பள்ளி கல்வி ஊழல்
தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பார்த்தா சாட்டர்ஜி, மாநில பள்ளிப் பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பார்த்தா சாட்டர்ஜி முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவர் ஆவார்.
பல்வேறு முக்கிய இலாகாக்களைக் கையாளும் ஒரு முக்கிய (ஹெவிவெயிட்) அமைச்சராக இருப்பதைத் தவிர, பார்த்தா சாட்டர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் பதவிக்குப் பிறகு மிக முக்கியமான கட்சிப் பதவி இது.
கொல்கத்தாவின் மிக முக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவரும், கொல்கத்தாவின் பெஹாலா பாஸ்கிம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கபட்டவருமான 69 வயதான பார்த்தா சாட்டர்ஜி, மேற்கு வங்க கட்சி ரீதியிலான விவகாரங்களைக் கையாளும் போது மம்தாவின் “நம்பிக்கைக்குரிய” தலைவராக இருந்து வருகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டக் குழுக்களின் அரசியலமைப்பு முதல் தேர்தல் உத்திகளை உருவாக்குவது வரை, ஒட்டுமொத்த கட்சி நிறுவன விஷயங்களில் பார்த்தா சாட்டர்ஜி முக்கிய பங்கு வகிக்கிறார். கட்சியின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
முக்கியமான கட்சிப் பதவி இது.
கொல்கத்தாவின் மிக முக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவரும், கொல்கத்தாவின் பெஹாலா பாஸ்கிம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கபட்டவருமான 69 வயதான பார்த்தா சாட்டர்ஜி, மேற்கு வங்க கட்சி ரீதியிலான விவகாரங்களைக் கையாளும் போது மம்தாவின் “நம்பிக்கைக்குரிய” தலைவராக இருந்து வருகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டக் குழுக்களின் அரசியலமைப்பு முதல் தேர்தல் உத்திகளை உருவாக்குவது வரை, ஒட்டுமொத்த கட்சி நிறுவன விஷயங்களில் பார்த்தா சாட்டர்ஜி முக்கிய பங்கு வகிக்கிறார். கட்சியின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
பார்த்தா சாட்டர்ஜி அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆண்ட்ரூ யூல் நிறுவனத்தில் மனிதவள நிபுணராக பணியாற்றினார். மம்தா பானர்ஜி காங்கிரஸில் இருந்து விலகி 1998 இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய பிறகு, பார்த்தா சாட்டர்ஜி கட்சியில் சேர்ந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அவர் 2001 இல் பெஹாலா பாஸ்சிமில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதன்பிறகு தொடர்ந்து அந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வருகிறார்.
2006 முதல் 2011 வரை சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பார்த்தா சாட்டர்ஜி இருந்தார்.
2011 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் அகற்றி அதன் அரசாங்கத்தை அமைத்தபோது, தேர்தலில் 59,021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பார்த்தா சாட்டர்ஜி, மம்தா அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
பார்த்தா சாட்டர்ஜி வர்த்தகம் மற்றும் தொழில், பொது நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகளுக்கு மம்தாவால் அமைச்சராக்கப்பட்டார். பின்னர் அவர் சட்டசபையின் துணைத் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டார்.
பார்த்தா சாட்டர்ஜி மாநிலக் கல்வி அமைச்சராக இருந்தபோதுதான் மாநில பள்ளிப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் தொடக்கக் கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. தகுதிப் பட்டியலில் இடம் பெறுபவர்களுக்குப் பதிலாக, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணப் பலன்களுக்கு ஈடாக வேலை கிடைப்பதை உறுதி செய்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை பார்த்தா சாட்டர்ஜி எதிர்கொள்கிறார்.
பார்த்தா சாட்டர்ஜி, அவருடைய நெருங்கிய பெண் கூட்டாளியான அர்பிதா முகர்ஜி, இரண்டு அமைச்சர்கள், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் முன்னாள் உதவியாளர்கள் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இதில், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் தோண்டத் தோண்ட பணம் கிடைத்தது. அவருடைய வீட்டில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் கண்டெடுக்கப்பட்டது.
வங்கி அதிகாரிகள் உதவியுடன், பணம் எண்ணும் இயந்திரங்கள் வாயிலாக அவை எண்ணப்பட்டன.
மொத்தம், 21 கோடி ரூபாய் பணம் மட்டும் கிடைத்துள்ளது.
இதைத் தவிர நகைகள், ஆவணங்கள் என பெரிய அளவில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன; அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, 26 மணி நேர விசாரணைக்குப் பின், பார்த்தா சாட்டர்ஜியும் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மோசடி வழக்கில் மாநில மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளது, ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
_----------------------------------------------------------------_
தமிழக அரசு பள்ளிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் பள்ளிகளில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக சிஇஓவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதாவது மாணவர்களிடையே மோதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை, பற்றாக்குறை,மாணவர் சேர்க்கை மற்றும் உள்ளூர் விடுமுறை விடுதல் உள்ளிட்டவற்றை சிஇஓ அனுமதி பெற்று பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.மாணவர்கள் மோதிரம் அணியவும் ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும் மாணவர்களை சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் வெளியே அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.