கொழுப்பு

 நம் உடல் ஒருநிலையில் இயங்க கொழுப்பு நமக்கு மிகவும் தேவை. நம் உடல் செல்கள் உற்பத்தியாவதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம்.

உடலில் கொலஸ்ட்ரால் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை. அளவுக்கு அதிகமாகும் போதுதான் மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமன், ரத்தக் குழாய் அடைப்பு போன்ற பல உடல்நல பிரச்சனைகள் வருகின்றன.

எனவேதான், கொலஸ்ட்ராலை அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும் ..

நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, சிவப்பு அரிசி, முழு தானியங்களை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். 

இது கொழுப்பு அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும்.

முடிந்தவரை துரித உணவு, இறைச்சி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மீன் சாப்பிடலாம். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெட்ட கொழுப்பு, மிக அதிக அளவில் இருக்கிறது.

இதுதவிர, அதிக அளவில் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் உதவியாக இருக்கும்.

ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ‘ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. 

இது கொழுப்பைக் குறைக்க உதவும். 

ஆனால் இதை மருத்துவரின் பரிந்துரையின்பேரில்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.காரணம் உங்கள் உடல் கொழுப்பை அவர் கணக்கிட்டுப் பரிந்துரைப்பார்.

தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சிறிய மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

-----------------------------------------------------------

பணமதிப்பிழப்பும்

நீதி மதிப்பிழப்பும்.

இந்திய அரசு 2016ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதியன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது. அதுகுறித்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அந்த நடவடிக்கை செல்லும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அந்த நடவடிக்கையின்போது, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வழங்கப்பட்ட 52 நாட்கள் கால அவகாசம் நியாயமற்றது இல்லை என்று நீதிபதி நாகரத்னா தவிர அமர்வின் மற்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

 ஆனால், உண்மையில் அந்த 52 நாட்கள் போதவில்லை என்பது மட்டுமின்றி தான் நடைமுறையில் பல சிக்கல்களை இந்தியா எதிர்கொண்டது.


கடந்த 1978ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்குக் கால அவகாசமாக 3 நாட்கள் வழங்கப்பட்டு, பிறகு மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட நீதிபதி கவாய், தனது தீர்ப்பில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் அரசின் முடிவெடுக்கும் செயல்முறை குறைபாடுடையது இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது லட்சக்கணக்கானவர்களின் வாழ்வதாரம் பறிக்கப்பட்டது என்பதுதான் நடைமுறை உண்மை.வேலை பார்த்தவர்களுக்கு
சம்பளம்கூடக் கொடுக்க முடியாத நிலை அன்று.


5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ஒருவரான நீதிபதி நாகரத்னா, நீதிபதி கவாயின் தீர்ப்புடன் தான் மாறுபடுவதாகக் கூறினார். அவர் கூறிய தீர்ப்பில், “இந்திய ரிசர்வ் வங்கி என்பது இந்திய பொருளாதாரத்தின் பாதுகாப்புச் சுவர். 

பொருளாதார, நிதி சார்ந்த முடிவுகள் சிறந்தவையா என்பதை இந்த நீதிமன்றம் ஆராய முடியாது,” எனக் கூறியவர், “நாடாளுமன்றம் இல்லாமல் ஜனநாயகம் தழைத்தோங்க முடியாது. ஆகவே, இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது,” எனக் குறிப்பிட்டார்.


பிரிவு 26(2)இன் பொருள், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நன்மை தீமைகளை ஆராய்வது இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி நாகரத்னா, “பிரிவு 26(2)ன் படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கான முன்மொழிவு ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிடமிருந்து வெளிவர வேண்டும். எந்த பரிசீலனையும் மேற்கொள்ளாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துவிட்டது,” என்று தெரிவித்துள்ளார்.


அதோடு, சட்டம் மூலமாகவே பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றவர், ரகசியம் தேவை என்று மத்திய அரசு கருதியிருந்தால் அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.


 “நீதிபதி நாகரத்னா கூறியுள்ளது நடைமுறையை உணர்ந்து கூறியிருப்பதாகத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் முழுக்கவும் இருக்கக்கூடிய ஒரு முடிவை, நாடாளுமன்றத்தில் கூட ஆலோசிக்கப்படாமல், பிரதமரே அறிவித்தார். அது மிகவும் தவறு.

கடந்த சில ஆண்டுகளில், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பல கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. ஆனால், அவற்றுக்கான தொடக்கம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான்.

குறுந்தொழில் செய்வோர், தொழிலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, வார சம்பளம், நிலுவைத் தொகைகளைத் தருவது என்று அனைத்தையும் பணப் பரிவர்த்தனை மூலம் தான் மேற்கொண்டுள்ளனர்.

அப்படியிருந்த சூழலில், இந்த நடவடிக்கை வந்தது.
அப்போது பணத்தைத் தேவைக்கேற்ப உடனடியாக எடுக்க முடியவில்லை. 

ஆகையால் சம்பளம் கொடுக்க முடியாத நிலை, மூலப் பொருட்களை வாங்க முடியாத நிலை போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டன. சொந்தப் பணத்தை எடுக்கவே நாள் கணக்கில் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.

2017ஆம் ஆண்டில் வெளியான அந்த அறிக்கை, 35% வேலையிழப்பு, 50 ல வருமான இழப்பு ஆகியவை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதல் 34 நாட்களில் நடந்ததாகத் தெரிவித்தது.
2017ஆண்டு மார்ச் வரையிலான நிலவரப்படி, 60 சதவீதம் வேலையிழப்பு, 55 சதவீதம் வியாபார இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறியது. 

அந்த அறிக்கையின்படி, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.


இந்த நடவடிக்கையால், அன்றாடம் நடக்கும் வசூல்களின் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில்முனைவோர், தினக்கூலியைச் சார்ந்திருப்பவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் காணாமல் ஆக்கப்பட்டன.


இது எளிய மக்கள்,தொழிலாளர்கள் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக் .

இந்த நடவடிக்கையின் மூலம் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்று பார்த்தால் எதுவுமே இல்லை, துன்பம்தான் மிச்சம்.

 இன்றும்கூட, பல வீடுகளில் வயதானோரின் கைகளில் பழைய 500 ரூபாயோ, 1000 ரூபாயோ ஒன்றிரண்டு தாள்கள் இருக்கத்தான் செய்கிறது. 

அப்போது வரிசையில் நின்று மாற்ற முடியாமல் போன உழைத்தவர்களின் பணம் வெற்றுத் தாளாகிவிட்டது.
இந்த நடவடிக்கை சரியா என்பது கேள்வியில்லை. 

அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறை சரியா என்பதுதான் கேள்வி இப்போதாவது எளிய மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை அங்கீகரித்து, குறிப்பிட்ட அளவு வரையறை வைத்து, சில நாட்கள் அவகாசம் கொடுத்து, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தால், அவர்களுக்குப் பயனளித்திருக்கும்.
“பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறில்லை”
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் செயல்படுத்தியவிதம் தவறு.

மோடி,அமித்ஷா போன்றோர் RSS வழிகாட்டுதலபடி அரசு அதிகாரிகள்,ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆலோசனைகளைக் கேட்காமல் தான்தோன்றித்தனமாக செயல் பட்டதால் பணமதிப்பிழப்பின் நோக்கம் தோல்வியடைந்தது.பலர் உயிரிழக்கவும்,சிறு,குறுந்தொழில்கள் அழியவும்,பலதொழிலாளர்கள் வாழ்ஙாதாரம் இழக்கவும் காரணம் ஆனது.

இதை நான்கு நீதிபதிகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.மோடி அரசுக்கு ஆதரவாகவே முடிவெடுத்திருக்கிறார்கள்.

மக்கள் பட்ட இன்னல்களைக்  கண்டுகொள்ளவே இல்லை.

-------------------------------------------------------------------

புத்தாண்டு எண்ணங்கள்

$ இவ்வளவு உயரம் வர அறுபதாண்டுகள் ஓடி விட்டன.இனி ஓய்வுகாலம்.

அதை வசதியுடன்,பணம்,பதவியுடன் கழிக்க யாருக்குத்தான் ஆசை வராது.

தேவையின்றி மிரட்டல் உருட்டல்களும் வராதே.

யார் எப்படி சீரழிந்தால் என்ன.

நாம் பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.$

---------------------------------------------------------------------இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு