வேதனையான சாதனை.

உலக அளவில் தென்கொரியாவில் ஹாலோவின் ஊர்வலத்தில் 112,பேர்கள்சோமாலியா குண்டு வெடிப்பில்110 பேர்கள் பலியான வரிசையில்குஜராத் மாநில மோர்சா தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 143பேர்கள் உயிரிழந்துள்ள நிகழ்வு இந்தியா மட்டுமல்லாமல் உலக. அளவில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர்.

பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டு உயிர்பயத்தில் அலறுவதைக்  காணொளி காட்சிகளில் இயலா நிலையில் பார்க்க முடிகிறது.

அந்த நேரத்தில் 400 பேர் கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .
குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த கயிற்றுப் பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இது நடந்திருக்கிறது

பாலம் அறுந்து விழும்போது 500 க்கும் மேற்பட்டோர் அந்த பாலத்தின் மீது இருந்ததாகவும் பாலம் இரண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

"காயமடைந்தோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவரை வந்த தகவல்படு பலியான142 பேர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.

இருள் சூழ்ந்ததால் தண்ணீரில் சிக்கியவர்களைக் காப்பாற்ற பார்வையாளர்கள் முயற்சிக்கும் போது காட்சிகளை வீடியோக்கள் காட்டுகின்றன.
கடந்த சில நாட்களாகவே இந்த பாலத்தின் மீது செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துவந்த நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம்.
பாலத்தின் தாங்கும் சக்தியைவிட ஒரே நேரத்தில் ஐநூறுக்கும்  அதிகமானோர் பாலத்தில் நடந்த்துதான் இந்த விபத்துக்கு காரணம்.
அதிகாரிகள் அதற்கு கட்டுப்பாடு விதித்திருந்தால் இந்த விபத்து ஏற்பட வழியிருந்திருக்காது.
தீபாவளிக்குப் பிறகு குஜராத்தி புத்தாண்டு அன்று அக்டோபர்26
தான் இந்தப் புதிய பாலம் திறக்கப்பட்டது.
மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது  பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் 1879ம் ஆண்டு 230 மீட்டர் நீளத்தில் தொங்கு பாலம் கட்டப்பட்டது.
புகழ்பெற்ற இதிறக்கப்பட்டு 143 ஆண்டுகளைக் கடந்தது.
மச்சு ஆற்றில் உள்ள தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
மோர்பி நகரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில், இந்த பாலம் பொறியியலின் அதிசயம் என்று விவரிக்கப்பட்டுள்ளது..
இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது.

தற்போதுதான் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதுதொடர்பான பணிகளுக்காக ஐரோப்பாவைச் சேர்ந்த  தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.சென்ற வாரம்தான் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த்து.
பாலத்தின் ஒரு பகுதி உடையாமல் இருந்த சூழலில் அதில் உயிரை காப்பாற்றிக் கொள்ள பலரும் தொங்கி கொண்டிருந்தனர்.
ஆனால் நேரம் செல்ல செல்ல கைகளால் பிடித்திருக்க முடியவில்லை.
ஒருசிலர் மேலே ஏறி வந்துவிட்ட நிலையில் எஞ்சியவர்கள் அலறிக்கொண்டே ஆற்றில் விழுந்தனர்.
இதில் நீச்சல் தெரிந்தவர்கள் எப்படியோ நீந்தி சென்று கரையை அடைந்தனர். ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் மாட்டிக் கொண்டனர்.
மாநில முதல்வர் பூபேந்திர படேல் கேவாடியாமீட்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கையில் சுணக்கம் காட்டியதாலேயே உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மீட்புப் பணிகளில் உதவ அண்டை மாவட்டங்களில் இருந்து அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் , மூன்று குழுக்கள் ,ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர்..
இந்த பாலம் சீரமைக்கப்பட்டதாக பல நாட்களுக்கு முன்பே  கட்டுமான நிருவனம் கூறினாலும் இதை ஆய்வு செய்த அதிகாரிகள் பால கட்டுமானத்தில் குறை இருப்பதாகவும் அதை சரிசெய்யவேண்டும்என்று என்று கூறி தரச்சான்றும்,தடையின்மைச்சான்றும் இதுவரை வழங்காத்தால் பாலம் பயன்பாடுக்கு இல்லாமல் மூடிதான் வைக்கப்பட்டிருந்த்து.
ஆனால் நவம்பர் ஆரம்ப நாட்களில் குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுவிடும் என்பதால் சாதனை பட்டியலில் தொங்குபால சீரமைப்பை காட்ட வேண்டும் என்பதாலேயே அரைகுறையாக திறக்கப்பட்டு 125 பேர்களை மட்டுமே தாங்கும் திறனுள்ள பாலத்தில் அளவுக்கதிகமாக 500 க்கும் அதிகமான மக்களை அனுமதித்து இந்த உயிர்ப்பலி  கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.


குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு செய்த வழியே தோல்விக்கு காரணமாகி விடும் என்ற அச்சமே இப்போது ஆளும் பா.ஜ.க விற்கு.

சாதனை எதிர்பார்த்து மக்களுக்கு கொடுத்தது வேதனைதான்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?