நீதி வெல்லும்.

 சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று வெளியிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்ற இளைஞர், கடந்த 2015ஆம் ஆண்டு ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் இறந்துகிடந்தார். 

பட்டியலினத்தைச் சேர்ந்தவரான கோகுல்ராஜ், காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதால், போலீசார் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த வழக்கில் கோகுல்ராஜுடன் சென்ற இளம்பெண் புகாரின் காரணமாக சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ், தங்கதுரை, அருள் செந்தில், செல்வக்குமார், சிவக்குமார், அருண், சங்கர் உள்ளிட்ட 17 பேரை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.

 அதேவேளை இந்த வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் 2016 ஆம் ஆண்டு யுவராஜூவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பின்னர், இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுவராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பின்னர், 2018 ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியபோது 114 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 

நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தனக்கு நியாயம் கிடைக்காது என கோகுல்ராஜின் தாய் மனுத்தாக்கல் 

யுவராஜ்.

         கொலைகாரன் யுவராஜ்.                   கொகுல்ராஜ்       ,,,                                                      

இதையடுத்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன.

 அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் காதலியான சுவாதி. இவரும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோவில் மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்த போதுதான், யுவராஜ் மற்றும் அவரது ஆட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ்.

இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் இதை சாட்சியாக சொன்ன சுவாதி திடீரென பிறழ் சாட்சியானார். 

இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியது, வழக்கின் போக்கையே மாற்றியது.

தன் மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பவானியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் விசாரிக்க வேண்டும் எனக் கோரினார். 

இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பா.பா.மோகன், இறுதிவரை போராடி நீதி பெற்றுத் தந்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்துப் பேசியுள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ப.பா.மோகன், “கண்ணகி நீதி கேட்டு போராடிய இந்த மண்ணில் ஒரு பட்டியலின இளைஞனின் படுகொலைக்கு நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

 நீதிபதிக்கும், எங்களுக்கு உதவியாக இருந்த அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சிறைத் தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கான போராட்டமல்ல, சமூக நீதிக்கான போராட்டம். சாதி பாகுபாடுகள் அழிந்து சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான நீதிப் போராட்டம். இந்த போராட்டத்திற்குத்தான் நீதி கிடைத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

------------------------------------------------- ----------

முன்பு காமெடியன்

இன்று முதல்வர்.

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. 

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மனி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் தற்போது 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. 

டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் முதல் மாநிலமாகியுள்ளது பஞ்சாப்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 93 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது; அகாலிதளம் 5 இடத்தில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஆம் ஆத்மி சார்பாக பகவத் சிங் மன் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். 

தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ள நிலையில் பகவந்த் சிங் மன் அம்மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

பகவந்த் சிங் மன் ஸ்டான்ட் அப் காமெடியனாக மிகவும் புகழ்பெற்றவர். மேடைகளில் ஸ்டான்ட் அப் காமெடி செய்தவர் 1990களில் காமெடி நிகழ்ச்சிகளை CD கேசட்களில் பதிவு செய்து விற்றார். இவரின் காமெடிகள் வேகமாகப் பரவி மக்களின் வரவேற்பைப் பெற்றார்.

பஞ்சாப்பில் ஜாட் சிங் குடும்பத்தில் வசதியான பின்னணியோடு பிறந்த பகவந்த் சிங் மன்னுக்கு லட்சக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. 

இவரது அப்பாவின் அரசியல் ஆர்வம் காரணமாகவே இவருக்கும் அரசியல் குறித்து ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் மீது அதிக விமர்சனங்கள் கொண்ட இவர், காங்கிரஸை தாக்கி அதிகளவில் ஸ்டான்ட் ஆப் காமெடி செய்துள்ளார். 

2011ல் அரசியல் ஆர்வத்தால் பீப்பிள் பார்ட்டி ஆப் பஞ்சாப்பில் செயல்பட்டு வந்தார். 2012ல் சட்டசபை தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர், ஆம் ஆத்மி தொடங்கப்பட்டதும் பிபிபி கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் பகவந்த் சிங் மன். 2014 மக்களவைத் தேர்தலில் பஞ்சாப்பில் சங்ரூர் தொகுதியில் வென்றார்.

டெல்லியில் கூட ஆம் ஆத்மி மக்களவைத் தொகுதியை வெல்ல முடியாத நிலையில் இவர் பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு வெற்றியை ஈட்டித் தந்தார். 

2019ல் மீண்டும் அதே தொகுதியில் வென்று எம்.பி ஆனார்.

இந்நிலையில், நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பகவந்த் சிங் மன் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது தேர்தல் முடிவுகளின்படி, பகவந்த் சிங் மன் போட்டியிட்ட துரி தொகுதியில் அவர் பெரிய வாக்கு வித்தியாசத்துடன் முன்னிலையில் உள்ளார். 

பஞ்சாபில் ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அம்மாநில முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

-----------------------------------------------------------------------

செருப்பால் அடித்து விரட்டப் பட்டாய்

வென்றிட

என்ன மாயம் செய்தாய்?

நொய்டா பாஜக வேட்பாளரும் நொய்டா எம்எல்ஏவுமான பங்கஜ் சிங் நொய்டா தொகுதியில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். 

இந்திய அரசியல் வரலாற்றில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றுள்ளார்.

பாஜக சார்பாக உத்தர பிரதேச தேர்தலில் நொய்டா தொகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் இந்த முறை களமிறக்கப்பட்டார். 

இவருக்கு ஆதரவாக அங்கு தீவிரமாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டடன.

மூத்த அமைச்சரின் மகன் என்பதால் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பலர் அங்கே சென்றனர். 

இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு நொய்டா மக்கள் போராட்டம் செய்தது தேர்தல் நேரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பங்கஜ் சிங்கிற்கு ஆதரவாக மனோஜ் திவாரி நொய்டாவில் பிரச்சாரம் செய்ய சென்றார். அப்போது அங்கு இருந்த போது மக்கள் மொத்தமாக கூடி பங்கஜ் சிங் மற்றும் மனோஜ் திவாரிக்கு எதிராக குரல் கொடுத்தனர். 

பாஜகவிற்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினர். பாஜக உள்ளே வர கூடாது. வெளியே செல்லுங்கள்.. இங்கே பிரச்சாரம் செய்ய கூடாது.. உங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அப்போது மக்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

மனோஜ் திவாரியை உள்ளே விடாமல் அங்கே பெண்கள் சூழ்ந்து நின்றனர். அதோடு எம்பி மனோஜ் திவாரிக்கு எதிராக அங்கு இருந்த மக்கள் செருப்பை தூக்கி காட்டியதும் சர்ச்சையாகி உள்ளது. 

நொய்டாவில் உள்ள செக்டர் 17 என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இது தேர்தல் நேரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பங்கஜ் சிங் இதனால் தோல்வி அடைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது அதே தொகுதியில் பாஜக வேட்பாளரும் நொய்டா எம்எல்ஏவுமான பங்கஜ் சிங் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார்.

 இந்திய அரசியல் வரலாற்றில் சட்டசபை தேர்தலில் ஒருவர் இவ்வளவு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வது இதுவே முதல்முறை. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும்.
இங்கு பங்கஜ் சிங் மொத்தம் 70.84 சதவிகித வாக்குகளை பெற்றார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 16.42 சதவிகித வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் கட்சி 4.36 சதவிகித வாக்குகளை பெற்றது.

 இதற்கு முன் சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 

அதுவே அதிக வாக்கு வித்தியாச வெற்றியாக இருந்தது.
அதை தற்போது பங்கஜ் சிங் முறியடித்துளார். இந்த தேர்தலில் 238867 வாக்குகளை பங்கஜ் சிங் பெற்றார். 

இவரை எதிர்த்து இரண்டாம் இடம் வந்த சமாஜ்வாதி வேட்பாளர் சுனில் சவுத்திரி வெறும் 61130 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் 177737 வாக்குகள் வித்தியாசத்தில் பங்கஜ் சிங் வென்று சாதனை படைத்துள்ளார்.

-----------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?