இந்தியன்.
கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசர வைத்திருப்பார் கமல்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
பின்னர் 2 ஆண்டுகள் கழித்து தான் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இப்படத்தில் கமலுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தமானது.
கடந்த 2019-ம் ஆண்டு இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடத்தப்பட்டது. இதன்பின்னர் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர்.
கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை.
இதையடுத்து இயக்குனர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கோர்ட் வரை சென்றதால் இப்படம் கிட்டத்தட்ட கைவிடப்படும் சூழலுக்கு சென்றது.இந்நிலையில், இந்தியன் 2 படம் மீண்டும் உயிர்பெற்று உள்ளது. இதற்கு காரணம், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தான். அவர் தற்போது இப்படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
லைகா நிறுவனத்துடன் சேர்ந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் கமல் இந்தியன் தாத்தா கெட் அப்பில் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.அதுமட்டுமின்றி இன்று முதல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள எழிலகத்தில் இன்று முதல் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
------------------------------------------------------------------
எதிர்க்கட்சித் தலைவராக வளர்ந்த விஜயகாந்த், தமிழக அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது எப்படி?
அவர் நடிக்கத் தொடங்கி சில காலத்திலேயே, அவருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் விஜயகாந்த். தனது சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென்று 25 லட்சம் ரூபாய் ஒதுக்குவது, இலவச தையல் மிஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது என்று பல நற்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அவர் அரசியலுக்கு வருவதற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், பாமக உறுப்பினர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இடையிலான மோதல் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆரம்பத்தில் ஒவ்வோர் ஊராகச் சென்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கத் தொடங்கினார்.
பிறகு, 2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.
அவருடைய மாநாட்டில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டார்கள். கட்சியின் பெயர், நோக்கம், கொள்கைகளை அறிவித்தார். ஊழலை ஒழிப்பு, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று ஆகியவை அந்த கொள்கை அறிவிப்பில் முக்கியமாக இடம் பெற்றன.
தேமுதிக 2006 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எதுவும் ஏற்படுத்திக் கொள்ளாமல், 232 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து போட்டியிட்டவர்களில் யாரும் மக்களிடையே பெரியளவில் அறிமுகம் இல்லாதவர்கள்.
இருந்தும், அதில் 8.45 சதவீத வாக்குகளைப் பெற்று, இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் பாமகவுக்கும் விஜயகாந்த் அதிர்ச்சியளித்தார்.
அப்போது திமுகவின் பிரம்மாண்ட வெற்றியைக் குலைத்ததும் அதிமுகவின் தோல்விக்கு காரணமானதும் தேமுதிக பெற்ற வாக்குகளே காரணமென்று சொல்லப்பட்டது.
சுமார் 100 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக தேமுதிகவின் வாக்குகள் இருந்தன. விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் பாமகவை சேர்ந்த கோவிந்தசாமியை தோற்கடித்து முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக கணிசமான வாக்குகளைப் பெற்றது.
இந்த நேரத்தில் பாலம் அமைப்பதற்காக விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்தி இடிக்கப்பட்டது. தன் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக இப்படி செய்வதாகக் கடுமையாக விமர்சித்தார் விஜயகாந்த்.
2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தனித்தே தேமுதிக போட்டியிட்டது. அதில் 10.45 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்துதான் தேதிமுகவின் வீழ்ச்சிக்கான வித்து போடப்பட்டது .
2011 தேர்தலின்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக மீது எதிர்ப்பலை பெரிதாக இருந்தது. அதுவரை தனித்தே போட்டியிட்டு வந்த விஜயகாந்த், சேலத்தில் நடந்த மக்கள் உரிமை மாநாட்டில் கூட்டணி சேர்வது குறித்துப் பேசினார்.
திமுகவின் ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தார்.
அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களில் அதிமுகவுக்கும் தேமுதிகவும் மோதல் ஏற்படவே, விஜயகாந்த்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்தது.
அந்தக் கூட்டணியில் சேர்ந்தபோதே அவருடைய தோல்விக்கான வித்து தொடங்கிவிட்டது.
ஒரு கூட்டணி கட்சியாக இருந்து, அந்தக் கூட்டணியில் ஆளும் கட்சி கூட்டணியாகி எதிர்க்கட்சியாக வந்துவிட்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒத்துப்போகாத நிலை ஏற்பட்டதற்கு, தன்னால்தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று விஜயகாந்த் நினைத்ததும் இவர் இல்லாமலேயே நாம் ஜெயித்திருக்க முடியும் என்று ஜெயலலிதா நினைத்ததும்தான் காரணம்.
இது அவர்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது. சட்டமன்ற நிகழ்வுகளிலேயே அது வெளிச்சமாகத் தெரிந்தது,.
சட்டமன்றத்தில் இருகட்சி உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஜெயலலிதா முன்னிலையிலேயே 'ஏய்...' என்று அதிமுக உறுப்பினர்களை எச்சரித்தார். அவருடைய இந்தச் செயலுக்கு வெளியிலிருந்து மட்டுமின்றி, கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் கிளம்பின.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரசாரமாக ஏற்பட்டு கூட்டணி பிளவுபட்டது. அதற்குப் பிறகு எதிர்க்கட்சியாக வந்து அமர்ந்தார்கள்.அப்போது நான்தான் சபாநாயகராக இருந்தேன்.
பண்ருட்டி ராமச்சந்திரன் அதன்பிறகு தேமுதிகவில் இருந்து விலகிய பிறகு, 'அந்த நேரத்தில் நீங்கள் சமயோசிதமாக முடிவெடுத்து வெளியேற்றாமல் விட்டிருந்தால், பெரியளவுக்கு அடிதடியாகி ரத்தமெல்லாம் சிந்த வேண்டியிருந்திருக்கும். சபாநாயகருக்கு சமயோசித புத்தி அவசியம்.
அதன் அடிப்படையில் அன்று நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரி' என்று என்னிடம் கூறினார்.சட்டமன்றத்தில் அன்று, மோதல் உச்சகட்டத்திற்குப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.
அதனால் வேறு வழியின்றி ஒட்டுமொத்த தேமுதிகவினரையும் வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
அது யாரால் நடந்தது என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், அதிமுகவுடன் தொடர்ந்து இணக்கமான சூழலில் இருந்திருந்தால், தேமுதிக நிச்சயமாக இன்று மேலே வந்திருக்க முடியும்.
அதிமுகவுடன் கூட்டணி இருந்ததால்தான், அதற்குப் பிறகு அவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக வர முடிந்தது. இருப்பினும், எங்களோடு இருந்தபோது அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது என்பது ஒரு வரலாறு," என்று கூறினார்.
தேமுதிக கட்சியிலிருந்து 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்குச் சென்றனர். அதற்குப் பிறகு, ஆளும் கட்சிக்கு எதிராகப் பெரிய நடவடிக்கைகளை தேமுதிக மேற்கொள்ளவில்லை.
"அதற்குப் பிறகு, ஓர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வளர்ப்பதற்கான வழிமுறையே அவருக்குத் தெரியவில்லை. அவரோடு இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனையையும் அவர் சரியாகக் கேட்கவில்லை,"
"ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் திரைத்துறையில் வெற்றி பெற்றதற்குக் காரணம் அவர்களை இயக்கிய இயக்குநர்கள்.
இவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், கட்சி தொடங்கும்போது தங்களை வைத்து என்ன செய்ய வேண்டுமென்று இவர்களுக்குத் தெரியவில்லை.
ஏனென்றால், ஒரு மன உறுதியில் கட்சியைத் தொடங்கிவிட்டாலும், மக்களின் தேவையை அவர்கள் உணரவில்லை.
தங்களை முன்னிறுத்தக்கூடிய அரசிலையே செய்ததால், அது ஒரு கட்டத்தில் மக்களிடையே நேர்மறை தாக்கங்களைவிட அதிகமாக எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தியது.
அதை ஏற்படுத்தியது, இவர்களுடைய செயல்பாடுகள், புரிதல் இல்லாமை மற்றும் அரசியல் செய்யத் திறமையற்ற நிலையும்தான்.
2016ஆம் ஆண்டில் தனித்து நின்றபோது, பல்லைக் கடிப்பது, தொண்டரை அடித்தது போன்ற விஜயகாந்த்தின் செயல்பாடுகள்,
இவரைக் கேலிக்குரியவராக மாற்றியது. அதுவும் இவரைப் பெரியளவில் பாதித்தது"
-----------------------------------------------
அதானி நிறுவனங்கள்
ஒரு எச்சரிக்கை.
பிட்ச் குழுமத்தின் பிரிவான கிரெடிட்சைஸ், அதானி குழுமம்: ஓவர்லீவரேஜ்டு (Overleveraged) என்ற தலைப்பில் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அது அதானியின் விரிவான லட்சிய கடன்கள், எதிர்காலத்தில் பெரும் கடன் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் அதானி குழும நிறுவனங்கள் எதிர்காலத்தில் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு பிறகு, கடந்த அமர்விலேயே அதானி குழும பங்குகள் பலத்த சரிவினைக் கண்டன. குறிப்பாக அதானி பவர் 5% சரிவினையும், அதனி வில்மர் 2.51% சரிவினையும், அதானி கிரீன் எனர்ஜி பங்கானது கிட்டதட்ட 7% வரையிலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கும் 4% இழப்பினையும், அதானி போர்ட்ஸ் பங்கு விலையானது 2% சரிவிலும், அதானி டோட்டல் கேஸ் 1.5% சரிவிலும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 3% சரிவினைக் கண்டும் இருந்தன.
இரண்டாவது நாளாக இன்றும் அதானி குழும பங்குகள் சில இன்றும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
அதானி பவர் 4.99% சரிவினையும், அதனி வில்மர் 2.37% சரிவினையும், அதானி கிரீன் எனர்ஜி பங்கானது கிட்டதட்ட 2.60% வரையிலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையானது 0.59% ஏற்றத்திலும், அதானி போர்ட்ஸ் பங்கு விலையானது 0.42% குறைந்தும், அதானி டோட்டல் கேஸ் 0.26% குறைந்தும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 3.18% அதிகரித்தும் காணப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே அதானி குழுமம் தீவிர விரிவாக்கம் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இதனால் கடன் அழுத்தமும் அதிகரித்து வருகின்றது.
பிதமர் மோடியின் நண்பர் என்பதால் வங்கிகள் பணத்தை கடன் என்ற பெயரில் அள்ளிக் கொடுக்கின்றது.
பின்னர் அதை தள்ளுபடியும் செய்கின்றன.
இதனால் கிடைக்கும் மூலதனங்களை கொண்டு புதிய புதிய அல்லது தொடர்பில்லாத வணிகங்களில் இறங்கி வருகின்றது.
இது மேற்கொண்டு அதானிக்கு அழுத்தத்தினை,சரிவை ஏற்படுத்தலாம் .
இன்றைய அதனை ஆதரவான அரசின் போக்கு ஊரில் வரும் காலங்களில் மாறலாம்.
இன்னொரு அனில் அம்பானியாக அதனை ஆகிடலாம்.
------------------------------------------------------------