கொடநாடு-திருச்சி
ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணையங்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும், அதன் தலைவர்களான எடப்பாடி, சசிகலா ஆகியோர் மீதும் அடுத்த ஆயுதத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறது தி.மு.க. அரசு என்கிறார்கள்.
கொடநாடு வழக்கு, திருச்சி ராமஜெயம் வழக்கு. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் போலீசின் விசாரணைக் கரங்கள் சசிகலாவை நோக்கி நீள்கின்றன.
கொடநாடு வழக்கிலும் கொடநாடு மேனேஜர் நடராஜன் பல ஜெயல்லிதா,சசிகலா வின் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட்சியமளித்துள்ளார்.
எப்பொழுது கொடநாட்டுக்கு வருவார். வெளிப்படையாக எத்தனை முறை வருவார்? யாருக்கும் தெரியாமல் கொடநாட்டுக்கு எத்தனை முறை வந்து செல்வார்?
அங்கு அவர் ரிலாக்ஸாக எப்படி இருப்பார்?
கொடநாட்டில் இயங்கும் ஒரு குட்டி மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படும்?
கொடநாட்டில் அமர்ந்து ஜெ.வும், சசியும் எப்படி வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பார்கள். கோடி கோடியாகக் கொட்டப்படும் லஞ்சப் பணம் கண்டெய்னர் கண்டெய்னராக எப்படி கொநாட்டுக்கு வரும்?
அவை எப்படி பிரித்தளிக்கப்படும்?
கொடநாட்டில் ஜெயலலிதா தனது ரகசியங்களை பூட்டி வைத்திருந்த அறைகள் எத்தனை?
அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் என்ன?
அங்கிருந்த பணம் எவ்வளவு? அவை கொடநாடு கொள்ளையில் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது.
என
தற்போதைய காவல்துறை விசாரணையின் போது நடராஜன் விரிவாகப் பேசியிருக்பிறார்
நடராஜட், தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட சொத்துகளை சம்பாதித்திருக்கிறார். அவரை வெளியே விட்டால் தங்கறுக்கு ஆபத்து என சசிகலா தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். நடராஜன் மட்டுமல்ல, கொடநாட்டில் கார்பென்டர் வேலை செய்த சஜீவன், ஜெ.வின் தனிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக சாட்சியமளித்திருக்கிறார்.
அதுபோலவே
.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஜெ.வைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். அனுபவ் ரவி, எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசன், சேலம் இளங்கோவன் ஆகியோருக்கும் கொடநாடு கொள்ளைக்கும் இருக்கும் தொடர்பு பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.
இவை அனைத்தையும் சசிகலாவிடம் கேள்விகளாக காவல்துறை வைத்து வாக்குமூலம் வாங்கியிருக்கிறது.
இந்த வாக்குமூலங்கள் அனைத்தையும் கோர்ட்டில் பதிவு செய்ததுடன் கொடநாடு விசாரணை குழு, வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்திருக்கிறது.
சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இந்த வழக்கில் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட உள்ளது.
இந்தப் புதிய முதல் தகவல் அறிக்கையில் முதல்குற்றவாளியாக எடப்பாடி பழனிசாமி சேர்க்கப்படுவார் என பேச்சு எழுந்துள்ளது. இப்படி எடப்பாடி, சசிகலா ஆகியோரை விசாரிக்கும்போது அதிர்ச்சி தரும் பல தகவல்கள,உண்மைகள் வெளிவரும்.
பல புதிய கைதுகள் நடைபெற இருக்கிறது.
இதே தேரத்தில் எடப்பாடி பழனிசாமி எங்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது எடப்பாடி கர்நாடகாவில் ஊழல் வழக்கில் சிக்கிய தனது சம்பந்தியை காப்பாற்றதான் பேசினார்.
ஆனால் எங்களைக் காப்பாற்ற எடப்பாடி எதுவும் செய்யவில்லை,அமித்ஷாவிடம் ஒன்றும் பேசவில்லை என அதிமுக ஆட்சில் ஏகப்பட்ட முறைகேடுகளை செய்து ஊழல் விசாரணை வளையத்தில் உள்ளமுன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி போன்றோர் கொடநாடு வழக்கில் எடப்பாடியை வலுவாக மாட்டிவிட தயார்நிலையில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
திவாகரின் சம்பந்தி திருச்சியில் உதவி கமிஷனராக இருந்தபோதுதான் ராமஜெயம் கொலையும் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலனை ஜெயலலிதா உத்தரவுப்படி கொலை செய்ததாக சொல்லப்படும் திண்டுக்கல் ரவுடிகள் மற்றும் ரவி என்கிற ரவுடி ஆகியோரை ராமஜெயம் கொலைவழக்கில் இறுதிக்கட்ட விசாரணைக்கு போலீஸ் உட்படுத்தியுள்ளது. .
சாமி, ரவி தரப்பில் "எனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை. ராமஜெயம் கொலை நடந்தபோது நான் திருப்பதியில் இருந்தேன்” எனக் கூறியிருக்கிறார்கள்.
ஆனால அவர் இந்தக் கொலையில் எப்படி சம்பந்தப்படுகிறார் என, தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களை காவல்துறையினர் முன்வைத்துள்ளனர்.
அதற்பாகவே இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த இருக்கிறது காவல்துறை என்று கூறப்படுபிறது.
ராமஜெயம் கொலை வழக்கு 2012ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு அனுமதிக்கப்பட செய்யப்பட்ட பரிகாரக் கொலை என்ற நோக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நகர்கிறது.
இதிலும் ஆறுமுகசாமி அறிக்கை போல சசிகலா வெளியேற்றம், அவர்களுக்குள் நடந்த சண்டை, ராமஜெயம் கொலை நடந்த அன்றுதான் சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டார் என்பது போன்ற விவரங்கள் விரிவாக வெளியே வரும் என்கிறார்கள்.