"வாய் கொழுப்பு"

 பா.ஜ.க வினரின் மத வெறியால்பாதிக்கப்படும்

அப்பாவி இந்துக்கள்.

நபிகள் நாயகம் குறித்து நவீன் குமார் ஜிண்டால் மற்றும் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தனர்.

நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். 

அவரை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார்.

பிரதமர் மோடியே இவரை ட்விட்டரில் பாலோ செய்து வருவதும் அவ்வப்போது அவரின் பேச்சைப் பாராட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்து - இந்தியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!

. பாரதி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா அண்மையில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.

அப்போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை கூறினார். 

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் கிளம்பியது.

அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.

இந்த கலவரத்தைத் தொடர்ந்து கைது,வழக்கு நடவடிக்கைகள் முழுவதும் முஸ்லீம்கள் மீது மட்டும் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் இவர்களின் கருத்துக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார்,துபாய்,மற்றும் ஈரானிய துாதர்களை நேரில் அழைத்த அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து அந்நாட்டு அரசு அதிகாரிகளை சந்தித்த ​​இந்திய தூதர் "வருத்தம் தெரிவித்ததோடு, நபிகள் நாயகத்திற்கு எதிரான எந்தவொரு அவமதிப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,

இந்தியா அனைத்து மதங்களுக்கு மரியாதை கொடுக்கும் என்றும் இது அரசின் நிலைபாடு இல்லை. ஜிண்டால் அரசாங்கத்தில் எந்தப் பதவியும் இல்லை என்றும்,

அந்தக் கருத்துக்களைக் கூறியதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் இந்தியத் தூதர் கூறினார்.

உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதாக தெரிவித்தது கண்டனங்களை பதிவு செய்தது.

இந்தியாவுக்கான துாதர் சிபி ஜார்ஜை வரவழைத்து கண்டனங்களை பதிவு செய்துள்ளது. 

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி மக்களை துாண்டிவிடுவதாக குற்றம்சாட்டினார்.இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றுள்ளனர்.

இந்த கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்

"நமது அன்பிற்குரிய நபிகள் நாயகம் (ஸல்) பற்றி இந்தியாவின் பாஜக தலைவர் புண்படுத்தும் கருத்துக்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

மோடியின் கீழ் இந்தியா மதச் சுதந்திரத்தை மிதித்து, முஸ்லிம்களை துன்புறுத்துகிறது என்று பலமுறை கூறி வருகிறேன். 

உலகம் இந்தியாவைக் கவனிக்க வேண்டும் மற்றும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

எங்கள் அன்பு. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக உயர்ந்தவர். 

அனைத்து முஸ்லிம்களும் தங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அன்பு மற்றும் மரியாதைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 அடுத்த வாரம் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தார். இந்திய துாதரை நேரில் வரவைழைத்து கண்டம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு அரசு,



துணைக்குடியரசுத்தலைவர் வெங்கய்யா.வுக்கு அளிக்க இருந்த விருந்தை குவைத் நிறுத்தி விட்டது. கத்தாரில் மேற்கொள்ள இருந்த முக்கியமான மீட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது நுபுரின் சொந்த கருத்து என்று கூறி பா.ஜ.க. தப்ப இயலாது.

நுபுர் பா.ஜ.க.வின் எண்ணங்களைத் கூறும்.செய்தி தொடர்பாளர்.

இந்தியா  இருக்கும் நிலையில் இந்தியா  பாரதிய ஜனதா கட்சியினர் பேசும் பேச்சுகள் அனைத்தும் அதை மேலும் இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய பாரதிய ஜனதா நபியை இழிவாக பேசியதால் வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்தியா மீது கோபத்தில் இருக்கின்றனர் .

இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும் பெரும்பாலான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிவது கேள்விக்குரிய நிலை ஆகிவிடும் .

தங்கள் மற்ற மதத்தினரை வாய்க் கொழுப்பாக பேசுவதை பாரதிய ஜனதா கட்சி அடக்கி வைத்தால் நன்றாக இருக்கும்.

 ஏற்கனவே உலகத்தில் முஸ்லிம்கள் தான் அதிக மக்கள் தொகை கொண்ட  இனமாக இருக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் மத வெறி பேச்சுக்கள்,நடவடிக்கைகள் முழுக்க இந்தியாவின் நிலையாகக் தான் உலக நாடுகள் எடுத்துக்கொள்ளும்.

உலக நாடுகள் முன் இந்தியாவை தலை குனிய வைக்கும்.


சவூதி அரேபியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இந்துக்கள் பணி நீக்கமும் கட்டாய விடுப்பும் செய்யப்படுவதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்த 7 பேருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதாக சக இந்திய ஊழியர் தெரிவித்துள்ளார். 
அதேபோல், அங்கு தச்சர் வேலை செய்து வரும் இந்தியருக்கு தான் வழங்கிய ஸ்பான்சர்சிப்பை ரத்து செய்துவிட்டதாக அரபி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சால் இதுபோல் அப்பாவி இந்துக்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?