டவ் ஷாம்பு அபாயம்

புற்றுநோய் தரும் ஷாம்புகள்.

தற்போது ரசாயனங்கள் எதுவுமேயில்லாமல் எந்தவொரு தயாரிப்பும், இப்போதெல்லாம் தயாரிக்கப்படுவதில்லை.. 

இந்த பொருள்கள் கெடாமல் இருக்க ரசாயனம், நீண்டநாள் வரை புதிதாக இருக்க வேறுவகையான ரசாயனம் என ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.

அந்தவகையில், பிரபலமான பிராண்டான டவ் உட்பட பல ஷாம்பூக்கள், யூனிலீவர் பிஎல்சி நிறுவனத்தால் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.. 

இதற்கு காரணம், இந்த தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பென்சீன் எனப்படும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் என்ற நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஃபுட் அண்ட் ட்ரக் அத்தாரிட்டி நிறுவனத்தின் வெப்சைட்டில், நெக்சஸ், சாவ், ட்ரெசமே மற்றும் டிஐஜிஐ (Nexxus, Suave, Tresemmé, and Tigi) போன்ற பிராண்டுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.. 

அமெரிக்காவில் விற்பனையாகும் ஷாம்பூ உள்ளிட்ட பல பொருட்களும் வேதியியல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன... 

அப்படித்தான், சமீபத்தில் கனெக்டிகட்டில் உள்ள நியூ ஹேவனில் உள்ள வேலிஷ்யூர் என்ற ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.. 

இந்த ஆய்வில், இந்துஸ்தான் யூனிலிவர் தயாரிப்பான டவ் ட்ரை ஷாம்பூவில் பென்சின் என்ற வேதிபொருள் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வேதிபொருள், கேன்சரை உருவாக்கும் அபாயம் கொண்டதாம்.. டவ் ஷாம்பூ மட்டுமல்லாமல் நெக்ஸஸ், சாவே, டிகி மற்றும் ட்ரஸ்ஸமே உள்ளிட்ட ஷாம்பூ நிறுவன பொருட்களிலும் இதே ஆபத்து நிறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது... 

இந்த ஆய்வில் புற்றுநோய் அபாயம் உறுதியானதால், தன்னுடைய தயாரிப்புகளை திரும்ப பெறும் முடிவை இந்துஸ்தான் யூனிலிவர் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது... 

அதாவது, யுனிலீவர் நிறுவனம் அக்டோபர் 2021-க்கு முன் தயாரிக்கப்பட்ட உலர் ரக ஷாம்ப்பூக்கள் அத்தனையும் திரும்பப் பெற்றுள்ளது.

அதேசமயம் இந்த ஆய்வு இந்திய சந்தை தயாரிப்புகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே

பென்சீனின் வெளிப்பாடு லுகேமியா மற்றும் பிற ரத்த புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.. 

பென்சீன் என்பது பெட்ரோலியப் பொருட்களில் அறியப்பட்ட ஒரு பொருள் ஆகும்.. 

உலர் ஷாம்புகள் மற்றும் ஸ்ப்ரே-ஆன்கள் புரோபேன் மற்றும் பியூட்டேன் போன்ற உந்துசக்திகளை இவை கொண்டிருக்கின்றன.

 மேலும், கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோலியத்தை காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படுபவையும்கூட..

இப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதே பென்சீன் மாசுபாட்டை காரணம் காட்டி, பேண்டீன் மற்றும் ஹெர்பல் எசன்ஸஸ் உலர் ஷாம்புகளை (Pantene and Herbal Essences dry shampoos ) திரும்பப் பெற்றது... இப்போது இன்னொரு கம்பெனி திரும்ப பெற்றுள்ளது..

 இதுகுறித்து வேலிஷ்யூர் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் லைட் சொல்லும்போது, 'நாங்கள் கவனித்ததை பொறுத்தவரை, ஏரோசல் உலர் ஷாம்புகள் போன்ற பிற நுகர்வோர் - தயாரிப்பு வகைகள் பென்சீன் மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படலாம்.. அதனால், இதுகுறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்' என்று கூறியுள்ளார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?