4 வது அலை இல்லை.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது அலை ஏற்பட்டும் பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் தேவைப்பட்டால் கூட்டம் ஏதும் இல்லாத இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்த்துக்கொள்ளலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி அண்மை நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தளவிலேயே பதிவாகி வந்தது.
இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,451 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது.
இப்படி இருக்கையில் பல மாநிலங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது அம்மாநில அரசு.
அதேபோல, டெல்லிக்கு செல்வோரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் கூறப்படுகிறது.
ஏனெனில், முன்பு வந்த மூன்று அலைகளும் டெல்லியில் இருந்துதான் பெரும்பாலும் தொடங்கியது என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா மூன்றாவது அலைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால், அதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இந்த தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிக அளவில் ஏற்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு மக்களை அச்சுறுத்தும் வேலையை தொடங்கியுள்ளது. மேலும் உண்மை விவரங்களை வெளியிடாமல் மூடி மறைக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மக்கள் இந்தியாவில் மீண்டும் ஊரங்கிற்கு வாய்ப்பு இருக்குமோ என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊடங்கள் வெளியிடுவது போல, கொரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பு இல்லை என கொரோனா தொற்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் தினசரி புதிய தொற்றுகள் எண்ணிக்கை, நேற்று 2527 ஆக பதிவாகியுள்ளது.
சோதனை நேர்மறை விகிதத்துடன் 0.56% பதிவாகியுள்ளன. மேலும் கடந்த சில நாட்களில் புதிய கொரோனா தொற்றின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. எனவே புதிய அலை ஏற்பட வாய்ப்பில்லை என்பதை இந்த புள்ளி விவரம் குறிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------
கொடநாடு கொலை,கொள்ளை விசாரணை.
கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.
பின்னர், பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சோலூர் மட்டம் ேபாலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூன்று ஆண்டுகளாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் முதலில் இருந்து துவங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றவாளிகள் சயான், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய், தீபு உட்பட 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உட்பட இதுவரை 220 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அ.தி.மு.கவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும் கூட்டுறவு சங்க தலைவருமான இளங்கோவனிடம் சேலத்தில் இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும், இந்த கொலை கொள்ளை வழக்கில் கார் விபத்தில் உயிரிழந்த கனகராஜன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க-வின் கோவை மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அனுபவ் ரவியிடம் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்திய நிலையில், ஆறுகுட்டி மற்றும் அனுபவ்ரவி ஆகிய இருவரும் அளித்த தகவல்களை கேமரா மூலம் பதிவு செய்த தனிப்படை போலிஸார் மேலும் பல அ.தி.மு.க நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ,ஜி சுதாகர் தலைமையில் சென்னையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த விசாரணையில் கொடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தது?, ஆவணங்கள் மற்றும் கோப்புகள் குறித்தும், பங்களாவை யார் யார் பாதுகாத்து வந்தனர், ஜெயலலிதா இறப்புக்கு பின்னால் யார் யார் எஸ்டேட் பங்களாவிற்குள் சென்று வந்தது, இங்கு என்னென்ன ரகசியமான பொருட்கள், ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்தது? போன்ற பல கேள்விகளை சசிகலாவிடம் கேட்க உள்ளனர்.
-------------------------------------------------------------------------