அக்னிபாத்

  முக்கிய விபரம்

  • ஆள் சேர்ப்புக்கான வயது - 17 முதல் 21
  • கல்வித் தகுதி - 10வது அல்லது 12வது வகுப்பு தேர்ச்சி
  • பணிக்காலம் ஆண்டுகளுக்கு இருக்கும்
  • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு 25 சதவிகிதம் பேர் பணியில், நிரந்தரமாக்கப்படுவார்கள்.
  • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முறைப்படுத்தப்படும் ஜவான்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுவார்கள்.
  • முதல் ஆண்டு சம்பளம் மாதம் 30 ஆயிரம்
  • 4 - ஆவது ஆண்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

ராணுவத்தில் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.

வீரர்கள்

பட மூலாதாரம்I

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இந்திய இளைஞர்களிடையே மிக நீண்ட நாட்களாக வலுவாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேர் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். இந்த காலி பதவிகளுக்கு திறந்தநிலை ஆட்சேர்ப்புக்காக 100 க்கும் மேற்பட்ட முகாம்களை ராணுவம் நடத்துகிறது.

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு முறை 'டூர் ஆஃப் டூட்டி' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தொழில்முறை வீரர்களுக்குப் பதிலாக குறுகிய கால வீரர்களை நியமித்தால், அது திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும்,.நான்காண்டுகளுக்குப்பின் வெளியேற்றி விடுவதால் வேலையற்றவர்கள் எண்ணிக்கைதான் உயரும்.

சில வல்லுனர்கள் இந்த திட்டம் குறித்து உற்சாகமாக இல்லை. குறைந்த காலத்திற்கு இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்தால், 24 வயதாகும்போது அவர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள். இது நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தையே அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

சிலரோ ராணுவப் பயிற்சி மேற்கொண்ட பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களை உண்மையிலேயே நீங்கள் படையில் இருந்து வெளியேற்ற விரும்புகிறீர்களா? 



ஏற்கனவே வன்முறை அதிகரித்துள்ள அதே சமூகத்திற்கு இந்த இளைஞர்கள் மீண்டும் வருவார்கள். இந்த முன்னாள் ராணுவ வீரர்கள், போலீஸ் மற்றும் காவலராக மாற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் முன்பு இளைஞர்களுக்குகட்டாயம் ராணுவ பயிற்சி இருந்தது.அதனாலேயே துப்பாக்கி கலாச்சாரம் அங்கு தலை தூக்கியுள்ளது. அதுபோல் ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சி எடுத்துள்ளவர்கள் வேறு வேலை கிடைக்காத நிலையில் வேலையில்லாத இளைஞர்களின் 'போராளிகள் குழு' உருவாகிவிடுமோ என்ற அபாயம் உள்ளது  அச்சம் உருவாக்குகிறது என்கிறார்கள்.

----------------------------------------------------++----------------------வன சர்ப்பகந்தி

சிவப்பு நிற காய்களை கொண்டு வளரும் தாவரம் வகையைச் சேர்ந்தது வன சர்ப்பகந்தி. இது தூக்கமின்மை, மனம் சார்ந்த மற்றும் ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளை  இயற்கை முறையில் குணமாக்கும் அருமருந்தாக உள்ளது.

 இந்த அற்புத மருந்து நம்முடைய நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது.

வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கும் நல்ல மருந்தாக உள்ள இந்த வன சர்ப்பகந்தி இலையின்  சாறு சிவப்பு கலந்த பச்சை நிறமாக இருக்கும். டயட்

இந்த சாற்றை  30 மிலி அளவுக்கு எடுத்து, காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு என்று பருகி வந்தால், மனதோடு தொடர்புடைய வியாதிகள் குணமாகும்.

இவற்றை விழுது கொட்டைப்பாக்கு அளவு  எடுத்து காலை உணவுக்கு முன்பு மட்டும் சாப்பிட்டு வந்தால் மிகப்பெரிய அளவில் ஆரோக்கியம் மேம்படும்.

வன சர்ப்பகந்தியின் வேர் ரத்த அழுத்தத்தை சமன் செய்ய உதவுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், தாழ்ந்த ரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

உயர் ரத்த அழுத்தத்தினால் சிறுநீரக செயல் இழப்பு உண்டாகும். தாழ்ந்த ரத்த அழுத்தத்தினால் இதய பாதிப்பு, பார்க்கின்சன் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இது போன்ற பிரச்சனைகளை வன சர்ப்ப கந்தி சரி செய்கிறது.

வன சர்ப்ப கந்தி வேரில் சாறு அல்லது விழுது எடுத்து காலை ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

தூக்கமின்மையை போக்குகிறது

உலக  சுகாதார ஆய்வறிக்கைப்படி, தூக்கத்துக்கு அதிகமாக தயாரிக்கும் மருந்துகளில் இயற்கை முறையில் தூக்கத்தை வரவழைக்கும் மூலக்கூறுகள் வன சர்ப்பகந்தியில் உள்ளன என்று தெரிவிக்கிறது.

ஒரு டிஸ்பூன் வனசர்ப்ப காந்தி சூரணத்தை பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை குறையும்.

மன நோய்க்கு எந்த  மருத்துவ முறையாலும் தீர்க்க முடியாதது என்றாலும், இயற்கை முறையில் இதைத் தீர்க்கும் அருமருந்தாக வனசர்ப்பகந்தி உள்ளது.

கற்றலில் குறைபாடு இருக்கும் குழந்தைகள், ஐக்யூ இல்லாத குழந்தைகளுக்கு காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு வன சர்ப்பகந்தி சூரணத்தை கொடுத்து வந்தால் ஐக்யூ அளவு கூடும்.

--------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?