குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளித்ததாகக் கூறி சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்டை பழிவாங்கும் நோக்கில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீஸ்தா, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி – அமித்ஷா கும்பலின் இந்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தால் இஸ்லாமியர்கள் 2000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வரும் குஜராத் கலவரத்தை தலைமையேற்று நடத்திய மோடி உள்பட 64 பேரை விடுவித்தது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஜாப்ரி மனைவி, ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்-ம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன்மூலம் 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு சிறப்பு விசாரணை குழு க்ளீன்சீட் வழங்கி உள்ளதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து அவர்களைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, தீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்.ஐ.டி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே, மும்பையிலிருந்த தீஸ்தா செதல்வாட்-ஐ குஜராத் மாநில போலீசு கைதுசெய்து அவரை குஜராத் அழைத்துச் சென்றுள்ளது.
மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி – அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, பீமாகோரேகன் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களின் கணினிகளை முன்னரே ஹேக் செய்து; அதில் பொய்யான கடிதங்களை வைத்து, அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களில், ஒருவரான நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு உறிஞ்சி குடிக்க ஸ்ட்ரா கூட தடைவிதிக்கப்பட்டு அரசு பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்டார்.
ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றோர் பேராசிரியர் சாய்பாபா, கொரோனா தொற்றுநோயால் இரண்டுமுறை பாதிக்கப்பட்டார். எனினும் அவர் இப்போதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆனந்த் டெல்டும்டே பலவேறு நோய்களால் பாதிக்கப்பட்டபோதும் அவரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
ஆந்திராவின் புரட்சிக்கவிஞர் வரவரராவ் தன்னுடைய மருத்துவ பரோல் முடிந்து மீண்டும் சிறை செய்வதற்காக காத்திருக்கிறார்.
அந்த வரிசையில் தீஸ்தா செதல்வாட் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக, சிறுபான்மை மக்களுக்காக, பழங்குடியின – தலித் மக்களுக்காக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் பயங்கரவாதிகளாக்கப்பட்டு சட்டத்தின்முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள்.
இதையெல்லாம் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன அல்லது அரச பயங்கரவாதத்தின் ஒரு பிரிவாகவே மாறிப் போயிருக்கின்றன.
இந்த நாட்டின் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக, அவர்கள் படுகொலை செய்யும்பொழுது அதற்கு எதிராக போராடிய -குரல் கொடுத்த- அறிவுஜீவிகள், தலைவர்கள் ஒவ்வொருவராக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
நாடு மீளமுடியாத காவி பாசிச இருளில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு எதிராக சிந்திக்கும் அனைவருக்குமான இடம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.
இந்து சாமியார்கள் மாநாட்டில், முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதை முகமது ஜுபைர் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
இதற்காக உ.பி. போலீசார் படுகொலை செய்ய வேண்டும் என்ற சாமியார்களை விட்டுவிட்டு அதை எதிர்த்து எழுதிய அவர் மீது வழக்கும் பதிவு செய்திருந்தனர். பல்வேறு போலி செய்திகளின் உண்மை தன்மையை அம்பலப்படுத்தியதால் வலதுசாரிகளால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார் முகமது ஜுபைர்.
குறித்து அந்நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா கூறுகையில், முகமது ஜுபைர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டில்லிக்கு அழைக்கப்பட்டார்.
ஆனால் இந்து மத உணர்வுகளை 2018 ல் அவர் வெளியிட்ட டுவிட்டர் புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மேலும் அதுகுறித்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் முதன்மை தகவல் அறிக்கையின் நகல் எங்களிடம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை தரப்பில், ஜுபைர் இந்த வழக்கில் விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் பதிவில் போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் காவலில் வைக்க நாளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.
முகமது நபியை பற்றி அசிங்கமாகப் பேசி உலக அளவில் இந்தியாவை காரித்துப்பச் செய்த பா.ஜ.க. நுபுல்சர்மா வெளியே வெட்கமின்றி காவல் துறையால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு. திரிகிறார்.
இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் அதை விமர்சித்து காவி பாசிசத்தை எழுதியவர் வேறு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவி பாசிச ஆட்சிதான் பா.ஜ.க. ஆட்சி என்பதை இந்நடவடிக்கை உறுதி செய்கிறது.
வல்லரசுகள்? அயதுல்லா கமேனி கொல்லப்பட்ட செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, உலக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காய்கள் வேகமாக நகரத் தொடங்கிவிட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு 'பதிலடி' கொடுக்க ரஷ்யாவும் சீனாவும் தங்களது ரகசியத் திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இது வெறும் ஈரான் பிரச்சனை மட்டுமல்ல, ஆசியாவில் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான வாழ்வா சாவா போராட்டம்! புதின் சும்மா இருப்பாரா? தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை "ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு" எனக் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐநா பாதுகாப்பு சபையில் (UN Security Council) அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா ஏற்கனவே தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. உக்ரைன் போரில் ஈரானின் ட்ரோன்கள் ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் உதவின. அதற்குப் பிரதிபலனாக, இப்போது ஈரானின் பாதுகாப்புக்குத் தேவையான அதிநவீன S-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை ரஷ்யா ரகசியமாக அனுப்பக்கூடும் என உளவுத் துறைகள் அஞ்சுகின்றன. ஈரானின் அணுசக்தி ம...
தே சிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் சொல்கிறார் மோடி. ஆனால் உண்மை? திமுகவுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து என்.டி.ஏ. கூட்டணிதான் அதிர்ச்சி அடைந்துள்ளது. மக்கள் நல திட்டங்களால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் அலை அடிக்கிறது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லும் என்று நம்மூர் கருத்துக்கணிப்புகள் மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய கணிப்புச் சந்தையான பாலி மார்க்கெட்டும் தனது கணிப்பை சொல்லி இருக்கிறது. மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பது தெரிந்ததால்தான் தவெக பக்கம் தாவ இருந்த காங்கிரஸ் கூட திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது. தேமுதிக உள்ளிட்ட புதுப்புது கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வந்திருக்கின்றன. திமுக கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. 28 கட்சிகளை கூட்டணியில் வைத்து பிரம்மாண்டம் காட்டும் திமுக, திருச்சியில் நேற்று 10 லட்சம் தொண்டர்களை திரட்டி பிரம்மாண்ட மாநில மாநாடு நடத்தி இருக்கிறது. ...
தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...