தற்காப்பு ரவி

 தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக மனு அளிக்கவுள்ள திட்மிட்டு ஏற்பாடுகள் செய்து வரும்நிலையில், திடீரென ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்கிறார்.

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் பல  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து வேண்டுமென்றே காலம் தாழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 

மேலும் திராவிட மாடலை மட்டம் தட்டியும் சனாதனம்,பகவத்கீதை எனப் புகழ்ந்தும இந்து மதத்தை தூக்கி வைத்தும் தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார்

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பார்ப்பணத்தை உயர்த்தியும் பேசுகிறார்.அதையும் பொது மேடைகள்,அரசு நிகழ்வுகளில்,பள்ளி,கல்லூரி விழாக்களிலும் பேசுகிறார்.

மேலும் கோவை கார் வெடித்த நிகழ்வில் தமிழ்நாடு அரசை பா.ஜ.க க்கார்ரை போல் தாக்கி பள்ளி விழாவில் பேசி விவாத்த்தைக் கிளப்பி அனைவராலும் கண்டிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளதாகவும், அந்த மனுவில் திமுக எம்.பி.க்கள் மற்றும் பிற கட்சிகள் கையெழுத்திடவும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மனு குடியரசுத் தலைவரிடம் ஓரிரு நாள்களில் அளிக்கப்படவுள்ள நிலையில், திடீர் பயணமாக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி புறப்பட்டு செல்வது அரசியல் தளத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

டெல்லியில் ஒன்றிய உள்துறைதுறை செயலகத்தில் இதுகுறித்தி ஙிளக்கம் கொடுக்கவும்,முடிந்தால் குடியரசுத்தலைவரிடம் நேரில் இது தொடர்பாக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இதன் மூலம் வரம்பு மீறி பேசி தன்னால் உருவான விவாதங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறார் ரவி என்கிறார்கள்.

----------------------------------------------------------

 சிதம்பரம்  

 இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து ஒரு கட்டுரை எழுத உங்களை அழைத்தால், உங்களின் முதல் இரண்டு அம்சங்கள்  என்னவாக இருக்கும்? பெரும்பாலான மக்கள் மக்களின் முக்கிய  பிரச்சனைகளாக  விலைவாசி உயர்வையும், வேலையில்லாத்திண்டாட்டத்தையும் தான் தேர்ந்தெடுப்பார்கள்.  


இந்திய நிதி அமைச்சகம்  மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வை வெளியிடுகிறது. ஆறு இளம்  பொருளாதார வல்லுனர்கள்,  மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வை ஆய்வு  செய்து கட்டுரையை எழுதுமாறு  அமைச்சகம்  கேட்டுக் கொண்டது,  இவர்கள் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, பசி மற்றும் வறுமை போன்ற வார்த்தைகளை உணர்வுப்பூர்வமாக தவிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. 
பிரதமர் கட்டுரையைப் படிக்கலாம் என்று அவர்கள் காதுகளில் கிசுகிசுக்கப்பட்டதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, ஏழ்மை போன்றவற்றைப் புறக்கணிப்பது  போன்றவற்றை தவிர்ப்பது கடமையிலிருந்து தவறும் செயல் என்பது நிச்சயம் அவர்களுக்கு தெரிந்திருக்கும்.  


மாதாந்திர பொருளாதார ஆய்வு ஒரு மதிப்புமிக்க ஆவணம். இது  2022 செப்டம்பர் மதிப்பாய்வாக  கடந்த அக்டோபர் 22 அன்று வெளியிடப்பட்டது) தற்போதைய நிலைமை மற்றும் பொருளாதாரத்தின் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றிய ஒரு புறநிலை ஆண்டுக் கணக்கை வழங்கும் என்று நான் எதிர்பார்த்தேன்; 
அடுத்த 6-12 மாதங்களில் பொருளாதாரம் எடுக்கக்கூடிய போக்கைக் குறிப்பிடவும்; பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய திசைகளை  அடையாளம் காணவும், உலகப் பொருளாதாரத்தின் போக்குகளையும், உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீதான அவற்றின் தாக்கத்தையும்  வெளிப்படுத்தும்  என நான் ஆவலுடன்   எதிர் பார்த்தேன்.  

செப்டம்பர் மதிப்பாய்வு  என்பது  வரைபடங்கள் மற்றும் விளக்க படங்களுடன் கூடிய 33 பக்க உரை. இது  3 பக்க தரவுகளுடன். ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அடையாளப் படுத்தப்பட்டது.  இவை  அரசாங்கத்தின் கவலைகளை வெளிப்படுத்துகின்றன: 

அவை 1) நிதி நிலை, 2) தொழில், 3) சேவைகள், 4) கடன் தேவை, 5) பணவீக்கம் மற்றும் 6) அந்நிய துறைகள் எனலாம்.  வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, பசி மற்றும் வறுமை ஆகியவை.  ஆனால் இவை  எவரையுமே  அரசு வெளிப்படுத்த வில்லை என்பதால் இவற்றை பற்றி அரசு கவலைப்படவில்லை  என்று அனுமானிக்க முடிகிறது. 

அறிக்கையின் தொனி தன்னைத்தானே  புகழ்ந்து கொள்கிறது.  கடைசி வாக்கியம் தொனியையும் அணுகுமுறையையும் சுருக்கமாகக் கூறுகிறது: 

கிரிக்கெட் ஆடுகளத்தில் காற்று வீசும் போது பேட்டிங்  செய்வது போல், பந்துகளை  கையாளும் பேட்ஸ்மேனின் திறன் தான் ரன்களை குவிக்க முடியும். இது அரசு தவறான கொள்கை முடிவுகளை எடுத்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.    

முடிவுரை என்றாலே  அது வாசிப்பவர்களை கவர வேண்டும்.  மதிப்பாய்வின் படி அரசின் வருவாய் உயர்ந்து கொண்டே வருகிறது.  மூலதனச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. அரசின் மூலதன செலவுகளும் உயர்ந்து வருகின்றன. 

அரசு தரமான இனங்களில் மட்டுமே அதிகம் செலவிடுகிறது.  ஆகஸ்ட் வரை. அரசாங்கத்தின் வரவும் செலவும் நல்ல நிலையில் தான் இருந்தது. அதே நேரத்தில் நிதி அமைச்சகம் வாங்கும் கடன்களால் பொதுக் கடன் சுமை அதிகரிக்கும் என ஒப்புக் கொள்கிறது அறிக்கை.

தொழில்துறையில், மதிப்பாய்வு பற்றி பேசும் போது I உற்பத்தியாளர் குறியீட்டு அட்டவணை,  தொழில்துறை உலோகக் குறியீடு, வணிக மதிப்பீட்டுக் குறியீடு மற்றும் தொழில்துறை உற்பத்திக் குறியீடு போன்ற பல குறியீடுகளை  தவிர்த்து விட்டு  ஒட்டுமொத்த  தொழில் வளர்ச்சி  மேம்பட்டுள்ளது என்று  முடிவுரை வழங்குகிறது..

சேவைகளில், மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம், சுற்றுலா, ஹோட்டல் தொழில், விமானப் பயணிகள் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி  உந்துதலாக வெளிப்படும் என்று  கணிக்கப்பட்டுள்ளது.  

கடன் தேவை  வேகமாக  வளர்ந்து வருகிறது (16.4 சதவீதம் ). ஆனால் பணவியல் கொள்கையை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை கட்டுப் படுத்தும்.  பணவீக்கத்தின்  விமர்சனம் அதன் வெளிப்படையான சார்புநிலையைக் காட்டிக் கொடுத்துள்ளது. 

அது “புவிசார் அரசியல் முன்னேற்றங்கள்” மீது பழியை வீசி அரசாங்கத்துக்கு எந்தப் பழியும் வராதவாறு காப்பாற்றுகிறது.

அரசின் ஆய்வறிக்கை தன்னை தானே புகழ்வது, கையறு நிலையை கலப்பது என ஒரு கலவையாக திகழ்கிறது. ஏற்றுமதி அதிகரித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் அரசு இறக்குமதியும் அதிகரிப்பது குறித்து குறிப்பிடும் போது தனது இயலாமையை ஒப்புக் கொள்கிறது. 

நடப்பு கணக்கு பற்றாக்குறை பெரிதாக்கிக் கொண்டே இருப்பதை குறிப்பிடும் அறிக்கை இனி இறக்குமதி அதிகமாவது பற்றி சொல்லி விட்டு இன்னும் சில மாதங்களில் அது சரியாகி விடும்  என்றும் மொத்த உற்பத்தி அளவில் 3 சதவீதம் என்ற அளவுக்கு கட்டுப்படும் என்கிறது.

   நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உற்பத்தி அளவில் 3.4 சதவீதம் அதிகரித்து அறிக்கையை கேலிக்கூத்தாகிறது.  

ஆய்வறிக்கை மதிப்பாய்வில் கூறப்பட்டவை, பாரபட்சமாகவும், தம்பட்டமாகவும்  இருந்தாலும், மன்னிக்கப்படலாம், ஏனெனில் ஆவணம் சில வாரங்களில் வரலாறாகி விடும்.

  கோடிக்கணக்கான மக்களை பற்றிய  இந்த அறிக்கை அலட்சியமாக கையாள்வது எரிச்சலூட்டுகிறது.  இங்கிலாந்து பிரதமராக  திரு. ரிஷி சுனக்  பதவியேற்ற அன்றே நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடி பற்றி எச்சரித்தார். 

சீனாவின் தலைசிறந்த ஜனாதிபதியான திரு. ஜிங்பிங், சீனாவின் பொருளாதாரத்தை எச்சரிக்கையுடன் எதிர்ப்புத்தன்மை கொண்டதாக வகைப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட அமைப்பு  மற்றும்  Oxford மனித குறியீட்டெண் அமைப்பு ஆகியவை இந்த வருடம் அக்டோபர் 17, 2022 அன்று வெளியிட்ட அறிக்கையில், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 228 மில்லியன் மக்கள் ‘ஏழைகள்’ என்று மதிப்பிட்டுள்ளனர்.

தொற்றுநோய் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மோசமடைந்தது. உலகளாவிய பசிக்  குறியீட்டில், இந்தியாவின் தரவரிசை 121 நாடுகளில் 107 ஆக உள்ளது, இது கடந்த எட்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது. மொத்த இந்தியர்களில் 16.3 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள். 

அதாவது அவர்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. 19.3 சதவீத குழந்தைகள்  மெலிந்து போய் உள்ளனர்.  35.5 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்.

படித்தவர்களிடம் வேலையின்மை விகிதம் 8.02 சதவீதமாக உள்ளது. சமீபத்தில், உத்தர பிரதேசத்தில் 37 லட்சம் விண்ணப்பதாரர்கள்  நூற்றுக்கணக்கான கிரேடு ‘சி’ மாநில அரசு வேலைகளுக்கு போட்டியிட்டனர்.  

இது ஒரு மாநிலத்தில் பட்டதாரி இளைஞர்களிடையே வேலையின்மை அளவைக் குறிக்கிறது. இது ஒரு மாநிலத்தின் நிலவரம் தான். ஏழைகளுக்கான ஒரே பாதுகாப்பு வலை மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை வாய்ப்பு திட்டம் தான். இந்த திட்டத்தில்  2020-21ல் வேலை தேடும் 40 சதவீத குடும்பங்களுக்கு ஒரு நாள் வேலை வழங்க முடியவில்லை. 

வேலையில்லாத் திண்டாட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, பசி மற்றும் வறுமை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த அறிக்கை எந்த ஆறுதலும் கொடுக்க முடியவில்லை.  உலகளாவிய மந்தமாகும் பொருளாதாரம்,  உலகமயமாக்கல், பாதுகாப்புவாதம், அதிக வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் இந்திய நாணயத்தின் சரிவு போன்றவை குறித்து  பற்றி இந்த அறிக்கையில் எந்த குறிப்பும் இல்லை.  

கடந்த அக்டோபர் 22ம் தேதி நிதியமைச்சகம் நாட்டின்  பொருளாதார நிலைமை குறித்து எச்சரித்தது. ஆனால் நிதி அமைச்சகத்தின் அறிக்கை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.  அக்டோபர் 22 காலைக்கும் மாலைக்கும் இடையே என்ன மாற்றம் ஏற்பட்டது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது குறித்து நான் வியப்போடு சிந்திக்கிறேன்.

தமிழில் : த. வளவன் 

நன்றி:IndianExpress

-------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?