சனி, 16 ஏப்ரல், 2022

ஆரியத் தீவிரவாதிகளை உருவாக்கும்

 வெற்றியா? 

பின்னடைவா?

ரஷ்யா உக்ரைன் போர் 50 நாட்களை நெருங்கு கிறது. போர் எந்த காரணத்துக்காக இருந்தாலும் அது அழிவுப்பூர்வமானதே! மனித உயிர்களும் கடும் உழைப்பால் உருவான வளங்களும் உற்பத்தி சாதனங்களும் அழிகின்றன. 

எனவே போர் உட னடியாக நிற்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. 

எனினும் கள நிலவரங்களின்படி, போர் நிறுத்தம் எப்பொ ழுது என்பது தெரியவில்லை. அமெரிக்க தலைமை யிலான நேட்டோ, ரஷ்யாவுக்கு எதிராக தூண்டிய இந்தப் போரில் உக்ரைன் பகடைக்காயாக மாறிப்போனது. போரின் திசைவழி என்ன என்பதில் இரு கருத்தாக் கங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ரஷ்யா பின்னடை வை சந்தித்து வருகிறது எனும் கருத்தை மேற்கத்திய  ஊடகங்கள் வலுவாக முன்வைக்கின்றன.

 தமது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளோம் என ரஷ்ய ராணுவம் கூறுகிறது. களத்தில் நடக்கும் ஆயு தப்போர் மட்டுமல்லாது பொருளாதாரப் போரையும் தகவல் பிரச்சார போரையும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது திணித்துள்ளன. 

உக்ரைனின் தலைநகரான கீவ் நகரை நோக்கி 60 கி.மீ நீளமுள்ள ரஷ்யப் படைகள் அணி வகுத்து நின்றதை பல மேற்கத்திய நாடுகள் புகைப்படங்களாக வெளியிட்டன. ஆனால் இப்பொழுது அதில்  மிக கணிசமான படைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டன. 

உக்ரைனின் கடும் தாக்குதல் காரணமாகவே ரஷ்யா பின்வாங்கிவிட்டது எனவும் ரஷ்யாவின் இயலா மையை இது வெளிப்படுத்துகிறது எனவும் மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.

ரஷ்ய ராணுவம் முற்றிலும் மாறு பட்ட மதிப்பீட்டை முன்வைக்கிறது. நவீன போர் முறை களில் ஒன்று Feint என்பதாகும். 

இந்த போர் முறை யின்படி ஒரு ராணுவம் தனது இலக்கை தாக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வது; அந்த இலக்கை நோக்கி படைகளை நகர்த்துவது. இதன் மூலம் எதிர் ராணுவத்தை அந்த இலக்கை காப்பதற்கு தனது முழு பலத்தையும் குவிக்க வைப்பது. எதிர் ராணுவம் தனது படைகளை குவித்தவுடன் அந்த இலக்கை சுற்றி வளைத்து ராணுவ வேலி அமைத்து விட்டு, இன்னொரு இலக்கை- தனது உண்மையான இலக்கை நோக்கி படைகளை நகர்த்துவது.

 அதாவது எதிர் ராணுவத்தை ஒரு இலக்கை தாக்கப்போவதாக நம்பவைத்து பின்னர் உண்மையான இலக்கை தாக்குவது என்பது இந்த போர் உத்தியாகும். இதனை முதலில் பயன்படுத்தியது அமெரிக்க ராணுவம். வளை குடா போரில் இராக் ராணுவத்தை இப்படி சுற்றி வளைத்துவிட்டு தனது இலக்கை அமெரிக்கா தாக்கி ‘வென்றது’. 

அதே உத்தியை ரஷ்ய ராணு வம் இப்போது  பயன்படுத்துகிறது. போரின் முதல் கட்டத்தில் கீவ் நகரம் ரஷ்யாவின் உண்மையான இலக்கு அல்ல; டோன்பாஸ் பகுதிதான் ரஷ்யாவின் உண்மையான இலக்கு. ஆனால் கீவ் நகரை தாக்கப் போவதாக உக்ரைன் ராணுவத்தை நம்பவைத்து அதன் படைகளில் பாதிக்கும் அதிகமாக கீவ் நகருக்குள் தள்ளி விட்டு, டோன்பாஸை சுற்றி வளைத்து விட்டது. 

இப்பொழுது டோன்பாஸ் பகுதி மீது முழு தாக்கு தலையும் ரஷ்ய ராணுவம் நடத்தும் பொழுது கீவ் நகரில் உள்ள உக்ரைன் ராணுவம் டோன்பாஸ் பகுதியில் சிக்கி யுள்ள தனது ராணுவத்துக்கு உதவிட முன்வர முடிய வில்லை.

டோன்பாஸ் பகுதி என்பது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி ஆகும். உக்ரை னின் மக்கள் தொகையான 4 கோடிப் பேரில் சுமார் 85 முதல் 90 லட்சம் பேர் வரை டோன்பாஸ் பகுதியில் வசிக்கின்றனர். 

இங்கு லுகான்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் எனும் இரு மாநிலங்கள் உள்ளன. அவை இரண்டும் 2014ஆம் ஆண்டு உக்ரைனில் அமெரிக்காவால் தூண்டப் பட்ட “மைதான் புரட்சி” என அழைக்கப்பட்ட நாஜிக்க ளின் கலகங்கள் காரணமாக, அதை எதிர்த்து,  தம்மை  சுதந்திர பகுதிகளாக அறிவித்துக் கொண்டன. 

கடந்த 7 ஆண்டுகளில் இந்த மக்கள் கடும் துன்பங்களை சந்தித்தது மட்டுமல்ல; சுமார் 15,000 பேர் உக்ரைன் படைகளால் - குறிப்பாக அசோவ் பட்டாலியன் எனப் படும் நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்டனர். டோன்பாஸ் மக்களை ஒடுக்கும் பொறுப்பை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, நாஜிக்கள் வசம் ஒப்படைத்துவிட்டதாகவே தெரிகிறது. 

நாஜிக்களை மீறி ஜெலன்ஸ்கியால் எதுவும் செய்ய இயலவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன. எனவேதான் இந்த பகுதியை விடுவிப்பது என்பது  ரஷ்ய ராணுவத்தின் முக்கிய இலக்காக அமைந்தது. தற்சமயம் 2015க்கு முன்பு  இருந்த டோன்பாஸ் பகுதியில் சுமார் 80% விடு விக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள பகுதிகளில் கடும் போர் நடக்கிறது. 

உக்ரைனின் இழப்புகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. சுமார் 21,000 வீரர்கள் உயிரி ழந்துள்ளனர்.

 14,000 பேர் வாழ்வு முடங்கும் .


மேற்க்கத்திய ஊடகங்கள் திட்டமிட்டு பரப்புகின்றன. ஒருபுறம் ரஷ்ய ஊடகங்கள் அனைத்தும் தடை செய்யப் பட்டுள்ளன. மறுபுறம் பொய்ச் செய்திகள், அவதூறு கள் என மேற்கத்திய மக்கள் தமது அரசாங்கங்களின் கருத்துகளை மட்டுமே கவனிக்க வேண்டும் எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த அவதூறு பிரச்சா ரத்தில் டுவிட்டர்/ முகநூல்/ வாட்சப்/ இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் மேற்கத்திய அரசாங்கங்க ளின் ஊதுகுழல்களாகவே மாறிப்போயுள்ளன. ரஷ்யக் கணக்குகளை மட்டுமல்ல; மாற்று கருத்துகளை முன் வைக்கும் மேற்கத்திய கணக்குகளையும் மேற்கண்ட சமூக ஊடகங்கள் முடக்குகின்றன.  

இதுவரை இதற்கு  விதிவிலக்காக டெலிகிராம் எனும் சமூக ஊடகம் மட்டும் உள்ளது. டெலிகிராமும் மிரட்டலுக்கு அடிபணியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் மக்கள் இந்த பொய்களை நம்புகின்றனர். தமது ஜனநாயக வடிவம்தான் ஈடிணை இல்லாதது என அம்மக்கள் நம்புவதன் விளைவு இது!

முன்னாள் சோசலிச - இந்நாள் முதலாளித்துவ ரஷ்யாவுக்கும் மேற்கத்திய முதலாளித்துவ உல குக்கும் இடையே நடைபெறும் இந்த போரில் அனைத்து தேசங்களின் உழைக்கும் மக்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படும் நிலை உரு வாகியுள்ளது. நேரடி மோதலில் ஈடுபட மேற்கத்திய நாடுகள் அஞ்சுவதற்கு ஒரே காரணம் ரஷ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்கள்தான்! 

உக்ரைன் பிரச்சனை க்கு லெனின் மற்றும் ஸ்டாலின்தான் காரணம் என புடின் வெறுப்பு உமிழ்கிறார். ஆனால் ஸ்டாலினும் பின்னர் சோவியத் யூனியன் பொறுப்பில் இருந்த பிரஷ்னேவ்/ “சமாதானத்துக்கு சமாதானம்- ஏவு கணைக்கு ஏவுகணை” என முழங்கிய ஆன்ட்ரபோவ் ஆகியோர் உருவாக்கிய அணு ஆயுதங்கள்தான் புடி னுக்கு பாதுகாப்பைத் தந்துள்ளன. 

எனினும் ரஷ்யா செய்யும் சிறு தவறு கூட போரின் திசைவழியை விபரீத மான திசையில் செலுத்திவிடும் ஆபத்து உள்ளது. எனவேதான் இந்த போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்பது முதன்மை முழக்கமாக மாறி யுள்ளது.

அ.அன்வர் உசேன்.

தீக்கதிரில்

----------------------------------------------------------------------------

ஆரியத் தீவிரவாதிகளை

உருவாக்கும்

அயோத்தியா மண்டபம்.


சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்தில் தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன பாசிஸ்டுகள் தங்களுடைய நச்சுக் கருத்துக்களை பரப்பி வந்தனர். 
தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு தில்லை நடராஜர் கோயிலைப்போல மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களுக்கு அயோத்தியா மண்டபம் பார்ப்பன பாசிஸ்டுகளின் புகலிடமாகவும் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் மையமாகவும்  அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.
இப்படிப்பட்ட பார்ப்பன பாசிஸ்டுகளின் கூடாரமான இந்த அறக்கட்டளை பொதுமக்களிடம் நன்கொடை மற்றும் காணிக்கை பெற்றே செயல்பட்டு வருகின்றது.
 ஸ்ரீ ராம் சமாஜம் அறக்கட்டளை நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதன் முன்னாள் அறங்காவலர் உள்ளிட்ட பலர் புகார்கள் அளித்த நிலையில் அயோத்தியா மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை கடந்த மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம். வேலுமணி, “இந்து சமய அறநிலையத்துறை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்தலாம் எனவும், ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
மேற்கண்ட தீர்ப்பு வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து ஏப்ரல் 13 அன்று அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சென்றபோது, ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன பாசிஸ்டுகள், ரவுடிகள் மற்றும் பொறுக்கிகளோடு கும்பலாக சேர்ந்துகொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளையும் போலீசையும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் போலீஸ் மீதும் அதிகாரிகள் மீதும் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
அயோத்தியா மண்டபத்தில் பூட்டி அதனுள்ளே யாரும் உள்ளே நுழைய முடியாதபடி அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த சென்ற அதிகாரிகளை தடுத்து அவர்களை தாக்கி உள்ளே செல்லவிடாமல் தடுத்தது என்பது அரசுக்கு எதிரான குற்றமாகும்.
இச்செயலில் ஈடுபட்ட உமா ஆனந்தன் கவுன்சிலர், கரு. நாகராஜன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக நிர்வாகிகள் 75 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். 
உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்பொழுது போலீசுடன் தள்ளுமுள்ளுவில்  ஈடுபட்டால்  உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது.
ஆனால், பார்ப்பன பாசிஸ்டுகள் காலையில் கைது செய்யப்பட்டு நன்றாக சோறுபோட்டு மாலையில் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதுதொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தை பாஜக கட்சிக்கு தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பனக் கும்பலுக்கு எப்படி அயோத்தியா மண்டபத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமோ, அதைவிட அந்த அயோத்தியா மண்டபம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது முக்கியம்.
தமிழ்நாட்டில் யாருடைய அதிகாரம் உயர்ந்தது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. 
எனவே தமிழக அரசு, நிதி முறைகேட்டில் ஈடுபட்ட அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கைது செய்வதுடன் அயோத்தியா மண்டபத்தில் உடனடியாக இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வர வேண்டும்.
இப்பிரச்சினையை சாக்காக வைத்துக் கொண்டு தமிழகத்தில் கலவரம் நடத்த முயற்சி செய்த கோட்சேவின் பேத்தி என்று பெருமையாக பீற்றிக் கொண்ட உமா ஆனந்தன் கவுன்சிலர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன ரவுடிக் கும்பல் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் .
------------------------------------------------------------------------