11/9 நினைவு
அமெரிக்காவில் உலக வர்த்தக மைய அலுவலகம் அமைந்திருந்த இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பயங்கர சம்பவத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மைய பகுதியில் உலக வர்த்தக மைய அலுவலகம் அமைந்திருந்த இரட்டை கோபுரங்கள் கடந்த 2001ஆம் ஆண்டு இதேநாளில் தகர்க்கப்பட்டன.
அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 வகை விமானம் ஒன்று, 20 ஆயிரம் கேலன் அளவுள்ள எரிபொருளுடன், வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தின் மீது மோதியது.
இத்தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
மேலும், பென்டகன் கட்டிடத்தின் மீதும், பென்சில்வானியாவிலும் விமான தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்க மண்ணில் அல்கொய்தா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மாபெரும் தாக்குதலாக இந்த சம்பவம் வரலாற்றில் பதிவானது.
தாக்குதலுக்குள்ளான இரட்டை கோபுரங்களில் இருந்து 1 புள்ளி 4 பில்லியன் குப்பைகள் அகற்றப்பட்டு, 19 ஆயிரத்து 435 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த பயங்கர சம்பவத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்க மக்கள் வீதிகளில் இந்தத் தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
------------------+++----------------+++-----------------
மின் கட்டணம் உயர்வு:
தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மின்வாரியம் கட்ட வேண்டிய கடன் மற்றும் வட்டி குறித்த விவரங்கள் வெளியாகிவுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2014ஆம் ஆண்டு டிசம்பரில் கடைசியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
2017ஆம் ஆண்டில் மிகச் சிறிய அளவில் மின் கட்டணம் திருத்தப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் வருடாந்திர இழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அவற்றின் ஒட்டுமொத்த இழப்பும், அந்த இழப்பை ஈடுகட்ட வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையும் தொடர்ந்து அதிகரித்துவந்தன.
2011 - 12ல் 18,954 கோடி ரூபாயாக இருந்த மொத்த இழப்பு தற்போது 1,13,266 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதிமுக பன்னீர்செல்வம் அரசு ஒன்றிய அரசின் உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு, மின் வாரியத்தின் இழப்பை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2021ஆம் ஆண்டிலிருந்துதான் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதால், மின்வாரியம் தனது இழப்புகளைக் கடன் வாங்கியே சமாளித்து வந்தது.
ஆகவே, மின் வாரியத்தின் மொத்த கடனானது 1,59,823 கோடி ரூபாயாக இருக்கிறது.
இதற்கான வட்டித்தொகையாக மட்டும் வருடத்திற்கு 16,511 கோடி ரூபாயை மின்வாரியம் செலுத்தி வருகிறது.
இந்தியா முழுவதுமே மின் வாரியங்கள் பெரும்பாலும் மிக நெருக்கடியான நிதி நிலையுடனேயே போராடி வருகின்றன.
இந்த நிலையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டத்தின் கீழ், மின் வாரியங்களின் கடன் தொகையில் 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு 2016ல் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது.
2017லிருந்து தற்போதுவரை 22,825 கோடி ரூபாய் மட்டுமே மின் வாரியத்தின் கடனுக்காக அளித்துள்ளது.
மீதமுள்ள கடன் தொகையோடு மின்வாரியம் தொடர்ந்து போராடி வருகிறது.
தமிழ்நாடு அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அத்துப்படி, அதன்படி 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மாதத்திற்கு ரூ. 27.50 யும், அதிகபட்சமாக 800லிருந்து 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 565 ரூபாய் மாதம் அதிகரிக்கப்படும்.
கட்டவேண்டிய கடன்கள்:
- 2021 - 2022 (ஏப்ரல்) - கட்டவேண்டிய கடன் -ரூ.
83,422.18 கோடி 10.50% வட்டியுடன் கட்டவேண்டிய வட்டி - ரூ. 8,759.33 கோடி - 2022 - 2023 - கட்டவேண்டிய கடன் - ரூ. 84,855.52 கோடி 10.50% வட்டியுடன் கட்டவேண்டிய வட்டி - ரூ. 8,909.83 கோடி
- 2023 - 2024 - கட்டவேண்டிய கடன் - ரூ. 88,041.29 கோடி 10.50% வட்டியுடன் கட்டவேண்டிய வட்டி - ரூ. 9,244.34 கோடி
- 2023 - 2025 - கட்டவேண்டிய கடன் - ரூ. 92,268.82 கோடி 10.50% வட்டியுடன் கட்டவேண்டிய வட்டி - ரூ. 9,688.23 கோடி
- 2025 - 2026 - கட்டவேண்டிய கடன் - ரூ. 90,272.92 கோடி 10.50% வட்டியுடன் கட்டவேண்டிய வட்டி - ரூ. 9,478.66 கோடியாக உள்ளது.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வின் மூலம் மின் வாரியத்திற்குக் கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்குமெனக் கருதப்படுகிறது.
ஆனால், மின் வாரியத்தின் கடன் ஒன்றே கால் லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் நிலையில், இனி ஆண்டு தோறும் மின் கட்டண உயர்வை ஒன்றிய அரசு அறிவிக்பும் அதை தமிழ்நாடு அரசும் உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே மின்கட்டண உயர்வை பெட்ரோல் விலை உயர்வைப் போல் ஆண்டு தோறும் எதிர் பார்க்கலாம்.
-------------------------------------------------------------------