மோசடி ஆப்புகள்
டி.ஜி.பி. சைலேந்திர பாபு இ.கா.ப. வெளியிட்டுள்ள காணொளியில்,
"ஆன்லைன் Fraud- ஆ பத்தி தொடர்ந்து நாம பேசிட்டு இருக்கிறோம்.
இப்ப சமீப காலத்தில் சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு பயங்கரமான ஆன்லைன் மோசடி நடந்துக் கொண்டிருக்கிறது.
அப்லே பண்ண சொல்லும் போது ஒரு போட்டோ கேப்பாங்க.
அதே மாதிரி உங்களுடைய கான்டெக்ஸ் லிஸ்ட்ல நாலஞ்சு பேர சொல்லுங்க, அவங்களுடைய ஈமெயில் ஐடி கொடுங்க, கான்டெக்ட் டீடெய்ல்ஸ் கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு, லோன் அப்லே பண்ணுவீங்க.
ரூபாய் 3,000, ரூபாய் 4,000, ரூபாய் 5,000 என்று லோனும் உங்களுக்கு கொடுத்துடுவாங்க.
இப்போ நீங்க அனுப்பன போட்டோவ, அதை ஆபாசமாக சித்தரித்து உங்களுக்கு அனுப்பி, இந்த மாதிரி நீங்க 10,000 ரூபாய் கொடுத்துடுங்க. இல்ல, இந்த போட்டோவ உங்க கான்டெக்ட்ல இருக்கற அனைவருக்கும் அனுப்பிடுவோம்.
அப்படி, உங்களைப் பயமுறுத்தி ரூபாய் 10,000 வாங்குவாங்க. ரூபாய் 50,000 வாங்குவாங்க, ரூபாய் 1,00,000 வாங்குவாங்க.
அப்படி உங்களுக்கு நிம்மதி போயிடும். இந்த போட்டோவ மத்தவங்க பாத்தாங்கனா என்ன நினைப்பாங்க அப்படிங்கற மாதிரி உங்களுக்கு பயம் வந்திடும்.
அது உண்மையில்லை என்றாலும் மத்தவங்க நம்பமாட்டாங்க.
இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் உங்கள சிக்க வைச்சி, பிளாக் மெயில் பண்ணி நிறைய பணம் வாங்கற நிகழ்ச்சி நடந்திருக்கிறது.
நமது காவல்துறை அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துட்டு இருக்கிறார்கள். இந்த ஆப்ப எல்லாம் முடக்கறத்துக்கும் முயற்சிப் பண்ணிருக்கோம்.
ஆனால், தொடர்ந்து பல்வேறு விதமான ஆப் எல்லாம் தொடர்ந்து வந்துட்டு தான் இருக்கும். நீங்கள் இன்னில இருந்து ஏமாறக் கூடாது என்பதற்காக இந்த செய்தியை சொல்றோம்" என்று கூறினார்.
அத்துடன் மோசடி ஆப்களின் பெயர்களைப் பட்டியலிட்ட டி.ஜி.பி.,
Euvalt,
Masen Rupee,
Lory loan,
Wingo Loan,
cici Loan,
City loan
இந்த ஆப்கள் மோசடியான ஆப்கள். இந்த ஆப்களை எல்லாம் டவுன்லோடு பண்ணிடாதீங்க. ஒருவேளை பண்ணிடீங்கன்னா கூட, அத உடனே டெலிட் பண்ணிடுங்க. பாதுகாப்பாக இருங்க; இது தமிழக காவல்துறையினர் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------