இந்தியா உயர்வது விலைவாசியில் மட்டும்.

 மொத்த விலைவாசி குறியீடு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2021 மார்ச் மாதம் மொத்த விலைக் குறியீடு 7.89 சதவிகிதமாக இருந்தது. 

இந்தாண்டு மார்ச் மாதம் 14.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 

இதன் விளைவு அத்தியாவ சியப் பொருட்களின் விலை பன்மடங்கு கூடியி ருக்கிறது. இது மேலும்  மக்களின்  மீது தாங்க முடி யாதளவு சுமையை ஏற்றியிருக்கிறது. இது ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையின் படுதோல்வியாகும். 

உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட் கள், உற்பத்திப் பொருட்கள், இடை நிலைப் பொருட் கள் உள்ளிட்ட சுமார் 5500 பொருட்களின் மொத்த விலைகளிலிருந்து  இந்த குறியீடு கணக்கிடப்படு கிறது.

மொத்த விலைக் குறியீட்டு உயர்வால் ,  நுகர்வோர் விலைக் குறியீடும் உயரும். அதன் மூலம் பணவீக்கமும் உயர்கிறது. 

உதாரணமாக இதுவரை ரூ.100க்கு வாங்கிய பொருட்கள், இனி ரூ.120 கொடுத்தால்தான் கிடைக்கும்.  ஆனால் தொழிலாளர்களின் கூலியோ, பணியாளர்களின்  ஊதியமோ உயராது. 

அப்போது மக்கள் அதே 100 ரூபாய்க்கு  வாங்கும் பொருளின் அளவை குறைத்து வாங்குவார்கள். அதாவது பொதுமக்களின்  வாங்கும் சக்தி குறை யும். வாங்கும் சக்தி குறையும் போது,  உற்பத்தி தேக்கம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து உற்பத்தி யும் குறையும்.

 இந்தப் பொருளாதாரச் சுழற்சியின் பாதிப்பு  வெகுமக்களை மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தையே பாதிக்கும். அப்படியான  பாதிப்பைத்தான் இந்தியப் பொருளாதாரம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது.  

இந்த நிலையில் கூட மோடி அரசிற்கு  மக்க ளைத் துன்பத்திலிருந்து மீட்க மனம் வரவில்லை. மாறாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 2021ல் மட்டும் ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் கோடியை மக்கள் பாக்கெட்டிலி ருந்து பறித்திருக்கிறது. 

ஆனால் மறுபுறம் மோடி யின் நெருங்கிய நண்பரும், ஆர்எஸ்எஸ் ஆதர வாளருமான அதானிக்கு அரசின் பணத்தை வாரி வாரி  இறைக்கிறது. அதானியின் நவிமும்பை விமான நிலையத்தின் ரூ.12 ஆயிரத்து 770 கோடி வராக்கடனை, ஸ்டேட் வங்கி மூலம் தள்ளுபடி செய்திருக்கிறது. 

இதன் மூலம் மீண்டும் ஒன்றிய அரசு காவி சார்பு கார்ப்பரேட் நல அரசு என்பதை நிரூபித்திருக்கிறது.  

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை எட்டப் போவதாகப் பொய் நெல்லைக் குத்தி பொங்கல் வைக்க பாஜக வகையறாக்கள் முயல்கின்றனர். 

ஆனால்  கடந்த மூன்று ஆண்டுகளில் சந்தை முதலீடுகளில் வந்த அந்நிய முதலீடு 40 பில்லியன் டாலரில் , 14 பில்லியன் டாலர் கடந்த மூன்றே மாதங்களில் வெளியேறியிருக்கிறது. 

இதுதான்  இந்தியாவை மோடி  5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் லட்சணம். 

மோடி அரசின் தொடர்  தோல்விகளை திசை திருப்ப  மக்களிடையே  மதக்கலவரங்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டு உரு வாக்கி வருகிறது. 

இது சிறுபான்மையினரை மட்டு மல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும்  சீர்குலைப் பதை நோக்கி இட்டுச் செல்லும். 

தேசத்தையும் மக்களையும் பாதுகாக்க மோடி அரசை  ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றிட அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைவது அவசியம்.

--------------------------------------------------------------------


காடுகளின்  பன்முக நன்மைகள் 

நில நடுக்கோட்டுக் காடுகள் பூமியின் வெப்பத்தை 1 டிகிரிக்கும் அதிகமாக குளிர்விக்க உதவுகின்றன என ஒரு ஆய்வு கூறுகிறது.

இதற்கு முக்கிய காரணம் காடுகள் காற்று மண்டலத்திலுள்ள கார்பனை கிரகித்து சேமிப்பதுவே.ஆனால் குளிர்விப்பதில் மூன்றில் ஒரு பங்கு, நீராவித் துளிகள் மற்றும் ஏரோ சால் வெளிவிடுவது போன்ற சில நிகழ்வுகளாலும் நடைபெறுகிறதாம். 

கார்பன் டை ஆக்சைடு மற்ற பசுமைக் குடில் வாயுக்கள் குறித்து மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம்.காடுகள் கார்பனை உறிஞ்சும் ரப்பர்கள் மட்டுமே அல்ல.’ என்கிறார்  விர்ஜினீயா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுற்று சூழல் அறிவியலாளர் டெபோர் லாரென்ஸ். 

காடுகள் தங்களுடய இயற்பியல் மற்றும் வேதியியல் நிகழ்வுகளால் அப்பகுதி தட்ப வெப்ப நிலைகளை பாதிக்கின்றன எனபது எற்கனவே அறியப்பட்ட ஒன்றுதான். இலைகளிலுள்ள துளைகள் மூலம் நீராவியை வெளியேற்றி தங்களையும் சுற்றுப்புறத்தையும் குளிர்விக்கின்றன.

 மேலும்  காடுகளின் சமச் சீரற்ற மேல்பகுதி அவைகளின் மேல் கடந்து செல்லும் சூடான  காற்றை மேல் நோக்கி தள்ளுவதன் மூலம் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன.அதோடு ஏரோ சால் எனப்படும் நீர்த்திவலைகளை உண்டாக்கி சூரிய ஒளியை பிரதிபலித்தும் மேகங்களை கருவாக்கியும் வெப்பத்தை குறைக்கின்றன. 

ஆனால் இதுவரை இவை உலகளாவிய அளவில் எவ்வாறு பாதிக்கின்றன என்பது ஆராயப்படவில்லை. காடுகள் அழிக்கப்பட்டால் மொத்தமாக அவை சேமித்திருக்கும்  கார்பன் வெளியிடப்பட்டு வெப்பம் எவ்வளவு அதிகமாகும் என்கிற புள்ளிவிவரத்தோடு நீராவி வெளியிடுதல்,சமச்சீரற்ற மேற்பரப்பு,ஏரோசால் நிகழ்வுகளால் குறைக்கப்படும் வெப்பம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு இதன் உலகளாவிய தாக்கத்தை இந்த ஆய்வில் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

 நிலநடுக்கோட்டிற்கு 50 டிகிரி வடக்கிலும் தெற்கிலும் உள்ள காடுகள் பிரதானமாக கார்பன் சேமிப்பு மூலமே புவி வெப்பமாதலில் பங்கு வகிக்கின்றன. இந்தப் பகுதிகளில்  மற்ற நிகழ்வுகளும் கணிசமான அளவு பாதிக்கின்றன.30டிகிரி வடக்கிலும் தெற்கிலும் உள்ள காடுகளில் கார்பன் சேமிப்பும் மற்ற நிகழ்வுகளும் சரிபாதி பங்கு செலுத்துகின்றன.

நிலநடுக்கோட்டிற்கு 10டிகிரி அருகில் உள்ள காடுகளில் நீராவி வெளியிடுதல், சமச்சீரற்ற மேற்பரப்பு,ஏரோசால் நிகழ்வுகளாலேயே பெரும்பகுதி வெப்பம்  குறைக்கப்படுகின்றது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு