அ.இ.அ.தி.மு.க பொற்கால ஆட்சி.

கமலைப் பார்த்து மிரண்ட நடிகர் திலகம்.

 கமலை வைத்து சூப்பர் ஹிட் படமான சிங்காரவேலன் என்ற படத்தை கொடுத்தவர் ஆர்.வி.உதயகுமார். 

முதலில் இந்த படத்தை எடுப்பதில் கமலுக்கும் சரி உதயகுமாருக்கும் சரி சிறிய தயக்கம் இருந்ததாம். துணிந்து எடுத்து படத்தை வெற்றிபடமாக காட்டியுள்ளனர்.

மேலும் கமலை பற்றி ஒரு மேடையில் பேசிய உதயகுமார் கமலை பார்த்து சிவாஜி மிரண்ட ஒரு விஷயத்தை பகிர்ந்தார். ஒ

ரு சமயம் சிவாஜி உடல் நிலை சரியில்லாத போது அவரை பார்க்க சென்றிருக்கிறார் உதயகுமார். 

அப்போது சிவாஜிக்காக ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கதையோடு சென்றிருக்கிறார்.

சிவாஜி காலடியில் அமர்ந்து காலை பிடித்து அமுக்கி கொண்டிருந்தாராம் உதயகுமார். அப்போது அந்த கதையையும் சொல்லியிருக்கிறார். 

அதை கேட்ட சிவாஜி ‘அது இருக்கட்டும், கமல்னு ஒரு பையன் இருக்கிறானே? 

அவன் என்னம்மா நடிக்கிறான்? ஷட்டில் ஆக்டிங் அவன் கிட்ட இருக்கு, ஆனால் என்கிட்ட ஸ்டைலிஷான ஆக்டிங் தான், ’ என்று கூறினாராம்.

மேலும் அவர் கூறும் போது ‘ நான் இருந்தாலும் கொஞ்சம் ஓவராத்தான் நடிக்கிறேன், கமல் எவ்வளவு பிரம்மாதமாக நடிக்கிறான்’ என்று வியந்து கூறினாராம்.

 அந்த அளவுக்கு நடிப்பின் மீது பேரன்பு கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். அவரிடம் இருந்து நடிப்பு கற்றுக் கொள்ளுங்கள் என்று ஆர்.வி.உதயகுமார் கூறினார்.

-----------------------+----------------------------+

தலைசுற்றும்

பத்தாண்டுகால

அ.இ.அ.தி.மு.க பொற்கால ஆட்சி.


.சென்ற பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த அந்த அறிக்கைகளின் மொத்தத் தொகையைக் கூட்டினால் தலையே சுற்றுகிறது.

 எனவே, சி.ஏ.ஜி அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கியமான விஷயங்கள் மட்டும் இங்கே...

* அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2016-ம் ஆண்டில் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக வழங்குவதில் முறைகேடு செய்ததில் இழப்பு ரூ.11.41 கோடி.

* 17,15,441 மாணவர்களுக்கு மார்க் ஷீட் அச்சடிப்பதற்கு பதிலாக, 57 கோடி ரூபாய் செலவில் 1,63,30,000 வெற்றுச் சான்றிதழ்களை அச்சடித்த வகையில் ஏற்பட்ட வீண் செலவு ரூ.24.5 கோடி.

* மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்விக்காக, டிஜிட்டல் பாடத்திட்டம் தயாரிக்க, தகுதியற்ற நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.10.7 கோடி.

* கரூர், தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அடிப்படை வசதியின்றி விடுதிகள் கட்டியதில் தேவையற்ற செலவினம் ரூ.6.64 கோடி.

சி.ஏ.ஜி அறிக்கை சொல்லும் கணக்கு! - இழப்பு... நஷ்டம்... தண்டம்... வீண் செலவு...

* 131 அரசு மாதிரிப் பள்ளிகளில் பயிலும் 52,238 மாணவர்களுக்குப் பிரத்யேகச் சீருடை இருந்தும், 2020-21-ம் கல்வியாண்டில் அரசின் இலவசச் சீருடை வழங்கியதில் வீண் விரயம் ரூ.6.38 கோடி.

* மதுரையில் 2017-ல் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் பயன்பாட்டுக்கு வராததால், மத்திய அரசு விளையாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கி, வங்கியில் முடங்கிக்கிடக்கும் தொகை ரூ.2.73 கோடி.

* ரேஷன் கடைகளில் எடை மெஷின்களை வருடாந்தர பராமரிப்பு செய்யாமலேயே ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்திய தண்டச் செலவு ரூ.3.22 கோடி.

* கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துக்காக 2014 முதல் 2019 வரை ஒன்பது இடங்களில் கட்டப்பட்ட தங்குமிடங்களில், பயன்பாட்டுக்கு வராத இரண்டு கட்டடங்களால் ஏற்பட்ட பயனற்ற செலவு ரூ.31.66 கோடி.

* 2017-ல் தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் 49 குளங்களைப் புனரமைக்கும் திட்டப் பணிகள் சுணங்கியதால், மத்திய அரசிடமிருந்து வராமல் போன தொகை ரூ.29.95 கோடி.

* கன்னியாகுமரியில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட மீன் இறக்கும் தளத்தைக் காப்பீடு செய்யாமல் போனதால், ஒக்கி புயலால் அதில் ஏற்பட்ட சேதாரத்துக்கு ஆன மறுகட்டுமானக் கூடுதல் செலவு ரூ.3.15 கோடி.

* 2017-ல் காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூர் அரசு மருத்துவமனைகளின் எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் அமைக்கத் திட்டமிட்டு, 2020 வரை இடவசதி, மின்வசதி அளிக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்ததால், (அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட விலை உயர்வால்) ஆன கூடுதல் செலவு ரூ.1.12 கோடி.

* திருத்திய நெல் சாகுபடி திட்டத்தின்கீழ், ஹெக்டேருக்கு 8 கிலோ நெல் வழங்கவேண்டிய நிலையில், வேலூர் விவசாயிகளுக்கு மட்டும் 50 கிலோ வரை நெல்லைக் கூடுதலாக வழங்கியதால் ஏற்பட்ட கொள்முதல் நஷ்டம் ரூ.1.33 கோடி.

* திருச்சி காந்தி சந்தைக்கு மாற்றாக, கள்ளிக்குடியில் நவீன மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டும் வசதியின்மை காரணமாகத் திட்டம் செயல்பாட்டுக்கு வராததால் ஏற்பட்ட பயனற்ற முதலீடு ரூ.75.64 கோடி.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வின் ‘ஒற்றைத் தலைமை’ மல்லுக்கட்டு, ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணையங்கள் தாக்கலானது உள்ளிட்ட விவகாரங்களால், 19.10.2022 அன்று வெளியான ‘இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை (சி.ஏ.ஜி)’ தலைவரின் அறிக்கை குறித்துப் பெரிய விவாதங்கள் எழாமல் போய்விட்டன.

 கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த அந்த அறிக்கைகளின் மொத்தத் தொகையைக் கூட்டினால் தலையே சுற்றுகிறது. 

எனவே, சி.ஏ.ஜி அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கியமான விஷயங்கள் மட்டும் இங்கே...மேலே தரப்பட்டுள்ளது....

----------------------------------------------------------

ஆளுநரா?

பா.ஜ.க,கொ.ப.செயலாளரா!



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?