"மோதல்கள்"
மோதல்_1.
இந்த முறை மத்திய பாஜக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
பிறகு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் கால்பதித்தார். பாஜகவில் இணைந்து செயல்பட்டார். பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார்.
பிறகு அவர் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.
தேர்தலில் விற்பதற்காக அக்கட்சியில் இருந்து தற்போது விலகியுள்ளார்.
இந்நிலையில் தான் இவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) சார்பில் திரெளபதி முர்மு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்.
இவர் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார்.
இவர் பாஜகவில் அரசியல் பிரவேசம் செய்து கவுன்சிலர் முதல் மாநில அமைச்சர் வரை பதவி வகித்தார்.
அதன்பிறகு ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார்.
இவர் தலித் என்று கூறி வெல்லலாம் என பா.ஜ.க.எண்ணுகிறது.
தற்போதையகுடியரசுத்தலைவரும் தலித்துதான்.ஆனால் அதனால் என்ன பயன்?
அவரையே கோவிலுக்குள் வரத் தடை.R.K.நாராயணன் தலித்.அவரையும் கோவில் உள்ளே வரவிடவில்லை.காரணம் சனாதன தர்மம்.
தலித் தை குடியரசுத்தலைவராக்குகிறோம் என்ற பேச்சு மக்களை ஏமாற்றத்தான்.மற்றபடி அவர் வெறும் தலையாட்டி பொம்மை தான்.ரப்பர் ஸ்டாம்புதான்.
இந்த வேலைக்கு தலித் போனால் என்ன? பார்ப்பர் போனால் என்ன இருவர் வேலையும் மோடிகாகு தலையாட்டுவதுதான்.
ஆனால் எதிர்தரப்பில் இருந்து போனால் மக்கள் விரோத மசேதாக்கள் நிறைவேற்ற,சட்டமாக்க மோடி ஒன்றிய அரசு சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
- மோதல்_2
- பொதுக் குழுவில் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரு மேடையில் அமர்ந்திருந்தனர். இருப்பினும் பன்னீர் செல்வத்திடமும் வைத்திலிங்கத்திடமும் யாரும் பேசாமல் இருவரும் தனித்தே அமர்ந்திருந்தனர்.
- சி.வி. சண்முகம் இந்த பொதுக் குழு 23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறது என்று பேசினார். அவரை அடுத்து வந்த கே. பி முனுசாமியும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார்.
- வைகைச்செல்வன் பேசியபோது தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ் மகன் உசைனை நிரந்தர அவைத் தலைவராக்க வேண்டும் என்று முன் மொழிந்தார்.
- அந்த முன் மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழ் மகன் உசைனை அவைத் தலைவராக நியமிக்கும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இந்த தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது.
- பின் மீண்டும் மேடைக்கு வந்து பேசிய சி.வி. சண்முகம், ஒற்றைத் தலைமைதான் தேவை என்று வலியுறுத்தி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் ஒப்படைத்தார். அடுத்த பொதுக் குழுவிற்கான தேதியை இந்த கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- இதனை ஏற்றுக் கொண்டு நிரந்தர அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசைன் உடனடியாக அடுத்த தேதியை அறிவித்தார்.
- மேடையில் பேசிய அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் பேசினர்.
- ஒரு கட்டத்தில் கூச்சல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஓ. பன்னீர் செல்வமும், அவருக்கு ஆதரவு அளிக்கும் வைத்திலிங்கமும் மேடையைவிட்டு இறங்கி பொதுக் குழுவிலிருந்து வெளியேறினர்.
- ஓபிஎஸ் மேடையை விட்டு இறங்கும்போது அவர் மீது பாட்டில் வீசப்பட்டது. ஓபிஎஸ் புறப்பட்டபோது வழி நெடுகிலும் ஓபிஎஸ் ஒழிக என தொண்டர்கள் கோஷமிட்டனர்.
- பொதுக் குழுவிலிருந்து வெளியேறிய வைத்திலிங்கம், 'கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்' என தெரிவித்தார். அதைப்போல அடுத்த பொதுக் குழுவிற்கான தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் அவர் தெரிவித்தார்.
- முன்னதாக, அதிமுகவின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் சார்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை இன்று அதிகாலை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்தனர்.
- விசாரணைக்கு பின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தும் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர, புதிய தீர்மானங்களை கொண்டுவரக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.