இந்தி தெரிந்தால் தான் இந்தியரா?

 கார்ப்பரேட் உரையாடல் ஒன்றில் வட இந்திய இளைஞர்கள் இந்தியில் பேசியதை அடுத்து அவருக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழ் பெண் குறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியன் என்று இன்னும் பலர் அறியாமையில் இருக்கும் இளைஞர்களுக்கு கொடுத்த சரியான பதிலடியாகவே இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் பணிபுரியும் ஹேமா சங்கர் என்பவர் தனது உரையாடல் அனுபவத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கார்ப்பரேட் நிறுவனத்தின் கேள்வி-பதில் உரையாடலில் இரண்டு வட இந்திய இளைஞர்களிடம் இருந்து உரையாடல் தொடங்கியது. 

ஒரு இளைஞர் உரையாடலை இந்தியில் தொடங்கியபோது, எனக்கு இந்தி தெரியாது, உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியுமா? என்று கேட்டேன்.

அதற்கு அந்த இளைஞர்களில் ஒருவர் 'நீங்கள் இந்தியர் தானே பிறகு எப்படி இந்தி புரியாமல் இருக்க முடியும்? என்று பதிலளித்தார். 

அருகிலிருந்த இன்னொரு இளைஞர் அவர் ஒருவேளை தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று கிண்டலுடன் கூறினார்.

இதனையடுத்து அந்த தமிழ் இளைஞர்களிடம், 'நான் இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இருக்கும்போது இந்தி எனக்கு அவசியமில்லை. 

உங்களைப் போன்ற நபர்களுடன் பேசும் போது தான் இது போன்ற எரிச்சலூட்டும் கேள்விகள் எழுகின்றன என்று கூறினேன். மேலும் நான் உங்களுக்கு எங்களது முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை கூறிய கதை ஒன்றை கூறுகிறேன் என்று அந்த கதையை கூறினேன்.

ஒரு மனிதன் இரண்டு நாய்கள் வைத்திருந்தார். 

ஒன்று பெரிய நாய், இன்னொன்று சிறிய நாய். அந்த நாய்களை வீட்டில் இருந்து வெளியே செல்வதற்காக தனியாக இரண்டு கதவுகளை அவர் தயார் செய்தார். 

பெரிய நாய்க்குட்டிக்கு பெரிய கதவும், சின்ன நாய்க்குட்டிக்கு சின்ன கதவும் அவர் செய்து வைத்திருந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை முட்டாள் என கேலி செய்தனர். 

பெரிய கதவிலேயே சின்ன நாயும் செல்லலாமே? பின் எதற்காக இவர் பெரிய கதவை வைக்க வேண்டும் என்று கேட்டனர்.

அதேபோல்தான் உங்களுடைய வாதமும் இருக்கின்றன. 

உலகம் முழுவதும் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்தாம் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்றுத் தருகிறார்கள். 

அவ்வாறு இருக்க இந்தியாவில் உள்ள ஒரு பகுதி மக்களுடன் தொடர்பு கொள்வதற்கு மட்டும் ஏன் இந்தி மொழியை நான் கற்க வேண்டும்.க்ஷ

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலம் கற்பிக்கும் போது இந்தியாவில் உள்ள அனைவருமே ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தலாமே? பெரிய கதவாக ஆங்கிலம் இருக்கும்போது இந்தி என்ற சின்ன கதவு எதற்கு? என்று கூறினேன்.

 என்னுடைய பேச்சை கேட்டு இரு இளைஞர்களும் அமைதியாக இருந்தனர்' என்று ஹேமா சங்கர் பதிவு செய்திருந்தார். இந்தி தெரிந்திருந்தால் மட்டுமே இந்தியர் என்று ஒருசில வட இந்தியர்கள் பேசி வரும் திமிர் பேச்சுக்கு தமிழ் பெண் ஒருவர் பதிலடி கொடுத்த சம்பவம் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது பரவலாகி வருகிறது.

---------------------------------------------------------------------------


அக்னி பாத்

தீ(ய) ப் பாதை.

ராணுவத்தில் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.


ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இந்திய இளைஞர்களிடையே மிக நீண்ட நாட்களாக வலுவாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேர் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். இந்த காலி பதவிகளுக்கு திறந்தநிலை ஆட்சேர்ப்புக்காக 100 க்கும் மேற்பட்ட முகாம்களை ராணுவம் நடத்துகிறது.

அக்னிபாத்' திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதில் சேரும் 25% இளைஞர்கள் பின்னர் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதாவது 100ல் 25 பேருக்கு முழு நேர சேவைக்கான வாய்ப்பு கிடைக்கும்.




நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 45000 இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கூறினார். ராணுவத்தின் அக்னிவீரர்களில் பெண்களும் சேர்க்கப்படுவார்கள் என்றார் அவர்.


அக்னிபாத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட இளைஞர்கள், நிரந்தர வேலையை பெற ஆறு மாதங்கள் பயிற்சி பெற வேண்டும்.


அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு 4 லட்சத்து 76 ஆயிரத்திலிருந்து 6 லட்சத்து 92 ஆயிரம் வரை உயர்த்தப்படும். இந்தத் திட்டத்தை அறிவித்த ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, சம்பந்தப்பட்ட அனைவருடனும் விரிவான விவாதம் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.


அடுத்த 90 நாட்களுக்குள் அதாவது மூன்று மாதங்களுக்குள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தொடங்கும்.


ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான இந்தியா நெடுகிலுமான, தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்புத் திட்டம் 'அக்னிபாத்' என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இளைஞர்களுக்கு ஆயுதப்படையின் வழக்கமான கேடரில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும்.


பயிற்சிக் காலம் உட்பட 4 வருட சேவைக் காலத்திற்கு நல்ல நிதிப் பேக்கேஜூடன் பணியமர்த்தப்படுவார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மையப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான வழிமுறைகளின் அடிப்படையில் 25% அக்னிவீரர்கள் முறைப்படுத்தப்பவார்கள். இதில் சேர ஆர்வம் உள்ளவர்கள், வழக்கமான கேடரில் ஆட்சேர்ப்புக்கு தாமாக முன்வந்து விண்ணப்பிக்கலாம்.



"ஊதியம், ஆண்டுக்கு 4 லட்சத்து 76 ஆயிரத்திலிருந்து 6 லட்சத்து 92 ஆயிரம் வரை உயர்த்தப்படும். நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தபிறகு இதில் சேர்ந்த அனைவருக்கும், 'சேவா நிதி' என்ற ஒட்டுமொத்த நிதி பேக்கேஜூம் உள்ளது,"


அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேசம், பீகார் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ரெயில்களுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் தலைநகர் ஜெய்பூரில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நாடு முழுவதும் 200 ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

 போராட்டம் காரணமாக 35 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, 12 ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அக்னிபத்துக்கு எதிராக பீகாரில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

பீகார் துணை முதல்-மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான ரேணு தேவியின் வீட்டில் கார்களை சேதப்படுத்தியுள்ளனர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கிறது. பீகார், மொகியுதிநகர் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

 பீகார், தும்ரான் ரெயில் நிலையத்தில் ரெயில் பாதைகளை மறித்து, டயர்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரெயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரெயிலை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில், தெலுங்கானா மாநிலம் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக செகந்திரபாத் ரெயில் நிலையத்திலும் ரெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். பயணிகள் ரெயிலை தீ வைத்து எரித்ததுடன் ரெயில் நிலைய கடைகளையும் போராட்டக்காரர்கள் சூறையாடி உள்ளனர். 

வடமாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலமான தெலுங்கானாவிலும் போராட்டம் பரவியுள்ளது.

டூர் ஆஃப் டூட்டி முறையை கைவிட வேண்டும், முன்பு இருந்த முறையிலேயே ஆட்சேர்ப்பை நடத்த வேண்டும். 4 ஆண்டுகளுக்கு மட்டும் யாரும் ராணுவத்தில் சேரமாட்டார்கள்"என்றார்கள்.

-------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?