பாகிஸ்தான்

 பாகிஸ்தான் இதுவரை கண்டிருக்கும் பிரதமர்களில் யாருமே 5 ஆண்டு பதவிகாலத்தை நிறைவு செய்ததில்லை. 

முதல் பிரதமரில் இருந்தே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது.

பாகிஸ்தானில் எந்தப் பிரதமரும் முழுமையாக பதவி வகித்ததில்லை. பாதியிலேயே ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். அல்லது ராணுவப் புரட்சி நடந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி விடும்.

1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது, மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற லியாகத் அலிகான் பிரதமராக பதவி ஏற்றார்.

 இந்தியா மீது போர் தொடுக்க மறுத்ததால் ராவல்பிண்டியில், 1951 அக்டோபர் 16ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருக்குப் பின்னர் பாகிஸ்தான் 7 ஆண்டுகளில் கவாஜா நசிமுதீன், முகமது அலி போக்ரா, சவுத்ரி முகமது அலி, ஹுசைன் சஹீத் சுரதி, இப்ராகிம் இஸ்மாயில் சந்திரிகர், பெரோஷ் கான் நூன் என 6 பிரதமர்களைக் கண்டது.

பின்னர் 1958 முதல் 1971 வரை நாடு ராணுவ ஆட்சிக்கு சென்றது. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானின் 8வது பிரதமராக பதவியேற்ற நூருல் அமின் 13 நாட்களே அந்த பதவியில் இருந்தார். பாகிஸ்தானில் குறைந்த நாட்கள் பிரதமராக இருந்தவர் இவர்தான்.

பின்னர் 1973 ஆகஸ்ட் மாதம் பிரதமரான ஜூல்பிகர் அலி பூட்டோ, பிரதமராக 4 வருடங்களை நிறைவு செய்யவிருந்த நிலையில் மீண்டும் ஆட்சி ராணுவத்தின் வசமானது. 

1977 முதல் 1988 வரையில் ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானில், மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய 1999 வரையில் 5 பிரதமர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற முகமது கான், பெனாசிர் பூட்டோ, நவாஸ் ஷெரீப் என யாரும் 5 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை.

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் பெனாசிர் பூட்டோ. பிரதமராக இவர் பதவிவகித்த 2 முறையும் முழுமையாக தனது பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை. பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது படுகொலை செய்யப்பட்டார்.

ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானில், 2012 ஆண்டு முதல் 2018 நாடாளுமன்ற தேர்தல் வரையில் 7 பேர் பிரதமர் பொறுப்பேற்றனர். ஜபருல்லா கான் ஜமாலி, சவுத்ரி ஹுசைன், சௌகாட் அஜிஜ், யூசுப் ராசா கிலானி, பர்வேஸ் அஸ்ரப், நவாஸ் செரீப், ஷாஹித் ககன் அப்பாசி பிரதமரான நிலையில், யூசுப் ராசா கிலானி மட்டும் 4 ஆண்டுகள் 86 நாட்கள் பிரதமராக பதவியிலிருந்தார்.

கடைசியாக 2018ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்த இம்ரான் கானின் பதவியும் தற்போது ஊசலாடுகிறது. 

2018ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்த இம்ரான் கானும், இப்போது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ய முடியாமல் ஆட்சியிலிருந்து அகற்றப்படும் நிலைக்குச் சென்றுள்ளார். 

அவர் பிரதமர் பதவியை ஏற்று இன்றுடன் 3 ஆண்டுகள், 223 நாட்கள் ஆகின்றன.

இம்ரான் கான் அரசுக்கு பெரும்பான்மை பறிபோயுள்ளதால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள இருக்கிறார். இதனால் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. 

இதனால் பாகிஸ்தானில் அடுத்து என்ன நடக்கும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

------------------------------------------------------------------------------------

உ.பி. வெற்றி

பா.ஜ.க. ஆட்டம் அதிகமாகும்.

உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்துவிட்டன. 

அதற்காக ஒன்றிய பாஜக அரசும்  கட்சியும் செய்த தந்திரங்கள் அவர்கள் எதிர்பார்த்த  அளவு பயனைத் தராவிட்டாலும் கூட ஓரளவு நல்ல அறுவடையையே தந்திருக்கின்றன. 

அத னால் பெற்ற துணிவினால் தங்களது வழக்கமான மக்கள்விரோத விவசாய விரோத, கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகளில் இறங்கிவிட்டார்கள்.

அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை திங்களன்று பொதுவெளியில் வெளியிட்டிருப்பது. 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதோ, நடைமுறைப்படுத்தாமல் இருப்ப தோ அந்தச் சட்டங்களை ஆதரிக்கும்  பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக் கும் என்று குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருக் கிறது என்று அந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அனில் கன்வட் கூறியிருக்கிறார். 

அத்துடன், எதிர்காலத்தில் வேளாண்துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என்று கூறியிருப் பது ஒன்றிய பாஜக அரசின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

 ஏனெனில் பிரதமர் மோடி, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, வேளாண் சட்டங்களை ரத்து  செய்வதாகக் கூறினார். 

அப்போதும் கூட விவசாயி களுக்கு இந்தச் சட்டங்களைப் பற்றி புரிய வைக்க முடியவில்லை என்று கூறியது அவர் முழு மனதோடு அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்பதையே உணர்த்தியது.


ஒன்றிய அமைச்சர்கள் பலரும் பாஜக தலைவர்கள் சிலரும் அந்தச் சடடங்கள், தேவைப் பட்டால் மீண்டும் கொண்டுவரப்படும் என்றே கூறி னார்கள். 

அதற்கான முன்னோட்டம்தான் இந்த அறிக்கை வெளியீடு என்றே எண்ணத் தோன்று கிறது. ஏனெனில் இந்த அறிக்கை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது கடந்த ஆண்டு மார்ச் 19 ஆகும். அதை வெளியிடுவதெனில் அப்போதே  ஒன்றிய பாஜக அரசு செய்திருக்கவேண்டும். 

அப்படிச் செய்திருந்தால் ஐந்து மாநிலத் தேர்தல் களில் பாஜக படுதோல்வியடைந்திருக்கும் என்ப தாலேயே இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.


குறைந்தபட்ச ஆதரவு விலைக்குசட்ட அங்கீகாரம் வழங்க வேண்டுமென்றுகுழு கூறி யிருந்தது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவருவது பற்றி பாஜக தலைவர்களும் பிரதமர் மோடியும் மவுனமே காத்தனர். 

இப்போது தான் மவுனம் கலைகிறது, அனில் கன்வட் மூலமாக. உண்மையில் இந்திய விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துரோகம் இழைக்க நினைத்தால் அவர்கள் மீண்டும் களத்தில் இறங்குவார்கள். ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்பார்கள்.


விவசாயிகளின் நலனுக்காக ஏதாவது செய்வதென்றால் ரத்து செய்யப்பட்ட அந்த மூன்று சட்டங்களை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது. 

அத்துடன் மின்சாரத்திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப்பெறவேண்டும். அது மட்டுமின்றி குறைந்தபட்ச ஆதரவு விலை  சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். 

----------------------------------------------------------------------------

பணக்காரர்களுக்கான ஆட்சி

கொரோனான வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது.

 இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.

ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரயில்வே, விமான நிலையம், ராணுவத் தளவாடங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது.

இந்நிலையில், மோடி அரசு இரண்டு நபர்களின் செல்வங்களை வளர்க்கவே ஆட்சியைச் செய்கிறது. இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. 

பணக்காரர்களுக்கான ஆட்சி என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு மே மாதம் வெளியான அறிக்கையின் படி, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக அளவில் அம்பானிக்கு அடுத்தபடியாக 14-ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான தகவலின் படி, அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களில் பெரும்பான்மை பங்குகள் கவுதம் அதானிக்கு சொந்தம் என்பதால், அவரின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு நாட்களில் 15,262 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதானியின் மொத்த சொத்து மதிப்பு 7.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 7.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், அதானி, முகேஷ் அம்பானியை நெருங்கியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
துபாய் பயண மர்மம்

---------------------------------------------------------------------------------

இக்கோடை காலம் கொடுமையானதல்ல.

ஒவ்வொரு மாதத்திற்குமான வானிலை முன்னறிவிப்பை நீண்டகால முன்னறிவிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான நீண்டகால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

அதில், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருப்பதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும், வடமேற்கு இந்திய பகுதி, மத்திய இந்திய பகுதி மற்றும் சில வடகிழக்கு பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மழைக்கான வாய்ப்பு இந்திய முழுவதும் இயல்பை ஒட்டி இருக்க கூடிய சாதகமான சூழல் இருந்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதி மற்றும் இதனை ஒட்டிய மத்திய மேற்கு இந்திய பகுதிகளில் இயல்பை ஒட்டியும், இயல்பை விட அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்திய பெருங்கடல் வெப்பநிலை சமன் (neutral) என்ற குறியீட்டில் உள்ளது. 

இது ஏப்ரல் மாதம் முழுவதும் இதே குறியீட்டில் இருக்க கூடிய சாதகமான சூழல் நிலவுகிறது. இந்திய வானிலை நிலவரம், இந்திய பெருங்கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால் இதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் சராசரியாக 4 செ.மீ பெய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு