ஜார்ஜியாவை  திருப்பி விரட்டியது மட்டுமல்லாமல் அதன் எல்லைக்குள் புகுந்து தாக்க ஜார்ஜியா பல துண்டுகளாக சிதறி போனது. வழக்கம் போல் நேட்டோ படை ஜார்ஜியாவை கை கழுவி விட்டது. 

இன்றும் அந்த நாட்டின் பல நிலபரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.


இந்த நிலையில் தான் உக்ரைனுக்குள் கால் வைக்க நேட்டோ திட்டம் தீட்டியது. ரஷ்யாவிற்கு உக்ரைன் அண்டைநாடு மட்டுமல்ல அடிக்கடி உரசல் ஏற்படும் நாடு. இந்தியா பாகிஸ்தான் போலதான். 

அங்கு நேட்டோ நுழைந்தால் ஜார்ஜியாவை போல் உக்ரைனும் தாக்க கூடும் என அஞ்சி உக்ரைனை நேட்டோவில் சேர வேண்டாம் என கூறியது. உக்ரைன் ஏற்கவில்லை. சரி நேட்டோ படைகள் ஒருபோதும் ரஷ்யா எல்லையை நெருங்காது என உடன்படிக்கையில் கையெழுத்திட அமெரிக்காவை கேட்டது அதற்கும் மசியவில்லை. 

பொறுத்து பார்த்த புதின் தாக்குதல் நடத்தப்படும் என பல நாட்களாக ராணுவத்தை வைத்து மிரட்டி பார்த்தார். போர் தொடங்கினால் உக்ரைனால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது தெரிந்து இருந்தும் உக்ரைன் அதிபர் அமெரிக்காவின் கைப்பாவையாகவே மாறி தன் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்.

 போர் தொடங்கியதும் வழக்கம் போல் நேட்டோ படைகள் பின்வாங்க உக்ரைன் தனி ஆளாக விழி பிதுங்கி நிற்கிறது. உக்ரைன் அதிபர் எப்படியும் தப்பித்து வேறு நாட்டுக்கு ஓடி விடுவார் ஆனால் உக்ரைன் மக்களின் கதி ? 


ரஷ்யா மீது அனைத்து குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடிந்தாலும் பெரும் குற்றவாளிகள் அமெரிக்காவும் உக்ரைன் அதிபரும்தான்.  

நேட்டோ ஒரு நாசகார பயங்கரவாத ராணுவம். அதை வளர விடுவது உலக நாடுகளின் அமைதிக்குதான் பாதிப்பு. நேட்டோ உலக நாடுகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ராணுவம் அல்ல. 

அது அமெரிக்காவிற்கு கட்டுபட மறுக்கும் நாடுகளை மிரட்ட உருவாக்கப்பட்ட அமைப்பு.

இதோ நேட்டோ பாதுகாப்பு தரும் என்று உக்ரைனை நம்ப வைத்து ரஷ்யாவுடன் மோத வைத்தார்கள்.ஆனால் இன்று " தனியாக நின்று தவிக்கிறது உக்ரைன்" என அதிபர் புலம்புகிறார்.

நேட்டோ படைகளை அனுப்ப மாட்டோம் ஆனால் உதவுவோம் என்று நேட்டோ படைத்தலைமை அறிவிக்கிறது.


இப்போதும் போரை நிறுத்த அமெரிக்கா, பிரிட்டன், உக்ரைன் அதிபரால் அமைதி ஒப்பந்தம் போட முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.

-----------------------------------------------------------------------

சுயபரிசோதனை 

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, அதிமுக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்திருந்தாலும், 66 சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் பலமான எதிா்க்கட்சியாக உள்ளது. திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் 2 சதவீத அளவிற்குள்தான்.

ஆனால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 21 மாநகராட்சிகளையும் இழந்து அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மக்களவைத் தோ்தலின் போதாவது ஓா் இடத்தில் மட்டும் அந்தக் கட்சி வெற்றிபெற்றது. இந்தத் தோ்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் அதிமுக இழந்திருப்பது அந்தக் கட்சியினரை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மாநகராட்சி வாா்டுகளில் 1,374 இடங்களில் 164 இடங்களை மட்டுமே அதிமுகவால் கைப்பற்ற முடிந்துள்ளது. 138 நகராட்சிகளில் 2 நகராட்சிகளை மட்டும் கைப்பற்றியுள்ளது. மொத்தம் 3,843 நகராட்சி வாா்டுகளில் 638 வாா்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. பேரூராட்சி வாா்டுகளில் 7621 இடங்களில் 1206 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக, பாஜக, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால், இந்தத் தோ்தலில் பாஜகவும், பாமகவும் கூட்டணியில் இடம்பெறாத நிலையில் தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் மட்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளது.

தொடா் தோல்வி: ஜெயலலிதா இருந்தபோது இரண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா் வெற்றி என்று சாதனை படைத்த கட்சியாக இருந்த அதிமுக, மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல், ஊரக உள்ளாட்சித் தோ்தல், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் என தொடா்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. கூட்டணியில் பாஜக இருப்பதால்தான் அதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை என்கிற கருத்தை அந்தக் கட்சியினா் தொடா்ந்து கூறி வந்தனா்.

ஆனால், இந்தத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு, குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியை ஈட்டியது. சென்னையில் கூட ஒரு வாா்டு கவுன்சிலா் இடத்தை பாஜக பெற்றுள்ளது. அப்படியானால், அதிமுகவின் தோல்விக்குக் காரணம் என்ன என்பது ஆராய வேண்டிய நிலைக்கு அந்தக் கட்சித் தள்ளப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சியாகப் பாா்க்கப்படும் அமமுக குறிப்பிடத்தக்க அளவில் இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அந்தக் கட்சியும் அதிமுகவில் இணைந்திருந்தால் தற்போதைய நிலையைவிட அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்க முடியும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

குழப்பமே காரணம்: அதிமுக தலைமையில் நடைபெறும் குழப்பமே அந்தக் கட்சி படுதோல்வி அடைவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில்கூட கொங்கு பகுதியில் அதிமுகவை அசைக்க முடியாத நிலை இருந்து வந்தது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களில் பெரும்பாலோனாா் அந்தப் பகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். தற்போது அந்தப் பகுதியில்கூட அதிமுகவால் பெரிய அளவில் வெற்றியை ஈட்ட முடியவில்லை. திமுக அங்கு செல்வாக்கை உயா்த்திக் கொண்டுள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்று வரும் போட்டியால் ஏற்படும் குழப்பங்கள் அதிமுகவின் அடிமட்டதொண்டா்கள்வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழப்பங்களுக்கு தீா்வு காண வேண்டிய முக்கிய கட்டத்தில் அதிமுக உள்ளது. அதற்கான சுயபரிசோதனையை அதிமுக உடனே மேற்கொண்டு ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசியல் ஆா்வலா்களின் கருத்தாகசெய்தார்

-----------------------------------------------------------------------------

கைதானார்NSEமோசடியாளர்.

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் குழும இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனின் நியமனமாகும். 

ஆனந்த் சுப்ரமணியன் பங்குச் சந்தை முறைகேடு தொடர்பான வழக்கில் வியாழன் இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

சந்தை கட்டுப்பாட்டாளர் செபி-யின் (இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்) அறிக்கையில் வெளிவந்துள்ள புதிய உண்மைகளின் அடிப்படையில் அதிகாரிகள் அவரை கைது செய்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்ய முடிவெடுக்கும் முன்னர், சென்னையில் பல நாட்களுக்கு ஏஜென்சி அவர்கரிடம் விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனந்த் சுப்ரமணியன் முதலில் 2013 இல் என்எஸ்இ-ல் தலைமை செயலுத்தி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 இல் அப்போதைய நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவால் குழு இயக்க அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 2016 ஆம் ஆண்டில், முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அவர் தேசிய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறினார்.

இமயமலையில் உள்ள "யோகி" ஒருவருடன் ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டதாகவும், அவர் அறிவுரையின் பேரில் பல முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது. 

செபியின் கூற்றுப்படி, ஆனந்த் சுப்ரமணியனின் நியமனம் மற்றும் செயல்திறன் மதிப்பீட்டிற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் அவரது சம்பளத்தில் "அடிக்கடி, தன்னிச்சையான மற்றும் விகிதாச்சாரமற்ற" உயர்வு ஆகியவை அந்த இமாலய சாமியாரின் அறிவுரையின் பேரில் எடுத்த சில குறிப்பிடத்தக்க முடிவுகளாகும். 

ஆனந்த் சுப்ரமணியனின் நியமனம் மற்றும் அவரது தகுதியற்ற பதவி உயர்வு ஆகியவற்றில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்ததாக சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் பலர் மீது செபி குற்றம் சாட்டியுள்ளது.

செபி, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ₹ 3 கோடியும், என்எஸ்இ, சுப்பிரமணியன், முன்னாள் என்எஸ்இ எம்டி மற்றும் சிஇஓ ரவி நரேன் ஆகியோருக்கு தலா ₹ 2 கோடியும் அபராதம் விதித்துள்ளது. 

சித்ரா ராமகிருஷ்ணாவின் சில முடிவுகள் பற்றிய விவாதம் இப்போது அதிகமாகி வருகிறது. ஆனந்த் சுப்ரமணியம் என்எஸ்இ-யில் பெரும் சம்பள உயர்வுடன் நியமிக்கப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு தன்னிச்சையாக பதவி உயர்வு கிடைத்ததும் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இமாலய யோகி கூறியதால், அவர், 

NSE இல் 2வது இடத்துக்கு உயர்த்தப்பட்டார். 

சுப்ரமணியத்திற்கு மூலதனச் சந்தையில் அனுபவம் இல்லை. இருப்பினும் அவருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வுகள் தொடர்ந்து கிடைத்தன. 

இரண்டே ஆண்டுகளில், அதாவது 2016ல் அவரது ஊதியத் தொகுப்பு ரூ.4.21 கோடியாக அதிகரித்தது. இதுமட்டுமின்றி, அவருக்கு குழு இயக்க அதிகாரி (GOO) பொறுப்பும் வழங்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் சுப்ரமணியம் பல வசதிகளைப் பெற்றிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையிலிருந்தும் சென்னையிலிருந்தும் பணிபுரியும் வசதி இதில் ஒன்று. 

அவருக்கு வசதியாக பிரத்யேக அமைப்புகளை அமைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனந்த் GOO ஆன பிறகும் இந்த வசதியை தொடர்ந்து பெற்றார்.

என்எஸ்இ-யின் தணிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகு, சுப்ரமணியத்தின் நியமனம் தவறான முறையில் செய்யப்பட்டது தெரிய வந்தது. 

விசாரணை அறிக்கையில் ஆய்வுக்குப் பிறகு, சுப்ரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் சுப்ரமணியம் ராஜினாமா செய்தார்.

---------------------------------------------------------------------------