செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

கசப்பான உண்மை.

 ஸ்டார்ட் அப் இந்தியா புரோகிராம் 2016ம் வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது கிட்டதட்ட 4 வருடம் 7 மாதங்கள் ஆகிவிட்டது.

அரசாங்கத்தின் படி “ஸ்டார்ட் அப்” என்றால் உங்கள் நிறுவனம் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாகவோ அல்லது 

வரையறுக்கப்பட்ட பொறுப்பு உள்ள கூட்டு நிறுவனமாகவோ (எல்.எல்.பி.,) அல்லது கூட்டு நிறுவனவமாகவோ இருக்க வேண்டும். இந்தியாவில் 10 வருடங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட  நிறுவனமாக இருக்க வேண்டும். நிறுவனத்தின் வருட விற்பனை 100 கோடியை தாண்டியிருக்கக்கூடாது. முக்கியமாக உற்பத்தி முறைகள் அல்லது செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, மேம்பாடு அல்லது முன்னேற்றம் என்ற நோக்கத்துடன் அந்த கம்பெனி செயல்பட வேண்டும். மேலும் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற நோக்கமும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட கண்டிஷன்களை உங்கள் கம்பெனி பூர்த்தி செய்கிறது என்றால் நீங்களும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர்தான்.  அப்புறம் என்ன, உங்கள் நிறுவனத்தை “ஸ்டார்ட் அப் இந்தியா” வின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியது தான்.

ஸ்டார்ட் அப் என்றாலே பெரும்பாலும் சாப்ட்வேர் கம்பெனியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறு. 48 வகையான தொழில் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு தொழில் பிரிவிலும் பல செக்டார்கள் இருக்கின்றன என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வதால் என்ன நன்மைகள்? 

• உங்கள் கம்பெனியின் பொருட்களுக்கு டிரேட் மார்க் பதிவு  (Registration) செய்தால் அந்த செலவுகளில் 50 சதவீதம் மானியமாக கிடைக்கும்.

• அரசாங்கம் ஜெம் (GeM) திட்டத்தின் கீழ் தாங்கள் வாங்கும் பொருட்களை  உங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலமும் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யும். இந்த ஜெம் திட்டத்தில் எப்படி இணைவது என்பதை  இந்த  லிங்க்  மூலம்  அறிந்து கொள்ளலாம். https://www.youtube.com/watch?v=yxKG84TaJJs

• ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் முதலீடு என்ற வகையில் இருக்கும் அரசாங்கத்தின் 10,000 கோடி ரூபாய் பண்டிலிருந்து முதலீடு (பண்டிங்) வாய்ப்புகள். இதை சிட்பி நிறுவனம் நிர்வகிக்கிறது. இதுவரை 323 கம்பெனிகள் இந்த பயனைப் பெற்றுள்ளன.

• வருமான வரியிலிருந்து 3 வருடங்களுக்கு 80 ஐஏசி பிரிவிலிருந்து விலக்கு. இதைப் பெறுவதற்கு முறையாக விண்ணப்பித்து  அதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.

அறிவுசார் சொத்துரிமை (IPR – Intellectual Property Rights) களை எளிமையாக்குவதன் மூலம் ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு  சுமையைக் குறைத்துள்ளது. IPR பதிவு கட்டணத்தில் 80 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.

• நீங்கள் உங்களின் தனிப்பட்ட சொத்துக்களை ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க விற்று அதை மூலதனமாக போட நினைத்தால், அந்த விற்று வந்த பணத்திற்கு மூலதன ஆதாய வரிகள் இல்லை. அதாவது கேபிடல் கெயின்ஸ் டாக்ஸ் இல்லை. 

• உங்களது நிறுவனத்தை ஸ்டார்ட் அப் இந்தியாவின் இணையதளத்தில் விளம்பரம் செய்யும் வாய்ப்பு. இது உங்களுக்கு பல ஆர்டர்களை பெற்று தரும்.

• தொழிலாளர் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை விதிகள் சம்பந்தமான சட்டங்களை நடைமுறைப்படுத்த அந்த ஸ்டார்ட் அப் கம்பெனி சுய சான்றிதழ் (செல்ப் சர்ட்டிபிகேஷன்) கொடுக்கலாம் என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால்  https://shramsuvidha.gov.in/startUp.action என்ற இணையதளத்தில் சென்று நீங்கள் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க  வேண்டும்.

ஸ்டார்ட் அப் இந்தியாவின் அரசாங்க இணையதளத்தின் முகவரி www.startupindia.gov.in. இதுவரை,55000 ஸ்டார்ட் அப்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன.  

ஜனவரி16 ஐ ஸ்டார்ட் அப் தினம் என ஒன்றிய முக்கிய அமைச்சர் மோடி அறிவித்துள்ளார்.

ஆனால் இப்போதுள்ள 55000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இந்த ஐந்தாண்டில் ஒன்று கூட லாபமாக ஒரு பைசா கூட காண்பிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

-----------------------------------------------------------------------

லதா மங்கேஷ்கர்.

இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 92 வயதில் இரு நாட்களுக்குமுன் காலமானார். 

இசைக்காகவே தனது வாழ்க்கையாக. அமைத்துக் கொண்ட லதா, திருமணம் செய்து கொள்ளாமலேயே இறுதி வரையில் வாழ்ந்து வந்தார்.

ஒரு பாடலுக்கு 25 ரூபாய் ஊதியத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய லதா, தற்போது பாடலுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வாங்கும் பிரபல பாடகியாக உயர்ந்தார். 

லதா மங்கேஷ்கரின் சொத்துக்களின் நிகர மதிப்பு சுமார் 370 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லதா மங்கேஷ்கர் சகோதரர் ஹிருதய்நாத்

மும்பையின் ஆடம்பரமான பகுதியில் பெடர் சாலையில் கட்டப்பட்ட 'பிரபுகுஞ்ச் பவன்'என்ற பங்களாவில் வசித்து வந்த லதா மங்கேஷ்கரின் வீடு, பல கோடி ரூபாய் மதிப்புடையது.

அழகான புடவைகள் மற்றும் நகைகள் அணிவதில் விருப்பம் கொண்ட லதா மங்கேஷ்கருக்கு கார்களும் மிகவும் பிடித்தமானது.

 பல விலையுயர்ந்த கார்களும் அவரின் சொத்தாக இருக்கின்றன.

கோடிக்கணக்கான விலைமதிப்புள்ள வீடு, விலைமதிப்பற்ற நகைகள் தவிர, அவரது பாடல்களின் ராயல்டி தொகை என இப்போது இருக்கும் சொத்துக்கள், மற்றும் ராயல்டி மூலம் கிடைக்கவிருக்கும் எதிர்கால வருமானம் என அனைத்துமே அவர் மணம் செய்து கொள்ளாத்தால் யாருக்கு கிடைக்கும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

அதன்படி லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதய்நாத் மங்கேஷ்கரே அவரின் சொத்துகளுக்கான வாரிசாக இருப்பார் என்று யூகிக்கப்படுகிறது. 

-----------------------------------------------------------------------------

கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியேற்றியவர்கள் 


.கர்நாடகாவில் காவல்துறை கிடையாதா.இவர்கள் செய்வது தேசத்துரோக வழக்கில் சேராதா?

இது தேசத்து ரோகம்,தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வராதா?தேசியக்கொடி அவமதிப்பில் ஏன் கைது செய்யவில்லை.

கர்நாடகாவில் இருப்பது காவல்துறையா? காவிக்குண்டர்கள் சங்கிப்படையா?

சமநிலையில் சர்க்கரை.

மனிதனின் உடலில், இரத்த சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவு சமநிலை தவறும்போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

 இதனை கட்டுப்படுத்த பல நோய் மருத்துவ முறைகள் இருந்தாலும், இயற்கையில் பல பொருட்களை வைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும். 

தற்போதைய காலகட்டத்தில் இந்த மருத்துவ முறைகளை பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நீரிழிவு நோய்யை கட்டுக்குள் கொண்டு வரும் உணவு பொருட்களில், பாகற்காய், வெந்தயம், நெல்லிக்காய், ஜாமூன் ஆகியவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் சிறந்த உணவுகள்.


பாகற்காய்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இது மிகவும் உதவியாக இருக்கும். இது நம் உடல் முழுவதும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிக்க வேண்டும். மேலும், தினசரி உணவில் பாகற்காயால் செய்யப்பட்ட ஒரு உணவை சேர்த்துக்கொள்ளுங்கள்.


இலவங்கப்பட்டை:
இது இன்சுலினைத் தூண்டி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் கொண்டது. 

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒன்றரை முதல் இரண்டு டீஸ்பூன் இலவங்கப்பட்டையை கலந்து தினமும் சாப்பிட வேண்டும். இதை பானங்கள், மிருதுவாக்கிகள் மற்றும் வேகவைத்த பொருட்களிலும் சேர்க்கலாம்


வெந்தயம்:
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அற்புதமான பொருள். 

இது குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. சிறந்த முடிவுகளுக்கு ஒருவர் தினமும் குறைந்தது இரண்டு தேக்கரண்டி வெந்தய விதைகளை பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.


நெல்லிக்காய்:
இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் கணையத்தின் நல்ல செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ஒரு கப் பாகற்காய் சாற்றில் ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு கலந்து சில மாதங்களுக்கு தினமும் குடிக்க வேண்டும்.


மா இலைகள்:
சர்க்கரை நோய்க்கு சிகிச்சையளிக்க இளஞ்சிவப்பு மா இலைகளைப் பயன்படுத்தலாம்,

 இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பத்து முதல் பதினைந்து இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதில் அந்தோசயினின்கள், எலாஜிக் அமிலம் மற்றும் பல்வேறு பண்புகள் இருப்பதால், இது இன்சுலினை சீராக்க உதவுகிறது. 

ஜாமுன் தாவரத்தின் ஒவ்வொரு பகுதியும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. விதைகளில் குறிப்பாக கிளைகோசைட் ஜாம்போலின் மற்றும் ஆல்கலாய்டு ஜாம்போசின் ஆகியவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி கட்டுப்படுத்துகின்றன.

------------------------------------------------------------------------------