கமல்ஹாசன்68.
பன்முகவித்தகரான கமல் ஹாசனுக்கு இன்று (நவம்பர் 7) பிறந்த நாள்.
நடிகர், நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன்.
மனிதாபிமானம் கொண்டவர் ஆவார். அவர் சமூக நலப் பணிகள் பலவற்றை செய்திருக்கிறார்.
1960-ம் ஆண்டு வெளியான `களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சித்திரமாக இவர் அறிமுகமானார்.
அப்போது தொடங்கிய இவரது திரைப்பயணம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார்
. இவர் ஏற்காத பாத்திரங்களே இல்லை என்று கூறுமளவுக்கு அத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம்-2 உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
மகாநதி, ஆளவந்தான், உன்னைப்போல் ஒருவன், தூங்காவனம் உள்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
அரசியலையும் தொட்டுப் பார்த்துவிட்டார் கமல்.
2018-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ம் நாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாபெரும் அரசியல் கட்சி அறிமுக விழா பொதுக்கூட்டத்தை நடத்தினார்.
அதற்கு முன்னதாக ராமேஸ்வரத்திலுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று அவரின் சகோதரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசன், வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
தனது ரசிகர் மன்றங்களை பொதுநல அமைப்புகளாக மாற்றிய முதல் தமிழ் நடிகர் கமல் ஹாசன். மேலும் கமல் நற்பணி இயக்கம் (கமல் வெல்ஃபேர் அசோசியேஷன்) என்ற பெயரில் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அவரது ரசிகர் மன்றங்கள் இரத்தம் மற்றும் கண் தான இயக்கங்களை ஏற்பாடு செய்ய உதவுகின்றன. மேலும் மாணவர்களுக்கு கல்விக்கு உதவும் பொருட்களை வழங்குகின்றன.
கமல்ஹாசன் தனது மனிதநேய நடவடிக்கைகளுக்காக 2004 இல் ஆபிரகாம் கோவூர் தேசிய விருதைப் பெற்றார்.
எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனாதை இல்லத்திற்கு நிதி திரட்டிய இருதயராகம் 2010 இன் திட்ட தூதராக இருந்தார்.
செப்டம்பர் 2010 இல், கமல்ஹாசன் குழந்தைகள் புற்றுநோய் நிவாரண நிதியைத் தொடங்கி சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரோஜா பூக்களை வழங்கினார்.
மார்ச் 2013 'ல், கமல் ஹாசன் ரூ.5 மில்லியனை நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் ஒரு கோடியில் வென்றார்.
வென்றத் தொகையை "பெற்றால் தான் பிள்ளையா" என்ற புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் அரசு சாரா அமைப்புக்கு வழங்கினார்.
தூய்மை பாரத பிரசாரத் திட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கமல் ஹாசன் தூதாரக பரிந்துரைக்கப்பட்டார்.
இந்தியாவின் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் அருண் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து சென்னையில் உள்ள மாடம்பாக்கம் ஏரியையும் சுத்தம் செய்தார்.
பல்வேறு மாநில அரசுகளின் விருதுகள், பல்கலைக்கழகங்களின் விருதுகளை வென்றுள்ளார்.
மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள் மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்கு வாங்கியிருக்கிறார்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது திரைப்படம் - களத்தூர் கண்ணம்மாவில் நடித்தற்காக பெற்றார்.
சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசனுக்கு ஒரு இந்திய தேசிய விருது கிடைத்தது.
10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், 50 வருடம் திரைத்துறையில் பணியாற்றியமைக்காக கேரளா அரசின் சிறப்பு விருது, பத்மஸ்ரீ விருது (1990), சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம் (2005), பத்ம பூஷண் விருது (2014) ஆகியவற்றை வென்றுள்ளார்.
இந்திய நடிகர்களிலேயேமுதன் முதலாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுப் பேசியுள்ளார் கமல்ஹாசன்.
-----------------------------------------------------------
முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
"தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!"
என்று வாழ்த்தியுள்ளார்.
----------------------------------------------------------------------