நித்யானந்தாவின் சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகியிருப்பது அவர் இறந்துவிட்டாரா? 

 என்ற பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சர்ச்சை சாமியார் நித்யானந்தா, கடந்த மே மாதம் முதல் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தார். 

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், அவ்வப்போது அவரது முகநூல் பக்கம் மூலம், அவரது உடல் நிலை மற்றும் அவரது நிலை குறித்து தெரியவந்தது. 

அவர் நலமோடு இருப்பதாகவும் கூறப்பட்டது. அனைத்து பதிவுகளிலும் தனது உடல்நிலை சரியில்லை என்பதை மட்டும் நித்யானந்தா உறுதி படுத்தியிருந்தார். 

உணவு உட்கொள்ள முடியவில்லை, உறக்கம் இல்லை என்கிற பிரச்னையையும் அவர் தெரிவித்திருந்தார். 27 மருத்துவர்கள் கொண்ட குழு, தன்னை கண்காணித்து வருவதாகவும், விரைவில் குணமடைவேன் என்றும், அதுவரை சமாதியில் இருப்பேன் என்றும் நித்யானந்தா தெரிவித்து வந்தார்.

kailasa fb post raised many doubts as to whether he is dead

இந்த நிலையில் தற்போது கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், நித்யானந்தாவின் உற்சவர் சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் உற்சவர் சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் இறந்துவிட்டாரா? 

 என்ற பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. திடீரென நித்யானந்தா சிலைகளை பிரதிஷ்டை செய்து, அதற்கு நித்யானந்தேஷ்வரா இந்து கோயில் என்றும் பெயர் வைத்துள்ளனர். 

மேலும் சமாதியில் இருப்பதாக கூறி வந்த நித்யானந்தா ஜீவசமாதியாகி, அதன் பின்பே இந்த கோயில் வைக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது. கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.

அவரது உடல்நிலை தொடர்பான அறிக்கைகளோ, தகவலோ இடம் பெறவில்லை. இந்த நிலையில், திடீரென நித்யானந்தாவிற்கு கோயில் கட்டி, அதற்கு பூஜைகள் செய்யத் தொடங்கியிருப்பதை பார்க்கும் போது, உண்மையிலேயே நித்யானந்தாவிற்கு ஏதோ நடந்திருக்க கூடும் என்றே தெரிகிறது. 

நித்யானந்தா இல்லையென்றால், தற்போது கைலாசா யார் கட்டுப்பாட்டில் உள்ளது. யார் உத்தரவின் பேரில் கைலாசா இயங்குகிறது என்கிற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

 நித்யானந்தாவின் இழப்பை முறையாக அறிவித்தால், அவர்களின் பக்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதால், இது போன்ற செயல்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

ஆனால் கைலாசாவிலிருந்து உறுதியான எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



___________________________________-------_________


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?