மோசமான விளைவுகள்
மே மாத முக்கியத் தலைப்புகள்
10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை இந்தியா எட்டியது:
2018 ஆம் ஆண்டு 'உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கையை (National Policy on BioFuel) மத்திய அரசு அறிவித்தது. இதில், 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும், ஊக்கமளிக்கும் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, 20 % எத்தனால் கலவை இலக்கு 2030, முன்கூட்டியே 2025-26 –க்கு 25 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனால் கலப்படத்திற்கான வழிமுறை ஜூன் 2021 இல் பிரதமரால் வெளியிடப்பட்டது. இது 20% எத்தனால் கலவையை அடைவதற்கான விரிவான பாதையை வழங்குகிறது. நவம்பர் 2022 க்குள் 10% கலவையை அடைய வேண்டிய இடைநிலை மைல்கல்லையும் இது குறிப்பிடுகிறது.
இந்நிலையில், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக, திட்டத்தின் கீழ் 10% கலப்பு இலக்கானது 2022 நவம்பர் இலக்கு என்னும் காலக்கெடுவை விட மிகவும் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது.
கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது:
தமிழ் திரையுலகில் சிறந்துவிளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்காக, புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (90) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு:
திருவனந்தபுரத்தில் தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு-2022 நடைபெற்றது.
இந்தியா கவுரவத்திற்குரிய நாடு:
பிரான்சில் நடைபெற்ற 75-வது கேன்ஸ் திரைப்படவிழாவின் இடையே நடைபெறும் மார்சே டு பிலிம் (Marche’ Du Film) எனப்படும் திரைப்பட சந்தையில், அதிகாரபூர்வ ‘கவுரவத்திற்குரிய நாடு’ அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
“மார்சே டு பிலிம் திரைப்படசந்தையில், அதிகாரபூர்வ ‘கவுரவத்திற்குரிய நாடு’அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
17-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா:
அமிர்த சரோவர்:
மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா:
NATGRID: பெங்களூருவில் தேசிய புலனாய்வு அமைப்பை (NATGRID) திறக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வருவாய்: சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மொத்த வருவாய் மே 2022-ல் ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைவிட 44% அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 2021-ல் ரூ.5,592 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் மே 2022–ல் 41% அதிகரித்து ரூ.7,910 கோடி வசூலாகியுள்ளது
பாலைவனமாதல்: கோட் டி’ஐவரியில் நடைபெற்ற பாலைவனமாதலை தடுக்கும் ஐ.நா சபையின் (UNCCD) மாநாட்டின் பதினைந்தாவது அமர்வில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா உடன்படிக்கை நாடுகளின் 14-வது அமர்வை புதுதில்லியில் நடைபெற்றது.
பா.ஜ.க. பேச்சால்
ஏற்படும்
மோசமான
விளைவுகள்.
நுபுர் சர்மா பேச்சுக்கு எதிராக ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 15க்கும் அதிகமான நாடுகள் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
சரி இந்தியா அரபு நாடுகளை எந்த விஷயங்களில் எல்லாம் சார்ந்துள்ளது தெரியுமா..?
இந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆதாரங்கள் இல்லை என்பதால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகளை நம்பி மட்டுமே இந்தியா இயங்கி வருகிறது. நுபுர் சர்மா போன்றோரின் பேச்சு அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் ஒரு மாதம் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினால் போதும் இந்தியா மொத்தமும் முடங்கிவிடும் நிலை உள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா GCC நாடுகளிடம் இருந்து சுமார் 110.73 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதேபோல் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இதைத் தாண்டி GCC நாடுகளில் அதாவது கல்ப் நாடுகளில் இந்திய மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்தியாவின் மொத்த 32 மில்லியன் என்ஆர்ஐ-களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர
நுபுர் சர்மா போன்றோரின் பேச்சுக்கு அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் எரிபொருள் தடை செய்வது மட்டும் அல்லாமல் பல கோடி பேரை வேலையை விட்டு நீக்க முடியும். இவர்களுக்கு இந்திய அரசால் வேலைவாய்ப்பு கொடுக்க முடியுமா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
இதேபோல் தற்போது நுபுர் சர்மா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 15க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றும் என்ஆர்ஐகள் இந்தியாவுக்கு அனுப்பும் பல பில்லியன் டாலர் பணம் இழப்பு ஏற்படும். 2021ல் மட்டும் 87 பில்லியன் டாலர் பணம் வெளிநாட்டில் இருந்து ரெமிட்டன்ஸ் கிடைத்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இது நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக இருந்தது. இருதரப்பு மொத்த வர்த்தகம் முந்தைய நிதியாண்டில் 22 பில்லியன் டாலரிலிருந்து 2021-22ல் சுமார் 43 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
2021-22ல் இந்தியாவின் 31வது பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக உள்ளது. ஓமன் நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 5.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021-22ல் சுமார் 10 பில்லியன் டாலராக அஅதிகரித்துள்ளது.
இந்தியாவுடனான இருவழி வர்த்தகம் 2020-21ல் 1 பில்லியன் டாலரில் இருந்து 2021-22ல் 1.65 பில்லியன் டாலராக இருந்தது.
vஈரானுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 2.1 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021-22ல் 1.9 பில்லியன் டாலராக இருந்தது.
இதேபோல் இந்தியா சமையல் எண்ணெய்க்கு அதிகளவில் நம்பியிருக்கும் நாடுகளில் இந்தோனேஷியா மிகவும் முக்கியமான ஒன்று, சமீபத்தில் இந்தோனேஷியா சில நாட்கள் மட்டுமே பாமாயில் ஏற்றுமதி தடை செய்த போது இந்தியா எந்த அளவிற்குப் பாதிப்புகளை எதிர்கொண்டது என்பதைப் பார்த்தோம்.
இந்தியா தனி நாடாக இயங்க முடியாது, எண்ணெய்க்கு ஒரு நாடு, ஆயுதத்திற்கு ஒரு நாடு, தொழில்நுட்பத்திற்கு ஒரு நாடு எனப் பலவற்றில் பல நாடுகளை நம்பி உள்ளது.