மேக் இன் சைனா
பாஜகவாலும்,அதை வழி நடத்தும் பூணூல் கூட்டத்தாலும் இந்தியா பலத்த,பெரும் பின்னடைவை அடைந்து வருகிறது.
தனது தேசியக் கொடியைக்கூட சீனாவில் வாங்கும் இந்தியா மோடி அரசு
சமீபத்தில் மேக்கின் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட டாங்கு என உலக ஆயுத போட்டியில் கலந்து கொண்டது.
போட்டியில் பாதியிலேயே அந்த டாங்கு பழுதாகி நின்றது உடனடியாக சர்வதேச அதிகாரிகள் அந்த டாங்கை சோதனை செய்த போது அந்த டாங்கியின் உதிரிபாகங்கள் அத்தனையும் சீனா தயாரிப்பு என்று உண்மை கண்டறிந்து அறிவித்தனர்.
இந்தியாவில் தயாரிக்கப் பட்டது என்ற தவறான தகவல் தந்து போட்டியில் கலந்து கொண்டதால் இந்திய டாங்கு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது!இதனால் உலக அளவில் இந்தியாவிற்கு பலத்த அவமானம்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகளிள் 90%பேர்கள் பார்பனர்கள்தான்.
அவர்களுக்கு லட்சகணக்கில் சம்பளம் ராஜபோக வாழ்கை, பாதுகாப்பு ஆராய்ச்சி நிதி என்ற பெயரில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் அளிக்கப்படுகிறது இந்த தண்டச் சோறு கூட்டத்திற்கு .
-----------------------------------------------------------------------------
முதல்வருக்கு பாராட்டு.
முதல்வராக வருபவர்கள் சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் ஒவ்வொரு காரியங்களையும் செய்வது உண்டு. திருநெல்வேலி மாவட்டத்தின் சரித்திரத்தில், நமது முதல்வரின் பெயரும் இருக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் முதல்வர் ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்துப் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.74.24 கோடி செலவில் 29 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் ரூ.156.28 கோடி மதிப்பீட்டிலான 727 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 30,658 பயனாளிகளுக்கு ரூ.117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி சரித்திரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம்பெற வேண்டும் என்ற ஆசை எனக்கு இருகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஐஸ்வைத்துப் பேசியுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது: “உண்மையில் இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் என்னை எதிர்க்கட்சி, மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்றுகூட பாராமல், எனது திருநெல்வேலி தொகுதிக்கு ஒரு கலைக்கல்லூரியை பெருமையோடு தந்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்கு ரூ.15 கோடி ஒதுக்கி தந்து, நமது மாவட்டத்தை இவ்வளவு கரிசனையோடு பார்ப்பதற்காக முதல்வருக்கு எனது நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
பெரும்பாலும், ஒவ்வொருவரும் முதல்வராக வரும்போது, அவர்களது சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் ஒவ்வொரு காரியங்களை செய்வது உண்டு. எனக்கு ஒரு ஆசை. திருநெல்வேலி மாவட்டத்தின் சரித்திரத்தில், நமது முதல்வரின் பெயரும் இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கு முதல்வர் செய்ய வேண்டிய காரியம், மணிமுத்தாறு பாபநாசம் இரண்டு அணைகள் இருக்கிறது. இரண்டு அணைகளையும் சுரங்கம் மூலம் இணைத்துவிட்டால், இந்த மாவட்ட மக்களுக்கு எல்லா காலங்களிலும் அதன்மூலம் நீர் நிறைந்து கொண்டேயிருக்கும்.
இது சாத்தியமா, இதனை மத்திய அரசுதானே செய்ய வேண்டும் என்றுகூட கூறலாம். இது மாவட்ட மக்களின் பிரச்சினை, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை. மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் முதல்வர் அவரது காலத்திலே அதை செய்துதர வேண்டும் என்று அன்போடு நெல்லை மாவட்ட மக்களின் சார்பாக வேண்டுகோள் வைக்க கடமைப்பட்டிருக்கிறே
சந்தோஷமாக இருக்கிறது.
எனவே முதல்வர் அடிக்கடி வந்து நிறைய நலத்திட்டங்களை தர வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் பேசினார்..
----+++++-----------+-++++---------++++++-------------++++++--