5.5 லட்சம் கோடி ஊழல்
நடுநிலை. நக்கி(ஊடகங்)கள்.
தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியன் தான் இமயமலை சாமியார் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையில், கோ-லொகேஷன் என்ற முறையில் என்எஸ்இ தரவுகளை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கியதாகவும், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலை சாமியார் ஒருவரிடம் ஆலோசித்து பல்வேறு முடிவுகள் எடுத்ததாகவும் செபி குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்நிலையில் ஆனந்த் சுப்பிரமணியன் ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து சிபிஐ தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக 832 ஜிபி டேட்டா தரவுகள் திரட்டி உள்ளதாகவும், சில தகவல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதுபோன்று மொரிஷியஸ் போன்ற வரி ஏய்ப்புக்கு உதவும் இடங்களுக்கு சித்ராவும் ஆனந்த் சுப்பிரமணியனும் சென்று வந்துள்ளதால் ,இருவரும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என சிபிஐ கேட்டுக்கொண்டது.
இதையடுத்து ஆனந்த் சுப்பிரமணியன் தேசிய பங்குச் சந்தையில் சேரும்போது அவருக்கு 15 லட்சமாக வருமானம் இருந்துள்ளது.
அதன் பின்னர் ரூ.2.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அவருக்கு வருமானம் உயர்த்தப்பட்டதற்குக் காரணம் என்ன என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதோடு அவரது ஜாமீன் மனுவை மாரச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
2 ஜி யில் தவறாக இழப்பீடை கணித்து முறைகேடு என வினோத் ராய் சொன்னதற்கே தினமணி,தினமலர்,இந்தியன் எக்ஸ்பிரஸ்,இந்து,விகடன்,வகையறாக்கள் பொங்கி ஊழல்,காற்றில் ஊழல் என்று எழுதித் தீர்த்தது.கடைசில் காற்றில் கரைந்து போனது்கட்டுரை தீட்டியவர்கள் நடந்த்து தவறு என எழுதினார்களா என்றால் இல்லை.
ஆனால் கண் முன்னே நடந்த 5.5 லட்சம் கோடி ஊழலை ஒரு பத்தி செய்தியாக வெளியிடவே மனம் வரவில்லை அந்த ஊடகங்களுக்கு.
காரணம் சித்ரா ராம கிருஷ்ணன்,ஆனந்த் சுப்பிரமணியன் இருவரும் பார்பணர்.
ஆ.ராசா திராவிடர்.
அந்த 2ஜி விவகாரத்தை தி.மு.க வை அழிக்க கையிலெடுத்து. அரசியல் செய்த காங்கிரசும்,ப.சிதம்பரமும் ஆட்சியை இழந்து போனார்கள்.இன்று வரை தோல்வி முகம்தான்.
இந்தியா முழுக்க தோல்வியை காங் தழுவினாலும் தி.மு.க.தயவினால் மதிக்கத்தக்க வெற்றியை பெருகிறது.இதுதான் காலத்தின் கட்டாயம்.
-----------------------------------------------------------------