இம்ரான் கானின் வீழ்ச்சி

 49 ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 10, 1973 அன்று, பாகிஸ்தான் நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பை அங்கீகரித்தது. அதே நாளில் 2022இல் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து ஒரு பிரதமர் வெளியேறுவதை நாடு முதன்முதலாக சந்தித்துள்ளது. 

இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையைப் போல முடிவுக்கு வரவில்லை. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், 343 பேர் கொண்ட அவையில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர். இந்த அதிகார மாற்றம் இந்தியாவுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்.


பாகிஸ்தானின் ஜனநாயகம் குறைபாடுள்ள ஒன்றாகும். இன்னும் வழிகாட்டப்பட்ட ஜனநாயகமாக திகழ்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் என குழப்பமான ஒரு வாரத்தை எதிர்கொண்ட பிறகு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் தற்போதைய அரசை வெளியேற செய்ய முடிந்தது.

இம்ரான் கானின் வெளியேற்றம் வியப்பூட்டியது. ஏனெனில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அல்லது பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய பிரதான கட்சிகளை சேர்ந்தவராக இல்லாததால், அரசியல் கண்ணோட்டத்தில் அறியப்படாத நபராக வளம் வந்தார்.

       விளாமிடிர் புடின்

புதிய வரவாக கருதப்பட்ட இம்ரான் கான் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். முன்னதாக, எந்த அரசு பதவியிலும் பொறுப்பு வகிக்காத காரணத்தால் அவரை விமரிசிப்பதற்கு எதிர்க்கட்சியினுருக்கு வாய்ப்பு கிட்டாமல் இருந்தது.
ஆனால், காலப்போக்கில் ஒவ்வொரு நாளும் அவரது பிரபலம் குறையதொடங்கி, விரைவில் ஒரு மாயமாக மாறியது.

பாகிஸ்தானில் பலர் சொல்வது போல், இம்ரான் கானை பிரதமராக ராணுவம் தான் தேர்ந்தெடுத்தது.
ஆனால், காலப்போக்கில் உறவுகளிடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. ராணுவத்தின் ஆதரவின்றி எந்த அரசியல் தலைவராலும் நீடிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தும் வகையில், ராணுவம் அவரை வெளியேற்ற முடிவு செய்தது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நெருக்கடி பாகிஸ்தானில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனிர்ல் படையெடுப்பின் போது இம்ரான் கான் ரஷ்யாவுக்குச் சென்றதன் மூலம், அவரது இராஜதந்திர நாகரிகம் குறித்து உலக நாடுகளின் கோபத்தை சம்பாதித்தார்.
இது அமெரிக்காவுடனும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், அவரிடம் புதினை சந்திக்க ரஷ்யா செல்ல வேண்டாம் என அமெரிக்கா தரப்பில் அறிவுறித்தியிருந்ததாக கூறப்படுகிறது. கானின் ரஷ்ய பயணம், இஸ்லாமாபாத்திற்கு மிகப்பெரிய விலையை அளித்தது.

பாகிஸ்தானின் அரசியலில் இந்தியா எப்போதும் முக்கிய காரணியாக திகழ்கிறது. இஸ்லாமாபாத்தின் அரசியல் உரையாடலுக்கு உள்ளேயும் வெளியேயும் டெல்லியின் இருப்பு இருந்துவருகையில், இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டினார்.
ஏனெனில் அவர் பாகிஸ்தானின் சர்வதேச மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை திறமையற்ற முறையில் கையாண்டதற்காக பாகிஸ்தானின் ராணுவ ஸ்தாபனத்தை டார்கெட் செய்திருந்தார். இது ராவல்பிண்டியை முன்னெப்போதையும் விட கோபமடைய செய்ததாக கூறப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஷெரீஃப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது இம்ரான் கானின் வெளியேற்றம், நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப் இன்னும் களத்தில் இருப்பதை நினைவூட்டியுள்ளது. ஏனென்னறால், அவர் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு விதை விதித்து, பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிறகு ஆற்றிய உரையின் போது அவரது சகோதரரையும் நினைவு கூர்ந்தார். இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் ஷெரீப் எப்போதும் மிகவும் சாதகமாக இருக்கிறார். ஆனால் இம்ரான் கானின் அறிக்கைகள் அத்தகைய முறையில் இருக்காது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியையும் தனிப்பட்ட முறையில் தாக்கியதால், இம்ரான் கான் மற்றும் இந்தியா இடையே உறவு ஏற்படுவதில் சிக்கல் இருந்து வந்தது.
தற்போது அவருடைய வெளியேற்றம், இந்தியா ,பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த உதவும்.

------------------------------------------------------------------------

கருப்புமரணம்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?