மகா கூட்டணியால் அதிமுக ஆட்சி!
மழை நிலவரம்
தமிழ்நாட்டில் இன்றும் மழை பொழியும் என்றும் நவம்பர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் பெய்துவருகிறது.இந்த நிலையில் நவம்பர்9ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகை, கடலுர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், திருவாரூர், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
காரைக்கால் பகுதிகளில் ஓரிடு இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த காற்றதழுத்த தாழ்வு பகுதியை தொடர்ந்து நவ.9ஆம் தேதி இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
----------------------------------------------------------------------
கெஜ்ரிவால் வாங்கிய கையூட்டு
மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சனிக்கிழமை (நவ.5) ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
அந்தக் குற்றச்சாட்டில், “மாநிலங்களவைக்கு சீட் வழங்க ரூ.50 கோடி வரை அரவிந்த் கெஜ்ரிவால் பேரம் பேசியதாகவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து 20-30 பேரை அழைத்துவந்து கட்சிக்கு ரூ.500 கோடி வரை நிதி வழங்க கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், சந்திரசேகர் முன்னதாக டெல்லி லெப்டினன்ட் கவர்னர் (எல்-ஜி) வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதி, பணமோசடி வழக்கில் சிறையில் இருக்கும் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீதும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் சுகேஷ் ஒரு குண்டர், மோர்பி சம்பவத்தை திசை திருப்ப இவ்வாறு பேசுகிறார் என அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு அவதூறு வழக்கு பதிவு செய்யப் போவதாக சுகேஷ் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தாம் ரூ.50 கோடி அளித்த பின்னர் கெஜ்ரிவாலும் நானும் இரவு விருந்து சாப்பிட்டோம் எனவும் சுகேஷ் கூறியுள்ளார்.
சந்திரசேகரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ““குஜராத் மற்றும் டெல்லி மாநகராட்சித் தேர்தல்களின் முடிவைப் பற்றி பாஜக மிகவும் கவலையடைந்துள்ளது.
அதன் விரக்தியானது சுகேஷ் சந்திரசேகர் போன்ற ஒரு கோமாளியை பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகராகத் மாற்றியுள்ளது.
இந்த சுகேஷ் யார்? பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ரான்பாக்ஸியின் ஷிவேந்தர் சிங்கும் அவரது சகோதரரும் சிறையில் இருந்தபோது, சுகேஷ் சிங்கின் மனைவியிடம் ரூ.215 கோடி கேட்டுள்ளார்.
அவர் கேட்ட பணம் முதலில் சட்டச் செயலர், உள்துறைச் செயலர், பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
இன்று அவருக்கு பாஜகவின் தூதராகவும், நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்கிறார்.
மேலும், சுகேஷ் ஒரு போதும் பொய் சொல்லாத புத்திசாலியா? என நான் கேட்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை” என்றார்.
முன்னதாக மணீஷ் சிசோடியா, “குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச தேர்தல்களில் தோற்றுவிடுவோமோ என பாஜக அஞ்சுகிறது. அதற்காக திகாருடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
அவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். பாஜக பதிலுக்கு உதவும். ஏனெனில் அவர் வழக்குகளுடன் போராடுகிறார்.
மேலும் அடுத்த வாரம் ஜெ.பி. நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைவதாகவும் ஒரு தகவல் உள்ளது” .
இந்த சுகேஷ்தான் இரட்டை இலை பெற்றுத் தருவதாக தினகரனிடம் கோடிகளில் பணம் மோசடி செய்தவர்.
-------------------------------------------------------
மகா கூட்டணி-அஅடுத்து அதிமுக ஆட்சி
நடைபெற்ற அ.தி.மு.க பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசியதாவது: “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக 3-ஆக உடைந்துள்ளது என கூறுகிறார். அதிமுக ஒன்றாகத்தான் உள்ளது. உடைக்க வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும்.
அ.தி.மு.க-வை முடக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. அ.தி.மு.க-வில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்தி தி.மு.க நினைக்கிறது. அரசியல் ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாத தி.மு.க கொல்லைப்புறமாக வந்து செயல்படுகிறது.
அ.தி.மு,க உடையவில்லை ஒன்றாக இருக்கிறது என்பதை நாமக்கல் பொதுக்கூட்டம் காட்டுகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம். காற்றை தடை செய்ய முடியாதது போல, அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதையும் யாராலும் தடை செய்ய முடியாது.
இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி. காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை அ.தி.மு.க வழங்கியது. அந்த திட்டங்களை தி.மு.க-வால் கொடுக்க முடியுமா? திட்டங்களை நிறுத்திவிட்டீர்கள், இதற்கான தக்க பதிலடியை வரும் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள்.
தி.மு.க-வால் அ.தி.மு.க-வை நேரடியாக எதிர்க்க முடியாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடுபொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம். பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறுவோம்.”
-----------------------------------------------------------------