"நல்ல குடும்பத்தில் பிறந்தவன்
பெட்ரோல் விலை உயர்வை
எதிர்க்க மாட்டான்"
பெட்ரோல் விலை உயர்வை குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளரை கடுமையாக மிரட்டியுள்ளார் பாபா ராம்தேவ்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பாஜகவிற்கு ஆதாரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பெட்ரோல் விலையை ரூ.40க்கு கொண்டுவரும் கட்சிக்குதான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார் கார்ப்பரேட் சாமியார் ராம்தாவ்.
அதை தொடர்ந்து 2018-ல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணக்காரர்களுக்கு வரிவிதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். “அரசு, வரியை சற்று குறைத்து எனக்கு பெட்ரோல் விற்பனைக்கு அனுமதி வழங்கினால் நான் இந்தியாவிற்கு பெட்ரோல், டீசலை லிட்டருக்கு 35-45 ரூபாய்க்கு தர முடியும். மக்களின் பாக்கெட் காலியாகி வருவதால் பெட்ரோல், டீசலை ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி என்ற 28 சதவீத வரியின்கீழ் கொண்டுவரக்கூடாது.
.” பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க அரசு தயக்கம் காட்டுவது குறித்து கேள்வியெழுப்பிய ராம்தேவ், “வருவாய் இழப்பு ஏற்பட்டால் இந்தியா செயல்படுவதை நிறுத்தாது, பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பதன்மூலம் இழப்பை மீட்டெடுக்க முடியும்” என்றார்.
தற்போது 2022 மார்ச் 31 அன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டு கடந்த ஒன்பது நாட்களில் மொத்த விலையும் லிட்டருக்கு ரூ.5.60 உயர்ந்துள்ளது. இதைபற்றி, அரியானா மாநிலம் கர்னாலில் நடந்த நிகழ்ச்சியின்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.40-க்கும் சமையல் எரிவாயு லிட்டருக்கு ரூ.300-க்கும் வழங்குவதை உறுதி செய்யும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராம்தேவ் கூறிய பழைய கருத்தை மீண்டும் கூறி கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர்,
தற்போதைய ஏரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலையை பற்றி ராம்தேவிடம் கருத்து கேட்டார்.
இந்த கேள்விக்கு கோவமடைந்த ராம்தேவ், பத்திரிகையாளர் கேட்டதற்கு பதிலளிக்காமல், “ஆம், நான் சொன்னேன்; நீங்கள் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்காதீர்கள்; உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க நான் என்ன உங்களின் தேகேதாரா (ஒப்பந்ததாரரா)?” என்றார்.
பத்திரிகையாளர் மீண்டும் அதே கேள்வியை கேட்டதும், “சும்மா வாயை மூடு; திரும்பவும் இதே கேள்வியை கேட்டால் நல்ல இருக்காது பாத்துக்கோ; நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இப்படி பேசக்கூடாது” என்று கடுமையாக மிரட்டிகூவுகிறார்.
“எரிபொருள் விலை குறைந்தால் அரசுக்கு வரி கிடைக்காது; பிறகு எப்படி நாட்டை நிர்வகிப்பார்கள், சம்பளம் கொடுப்பார்கள், சாலைகள் அமைப்பார்கள்?
ஆம் பணவீக்கம் குறைய வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பணவீக்கத்தை குறைக்க மக்கள் கடினமாக உழைக்க வேண்டும். நான் கூட அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை வேலை செய்கிறேன்” என்று ராம்தேவ் கூறினார்.
காவிகளையும் கார்ப்பரேடுக்களையும் கேள்விக்கேட்பவர்கள் விமர்சிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள்; தேசத்துரோகிகள்; நகர்புற நக்சல்கள் என்ற தொனியில் பேசியுள்ளார் காவிகளின் கைக்கூலியான ராம்தேவ்.
மக்கள் வரி பணத்தை பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகையாகவும் வாராக் கடனாகவும் வாரியிறைத்து வருகிறது. இந்நிலையில் மக்களை உழைத்து அரசுக்கு மேலும் மேலும் வரி பணத்தை வாரியிறைக்க வேண்டும்.
அப்போதுதான் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும் என்று மக்களை வெளிப்படையாகவே மிரட்டுகிறார் பாசிச மோடி அரசின் கைக்கூலி ராம்தேவ்.
பாசிச மோடி அரசின் ஆதரவுடன் பதஞ்சலி நிறுவனம் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டிவரும் பாபா ராம்தேவ் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து ஹேர்கட் என்ற பெயரில் வாராக்கடன் பட்டியலில் தப்பித்துக்கொள்வதற்கே வாங்கிய காசுக்குமேல் கூவுகிறார்.
நன்றி: வினவு
----------------------------------------------------------------------
டாப் 10 பணக்கார இந்தியர்கள்
கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள பில்லியனர்களின் 36 வது வருடாந்திர தரவரிசை பட்டியலில் பல இந்தியர்கள் இடம்பிடித்தனர்.
அந்த வகையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவல்படி, சமீபத்திய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிகள், அதானிகள், மிட்டல்கள் உட்பட பலர் இணைந்துள்ளனர்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, 90.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும்,
உலகின் பத்தாவது பணக்காரராகவும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
கௌதம் அதானி மற்றும் குடும்பம்
ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானி குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு $90 பில்லியன் ஆகும்.
அவர் உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ளார்.
ஷிவ் நாடார்
HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனர் நாடார், இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவர். அவரது சொத்து மதிப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஃபோர்ப்ஸ் படி, அவரது நிகர மதிப்பு $28.7 பில்லியன் ஆகும். உலக தரவரிசையில் 47வது இடத்தில் உள்ளார்.
4. சைரஸ் பூனவல்லா
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பூன்வாலாவின் சொத்து மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது.
அவரது நிகர மதிப்பு 24.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. முந்தைய தரவரிசையுடன் ஒப்பிடுகையில், நான்கு இடம் முன்னேறியுள்ளார்.
உலக தரவரிசையில் 56வது இடத்தில் உள்ளார்.
ராதாகிஷன் தமானி
உலக அளவில் 81வது இடத்தில் உள்ள தமானி, நாடு முழுவதும் டி-மார்ட்களை இயக்கும் அவென்யூ சூப்பர் மார்க்கெட்டை நிறுவியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர் ஆகும்.
லட்சுமி மிட்டல்
உலகின் மிகப்பெரிய எஃகு மற்றும் சுரங்க உற்பத்தி நிறுவனமான Arcelor Mittal இன் தலைவரான லட்சுமி மிட்டலின் நிகர சொத்து மதிப்பு $17.9 பில்லியன் ஆக உள்ளது.
இவர் உலகளவில் 89 வது இடத்தில் உள்ளார்.
சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பம்
OP ஜிண்டால் குழுமத்தின் எஃகு மற்றும் சக்தி நிறுவனமான சாவித்ரியின் நிகர மதிப்பு $17.7 பில்லியன் ஆகும். இவர் உலக அளவில் 91வது இடத்தில் உள்ளது. மேலும், டாப் 10 பணக்கார இந்தியர்களில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் ஆவர்.
அதேபோல், பில்லியனர்கள் பட்டியலில் உள்ள 13 இந்திய பெண்களில் ஒருவர் ஆவர்.
குமார் பிர்லா
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் உலகளவில் 109 வது இடத்தில் உள்ளார்.
அவரது நிகர சொத்து மதிப்பு $16.5 பில்லியன் ஆகும்.
திலீப் ஷங்வி
உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான திலீப் ஷங்வி, உலகளவில் 115 வது இடத்தில் உள்ளார்.
அவரது சொத்து மதிப்பு $15.6 பில்லியன் ஆகும்.
உதய் கோடக்
லிஸ்டில் கடைசியாக இருந்தாலும், குறைந்தவர் கிடையாது. கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குரான உதய் கோடக், உலகளவில் 129வது இடத்தில் உள்ளார்.
அவரது நிகர மதிப்பு $14.3 பில்லியன் ஆகும். அவரை “India’s richest self-made banker” என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
-----------------------------------------------------------------------
இரட்டை இலை.
வழக்குரைஞர் தற்கொலை.