கார்பரேட்களின் தேசபக்தி
தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பாகிஸ்தான் அலுவலகம்,'' “காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்களின்ம் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” என தெரிவித்தாரகள்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், '' ஹூண்டாய் மோட்டார் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தைக்கு உண்மையாக உள்ளது. எங்களது நிறுவனத்திற்கு இந்தியா தான் இரண்டாவது வீடு என்றே சொல்வோம். பொறுப்பற்ற முறையில் வெளியிட்ட கருத்துகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சங் யியூ யோங், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது சமூக வலைதளத்தில் வெளியான கருத்துகளுக்காக நாட்டு மக்களிடமும், இந்திய அரசிடமும் மன்னிப்பு கோரினார்.
பாகிஸ்தானின் ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஏற்று கொள்ள முடியாது. அறிக்கை வெளியான பின்னர், தென் கொரியாவில் உள்ள நமது தூதர், ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அறிக்கை கோரினார். சமூக வலைதள பக்கத்திலும் அந்த அறிக்கை நீக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் உள்ள அந்நாட்டு தூதருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, இந்திய அரசின் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த யம் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக கே.எப்.சி., மற்றும் பீசா ஹட் உள்ளன. யம் நிறுவனத்திடம் உரிமம் பெற்று பல்வேறு நாடுகளில் இவ்விரு நிறுவனங்களின் உணவு விடுதிகளும் செயல்படுகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானுக்கான விற்பனை உரிமம் பெற்றுள்ள நிறுவனம், தங்களது கே.எப்.சி., மற்றும் பீசா ஹட், சமூக ஊடக கணக்குகளில் காஷ்மீர் ஒருமைப்பாடு தினத்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் காஷ்மீர் பிரிவினையை தூண்டும் வகையில், காஷ்மீர் மண் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது. நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம் என கூறியிருந்தது.
இதனால் இந்தியாவில் கே.எப்.சி., மற்றும் பீசா ஹட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து இந்திய உரிமம் பெற்ற நிறுவனங்கள் மன்னிப்பு கேட்டுள்ளதுடன், 'நாட்டிற்கு வெளியே உள்ள கே.எப்.சி., மற்றும் பீசா ஹட் சமூக ஊடக கணக்குகளில் வெளியாகியிருக்கும் கருத்தை ஆதரிக்கவோ அல்லது உடன்படவோ இல்லை. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இந்தியாவை மதிக்கிறோம். அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையுடன் சேவை செய்வதற்கு உறுதியாக உள்ளோம்.' என கூறியுள்ளனர்.
இந்திய மக்களின் காசை சுரண்டி கொழிக்க வந்தவனிடம் இந்தியா மீது பற்றை எதிர்பார்க்கலாமா?
அதுவும் கார்பரேட்களிடம்.அவர்களுக்கு மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது ஒன்றுதானே குறி.
----------------------------------------------------------------------------------
PM Cares வசூல்?
பிரதமரின் PM Cares நிதியில், 10 ஆயிரத்து 990 கோடி ரூபாய் வசூலான நிலையில், அதில் 3 ஆயிரத்து 976 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக கடந்த 2020-ம் ஆண்டு PM Cares என்ற நிதியத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இதற்கு தொழிலதிபர்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் நன்கொடை அளித்ததன் மூலம் 2021-ம் ஆண்டு மார்ச் வரை 10 ஆயிரத்து 990 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
ஆனால் இதில் கடந்த ஆண்டு மார்ச் வரை 3 ஆயிரத்து 976 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது
அதுவும் காலாவதியான மாத்திரைகளும்,செயல்படாத வெண்டிலேட்டர்களும்தான் வாங்கி குவிக்கப்பட்டு கிடங்குகளில் பாழடைந்த நிலையில் உள்ளதாம்.
-----------------------------------------------------------------------------
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் உள்ள பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
அதில், 2019 நவம்பர் மாதம் முதல், கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ், என்பவருக்கு எம் சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்த ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது.
எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி, அருகில் வண்டல் ஓடைகளிலிருந்து சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்த தகவல் தெரியவர சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் பிரதிக் தயாள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற் கொண்டார்.
அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. ஐகோர்ட் உத்தரவின் படி, போலீசார், ஒப்பதாரரான பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அரசிற்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் வகையில் எம்.சாண்ட் நிறுவனத்திற்கு, சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். கடத்தலில் ஈடுபட்ட சமீர் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டார்.
அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனரும், சமீருக்கு உறவினருமான சபீதா துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் நபர்கள் எட்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதனிடையே உயர் அதிகாரிகள் பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில் 2021 ஜூலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார், மணல் கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் (வயது 69) மற்றும் ஐந்து பாதிரியார்களை விசாரனணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி ஆய்வாளர் உலகு ராணி உள்ளிட்ட போலீசார் முடிவில் அவர்களை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் பிஷப் சாமுவேல் மார் இரணியஸ் (வயது 69) ஜோஸ் சமகலா (வயது 69) ஆகிய இருவரும் கொரோனா பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் (56) ஷாஜிதாமஸ் (58) ஜிஜோ ஜேம்ஸ் (37) ஜோஸ் கலவியால் (53) ஆகிய நால்வரையும் போலீசார் நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே பாதிரியார்களை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.
பத்தனம்திட்டா கத்தோலிக்க டயோசிசன் நிர்வாகம் அவர்களை ஜாமீனில் எடுக்க நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மணல் கடத்தல் சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு பூதாகாரமாக பேசப்பட்ட நிலையில் தற்போது இச்சம்பவத்தில் 6 பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
வருவாய்துறையில் உயர் பொறுப்பில் இருந்தவர்களின் உறவினர்களுக்கு இதில் நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. சிபிசிஐடி போலீசாரின் தொடர் விசாரனணயில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் .
----------------------------------------------------------------