மக்களாட்சிக்கு எதிரான அரசியல் சூழ்ச்சி

 சுங்கம் தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளில்  கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தப்பட்ட  கட்டணம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்து உள்ளது. 

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்ததுடன், கட்ட ணத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை  விடுத்துள்ளனர்.


தமிழகத்தில்  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணை யத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள் (டோல்கேட்) உள்ளன.  இவற்றைப் பயன்படுத்துவோருக்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி 27 சுங்கச் சாவடிகளுக்கும், செப்டம்பர் 1ஆம் தேதி 21 சுங்கச்சாவடி களுக்கும் உயர்த்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், 27 சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்துவோருக்குக்  கட்ட ணம்  உயர்த்தப்பட்டுள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலை கள் ஆணையம் கூறியுள்ளது. வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கு ரூ.5 முதல்  ரூ.120 வரை உயர்த்தப்பட்டுள்ளது.


சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்ட ணம் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் 40  சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் வசூலிக்கப் பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவிற்குச் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

ஏற்க னவே நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டு வருகிறது. 

இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வரும் நிலையில்  சுங்கக் கட்டண உயர்வு என்பது இரட்டிப்புச் சுமையாக மாறி யுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மேலும் மேலும் வதைக்கும் செயலாகும்.


தமிழகத்தில் மொத்தம் உள்ள 48 சுங்கச் சாவடி களில் பெரும்பாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்  உள்ளன. 

அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்கச்  சாவடிகளும், புறநகர் பகுதிகளில் 9 சுங்கச் சாவடி களும் உள்ளன.  நான்கு வழிச் சாலைகளைப் பொறுத்த வரையில் நகராட்சிக்குள் 10 கி.மீ, மாநகராட்சிக்குள் 10  கி.மீ, தொலைவிற்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார். அதன டிப்படையில் சென்னையில் பரனூர் (செங்கல்பட்டு), வானகரம், சென்னசமுத்திரம், நெமிலி, சூரப்பட்டு என  5 சுங்கச்சாவடிகளை அகற்றப்பட வேண்டும். 

மதுரை,  திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் பர னூர் சுங்கச்சாவடியைக் கடந்துதான் சென்னைக்குச்  சென்று வரவேண்டும். அதனால், முன்னுரிமை கொடுத்து  இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று  கடந்த 6 மாதத்திற்கு முன் மாநில அரசு ஒன்றிய அர சிடம் வலியுறுத்தியது. 

ஆனால் ஒன்றிய அரசு இன்னும் அகற்றவில்லை. இந்த நிலையில் தற்போ தைய சுங்கக் கட்டண உயர்வால் ஏற்கனவே நிதி நெருக் கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு போக்கு வரத்துக் கழகங்களுக்கும், கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. 

சுங்கக் கட்டண உயர்வால் மறைமுகமாகச் சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் அதிகரித்து  அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். 

எனவே ஒன்றிய அரசு சுங்கக் கட்டண உயர்வை உட னடியாக  திரும்பப் பெறுவதோடு தேவையற்ற நிலை யில் உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும்.

--------------------------------------------------------------------------

இலங்கை.

போராட்டங்களால்“எமெர்ஜென்சி”

அரிசி முதற்கொண்டு சில அத்தியாவசியப் பொருட்களில் தன்னிறைவு பெற்றிருந்த நாடு ஒரே வருடத்தில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது

 அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, ஈஸ்டர் நாள் குண்டு வெடிப்புகள், கொரோனா தொற்று, குறைந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என்று இலங்கையின் பொருளாதார நிலைமை சீர் குலைய ஆரம்பித்த சூழலில் கடந்த ஆண்டு, இயற்கை விவசாயத்திற்கு மாறுகிறது இலங்கை என்ற அறிவிப்பை வெளியிட்டு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் இறக்குமதிக்கு தடை விதித்தது இலங்கை அரசு. 

அரிசி முதற்கொண்டு சில அத்தியாவசியப் பொருட்களில் தன்னிறைவு பெற்றிருந்த நாடு ஒரே வருடத்தில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்திய வியாபாரிகள் 40 ஆயிரம் டன் அரிசியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் இருக்கின்றனர் இந்திய வியாபார்கள். 

இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க துவங்கிய காலத்தில் இருந்து டெல்லி அனுப்பும் முதல் முக்கிய உதவி இதுவாகும்.

இலங்கையில் ஜனவரி மாதம் வர்த்தக பற்றாக்குறை 859 மில்லியன் டாலர்களாக இருக்கிறது சென்ட்ரல் பேங்க் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

 ஜனவரி மாதம் அந்நாட்டின் இறக்குமதி 23.1% ஆக உயர்ந்து 1.96 பில்லியனாக அதிகரித்தது. ஏற்றுமதி 17.5% அதிகரித்து 1.10 மில்லியன் டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

இலங்கையின் கொழும்பு பங்கு சந்தை தொடர் மின்வெட்டு காரணமாக வேளை நேரத்தை 4.5 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்தது.

 வர்த்தகர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க செயல்பட்டும் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துள்ளனர் முதலீட்டாளர்கள்.

Sri Lanka Economic Crisis President Gotabaya declares emergency amid protests

அவசரநிலை.

பணவீக்கம் உயர்வு, வரி குறைப்பு போன்ற காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் மோசமடைய துவங்கியது. அரசு இதனை சரியாக கையாளாத காரணத்தை கண்டித்து பலரும் வியாழக்கிழமை அன்று கொழும்புவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினார்கள். 

போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கோத்தபய வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தை தீயிட்டு கொளுத்தினார்கள். 

இந்த நிகழ்விற்கு காரணமாக இருந்த 54 பேரை கைது செய்தது இலங்கை காவல்துறை. அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை இரவு கோத்தபய ராஜபக்‌ஷே நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார்.

-----------------------------------------------------------------------------

மக்களாட்சிக்கு எதிரான 

மதவாத அரசியல் சூழ்ச்சி:

இந்தத் தலைப்புக்குள் மூன்று முக்கியமான வார்த்தைகள் இருக்கின்றன. சுவாரஸ்யமான வார்த்தைகளும் கூட. ஜனநாயகம், மதவாதம், அரசியல் ஆகியவையே அந்த முக்கியமான மூன்று வார்த்தைகள். முதல் வார்த்தையான ஜனநாயகம் என்பது என்ன?

வார்த்தையிலேயே ஒருவாறாக அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். 

ஜனங்களின் நாயகம்! அதாவது மக்களின் நாயகம். மக்களின் ஆட்சி என்றால் இன்னும் தெளிவாகவே புரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக ஜனநாயகம் என்கிற வார்த்தைக்கு நாம் படித்த பள்ளிகள் கொடுத்த அர்த்தம் ஒன்றுதான். மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் அரசு! இந்த வாக்கியத்தை அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் எழுதியதாக சொல்வார்கள். 

நம் நாட்டிலிருக்கும் மக்களாட்சியை விளக்க ஏன் அமெரிக்க ஜனாதிபதி சொன்ன விளக்கத்தை கொடுக்கிறோம்?

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் அடிமையாக இருக்க வேண்டியதில்லை என ஆபிரகாம் லிங்கன் அரசு உத்தரவிட்டதும் உள்நாட்டுப் போர் வெடித்தது.

வெள்ளையினத்தவருக்கு கறுப்பினத்தவர் சமமாக இருக்க முடியாது, அடிமைகளாகத்தான் இருக்க வேண்டுமென அமெரிக்காவின் தெற்கு மாகாண கனவான்கள் கூறினார்கள். 

கூறியது மட்டுமின்றி எல்லாரும் கூடிப் பேசி அமெரிக்காவிலிருந்து பிரிந்து விடுவதென முடிவுக்கு வந்தனர். பிரிந்தும் விட்டனர். புதிய பெயரை தங்களின் நாட்டுக்கு சூட்டிக் கொண்டனர். அமெரிக்க அரசு அவர்களின் பிரிவை ஏற்காமல் மீண்டும் இணையச் சொல்லி போர் தொடுத்தது. 

கிட்டத்தட்ட ஐந்து வருடப் போர். பல லட்ச அமெரிக்கர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பிரிந்து சென்ற மாகாணங்கள் மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டன.

இப்போது ஏன் இந்தக் கதை எனக் கேட்கலாம். காரணம் இருக்கிறது.

1864ஆம் ஆண்டு நடந்து கொண்டிருந்த போரின் போது இறந்த சிப்பாய்களுக்கு ஆதரவாக எழுதிய அறிக்கையில்தான் ஆபிரகாம் லிங்கன் ‘மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் அரசு’ என்கிற சொற்றொடரை பயன்படுத்தினார். அங்கிருந்துதான் அந்த வாக்கியத்தின் பயன்பாடு உலகத்துக்குப் பரவியது. இதிலும் ஒரு சின்ன சூழ்ச்சிகரமான உண்மை புதைந்திருக்கிறது.

ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய வாக்கியத்துக்கு அவர் சொந்தக்காரர் அல்ல. இரவல் பயன்பாடுதான். அவருக்கும் முன்னரே ஒருவர் அந்த வாக்கியத்தை பயன்படுத்தியிருந்தார்.

 பயன்படுத்தியவரின் பெயர் ஜான் வைக்ளஃப். கிறித்துவ மதத்தின் வேதாகம நூலை மொழிபெயர்த்து அதற்கு எழுதிய முன்னுரையில்தான் அந்த வாக்கியத்தை பயன்படுத்தியிருந்தார் ஜான் வைக்ளஃப். கடவுளுக்கும் ஜனநாயகத்துக்கும் என்ன சம்பந்தம்? 

ஜான் வைக்ளஃப் அந்த வாக்கியத்தை பயன்படுத்திய விதமே முற்றிலும் வேறு.

‘இந்த வேதாகமம் மக்களால் மக்களுக்கென நடத்தப்படும் மக்களின் அரசுக்கானது’ என்பதுதான் அவர் மொழிபெயர்த்த விதம். அதன் நோக்கம், எந்த மதகுருமாரும் தங்களின் சுயநலத்துக்காக வேதாகமத்தை பயன்படுத்தி தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மக்களை ஆட்டுவித்துவிடக் கூடாது என்பதுதான். 

ஆகவே கடவுளின் வேதாகமம் மக்களுக்கு மட்டுமே உரியது என்ற அர்த்தம் தொனிக்க எழுதப்பட்ட வாசகமே அது. 

அதுவும் 1384ஆம் ஆண்டில் எழுதப்பட்ட வாசகம். அந்த வாசகத்தை எடுத்து ஜனநாயகத்தை விளக்க பயன்படுத்திய ஆபிரகாம் லிங்கன் அப்போதும் கூட, ‘கடவுளுக்கு கீழிருக்கும் இந்த நாட்டில் இந்த போர்வீரர்களின் தியாகம் மதிக்கப்பட்டு, புதிய சுதந்திரம் உருவாக்கப்பட்டு, மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் அரசு அழியாமல் இருக்க வேண்டும்’ என்றே குறிப்பிட்டிருந்தார்.


அதாவது மதத்தை மக்களன்றி அதிகாரத்தில் இருக்கும் வேறெவரும் பயன்படுத்தக் கூடாது என எழுதப்பட்ட வாசகத்தை அப்படியே திருப்பிப் போட்டு மதத்தின் பெயரில் நடத்தப்படும் அரசுக்கு விளக்கமாக கொடுக்கப்படுவதெல்லாம் என்ன விதமான சூழ்ச்சி?

ஜனநாயகம் என்கிற வார்த்தைக்கான விளக்கத்திலேயே மதத்தின் சூழ்ச்சி தொடங்கிவிட்டது.

எங்கெல்லாம் ஒரு நாட்டின் அரசு மதத்தை தன்னுடைய ஆட்சிக்காக அடையாளமாக கொள்கிறதோ அங்கெல்லாம் சூழ்ச்சியும் திருட்டுத்தனமும் படுகொலைகளும் மனித உரிமை மீறல்கள் மட்டுமே நடந்திருக்கின்றன. இலங்கையின் பவுத்த அரசு தொடங்கி இந்தோனேசிய இஸ்லாமிய அரசும் இந்தியாவின் இந்துத்துவ அரசும் பெயரளவில் குடியரசை கொண்டிருந்தாலும் செய்வதென்னவோ சூழ்ச்சிகளும் படுகொலைகளும் ஒடுக்குமுறைகளும் மட்டும்தான்.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இந்துக்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை குறைவு என்றோ மின்சாரம் இலவசம் என்றோ அறிவிப்பு வெளியானதா? ம்ஹும்! 

இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் சேர்த்தே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கிறித்துவர்களும் இந்துக்களும் சேர்ந்தே மின்சாரக் கட்டண உயர்வை எதிர்கொள்ள வேண்டும். 

ஆனால் பேசுவதெல்லாம் இந்து ராஜ்ஜியம், இந்துக்களுக்கே உயர்வு என்ற கட்டுக்கதைகள்தான். மற்றபடி கொடுமைகள் என்னவோ எல்லா மதத்தவருக்கும் சேர்த்தே இழைக்கப்படுகிறது.

அடிப்படையாக நாம் அனைவரும் விரும்புவது 1384ஆம் ஆண்டு எழுதப்பட்ட வாசகத்தைதான். ‘மக்களால் மக்களுக்கு நடத்தப்படும் மக்களின் அரசில் உள்ள மக்களுக்கு மட்டுமே மதமும் கடவுளும் இருக்கவேண்டும். அரசுக்கு இருக்கக் கூடாது.

மதகுருமார் மட்டுமல்ல எந்த அரசியல்வாதியும் கூட மதத்தை காட்டி உண்மையான மக்களின் ஆட்சியை அபகரித்திடக் கூடாது என்பதுதான் நமக்கான அரசியலாக இருக்கவேண்டும்.

------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?