"விக்றோம்"
"தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது".
இதற்கான விளம்பரங்களை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதாகவும்.
தூத்துக்குடி சுற்றி உள்ள கிராம மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
மக்களின் நீண்ட நாள் எதிர்ப்பு கடந்த 2018ம் ஆண்டு கடும் போராட்டமாக மாறியது.
மேலும் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுகொல்லபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரசாணைப்படி ஸ்டெர்லைட் ஆலை 2018ம் ஆண்டு மே 28ம் தேதி மூடப்பட்டது.
கொரோனா காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக கடந்த ஆண்டு3 மாதங்கள் மட்டும் ஆலை இயங்கியது.
மேலும் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதிகேட்ட வேதாந்தா மனு உச்சநீதிமன்றத்தில்தமிழ்நாடு அரசு எகடுமையான எதிர்ப்பால் தள்ளுபடி யானது
.
பலநாட்கள் ஓடாத நிலையில் எந்திரங்கள் துருவேறி பழுதான நிலையில் பராமரிக்கவும் இயலாத நிலையில்ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆலையை வாங்க விருப்பமுள்ளோர் ஜீலை 4ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணபிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நஞ்சு ஆலையை வாங்குபவர்கள் தாமிரம் தயாரிக்க முடியாது என்ற நிலை.
ஆக்சிஜன் தயாரிக்க, மின் உற்பத்திக்கு என்ற பகுதிகளை மட்டுமே இயக்க முடியும்.
அப்பகுதியில் வேதாந்தா குவித்து வைத்துள்ள ஆபத்தான ரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கே பெருஞ் செலவாகும்.பெரும்பணியாகவும் இருக்கும்.
அந்த அளவு மாசு கட்டுப்பாடு திட்டங்களை வேதாந்தா புறக்கணித்துள்ளது.
இந்த ஆலை விற்பனையில் வேறு ஐயங்களும் தோன்றுகின்றன.
தடை செய்யப்பட்ட நச்சு ஆலையை வேறு யார் வாங்க முன் வருவார்கள்.பழுதான, துருவேறிய இவைகளை பழைய இரும்பு வியாபாரிகள்தான் வாங்கும் நிலை.
மக்களையும், சட்டத்தையும் ஏமாற்றி வேதாந்தாவே வேறு நிறுவனம் பெயரிலோ.
பினாமி நிறுவனம் மூலமாக விற்றதாகக் கூறிஆலையை புதுப்பித்ததாகவும்,சட்டதிட்டப்படி நடத்துவதாக கூறி ஏமாற்றலாம்.
அதற்கும் வாய்ப்புள்ளது.
காரணம் அனில் அகர்வால் தொழிலே, உயர்வே விதிகள், சட்டம் மீறலும்,மக்களை ஏமாற்றுவதும் தான்.
--------------------------------------------------------------------------------