கொக்கென நினைத்தாயோ?
தமிழ்நாடு சட்ட மன்றம் இன்று கூடியது.
இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையோடு துவக்கப் பட்டது.
ஆர்.என்.ரவி தேவையற்ற இந்துத்துவா சங்கிப் பேச்சுக்களாலும்,மக்கள் நலத்திட்டங்களுக்கு கையெழுத்திடாமலும் முடக்கி வைத்ததாலும் அவர் மீது பரவலாக அனைத்து தரப்பிலும் கடுப்பில் உள்ளனர்.
எனவே ரவி உரை எவ்வாறு அமையும்,எதிர்வினை எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனாலும் ஆளுங்கட்சிதரப்பில் தயாரிக்கப்படும் உரையை அப்படியே வாசிப்பாரா அல்லது தனது சர்ச்சைக் குத்துகளுக்கு ஆதரவாக திருத்தங்கள் மேற் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ம் அதிகமாகியிருந்தது.
சட்டமன்றம் கூடியதும் ரவி ஆளுநர் உரையைப்படிக்க ஆரம்பித்தார்.
ஆனால் ஆரம்பம் முதலே காங்கிரஸ் போன்ற எதிர்கட்சியினர்,திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநரை திரும்பப்பெறு.மக்கள் உயிர்களைப் பலிவாங்கும் ஆன்லைன் ரம்மி சட்டத்தை எதிர்க்கும் ரவியே பதவி விலகு என குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.
வெளிநடப்பும் செய்து வாயிலில் கூடி நின்று குரல் எழுப்பினர்.
இதனால் ரவி மிகவும் பதட்டத்தில் உரையை படிப்பதை ,தடுமாறுவதை உணர முடிந்தது.பாமக வினர் சட்டமன்றத்தின் உள்லேயே ஆளுநருக்கு எதிரான அட்டைகளைப் பிடித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
அடிக்கடி உரையை படிக்க திணறி செருமிக் கொண்டார் ரவி.
ஆனால் அரசால் தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை.
தானாகச் சேர்த்துக்கொண்டவற்றை படித்தார்.
திராவிட மாடல் அரசு என்றிருந்ததை தவிர்த்தார்.
ஆனால் மீண்டும் மீண்டும் இடம் பெற்ற தமிழ்நாடு என்ற வார்த்தையை வேறு வழியின்று பேசினார்.
அது அரசாணையாயிற் றே வேறு வழியில்லை.
ஆனால் மேகதாத் அணை கட்டக்கூடாது,ஆன்லைன் ரம்மி தடை,நீட் விலக்கு போன்ற பல அரசு,மக்கள் நலத்திட்டங்களை பற்றி உரையை வாசிக்காமல் அவராக சிவற்றை பேச்சுவிட்டு
தேசீயகீதம் இசைக்கும் முன் அவசரம்அவசரமாக சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் .என்பதை விட ஓடினார் என்பதே சரியாகும்.
அதன் பின் நடந்த்துதான் ஆளுநரான ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் செய்த தரமான செய்கை.
தயாரித்து தரப்பட்ட,சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்ட ஆளுநர் உரையைத் தவிர ரவிதன்விருப்பமாகப் பேசியவற்றை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும் எனக் கேட்டுக்க் கொண்டார்.அவ்வாறே நீக்கப் பட்டது.
இதுவரை ஆளுர் உரைக்கு எதிராக எதிர்கட்சியினர் பேசியவைதான் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப் பட்டு வந்தது.
பா.ஜ.க உறுப்பினர் போன்று ரவி பேசியதை நீக்கியதின் மூலம் ரவி ஆளுநர் பதவிக்கு தகுதியின்றி வரம்பு மீறுகிறார் என்பது பதிவாகியது.
ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாகத் கூட்டத்தொடர் ரவியை மிகவும் பதட்டத்திலும்,கோபத்திலும் தள்ளிவிட்டது.
வேறு வழியின்றிதான் ஆரம்ப உரை வாசித்தார்.அதில் இடைச்செருகலும் செய்தார்.
வழமையா மரபான தேசீயகீதம் வாசிக்கப் படும் முன் ஓட்டம் பிடித்தார்.
தனது ஆளுநர் பதவியை தவறாக கையாளுவதாலேதான் .இந்நிலை.
அவர் ஒன்றை மறந்து விட்டார்.இவரை பார்த்து பயப்பட இங்கு தற்போது ஆள்வது, பாஜக விடம் தங்கள் ஊழல் விவகாரங்களில் சிக்பிக் கொண்ட ஓபிஎஸ்சோ,இ.பி்எஸ.சோ அல்ல.
திமுக.
அன்று பிரதமராக உச்சகட்ட புகழில் இருந்த
நேரு நான்சென்ஸ. என்று சொன்னதற்காக போராடியவர்கள்.அவர் மகள் இந்திரா காந்தியின் மிசாவை எதிர்த்து நின்றவர்கள்.
பலமுறை ஆட்சியைக் கவிழ்த்தும் சுயமரியாதை இழக்காமல் போராடி மீண்டும் ஆட்சியைப்பிடித்தவர்கள்.
ஆளுநர் ரவிக்கு அவர் புராணகதையையே ,வாசகத்தையே நினைவூட்டுவோம்.
"கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?'
குறுகிய கண்ணோட்டம்
குறுகிய கண்ணோட்டத்தில் வரலாற்றை அணுகக் கூடாது' என்று சொல்லி இருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், அதே குறுகிய கண்ணோட்டத்தையே தனது உரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
"குருகோவிந்த சிங்கின் மகள்களை மதம் மாற வைக்க ஔரங்கசீப் முயற்சித்தார். அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள்."
இதகசீக்கிய குருவான குருகோவிந்த சிங்கின் நினைவை விழாவில் பேசியுள்ளார்.
அடிப்படைகளையும் பாரம்பர்யங்களையும் உணர்ந்து கொள்ளும் நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.* நம்பிக்கைகள் வாயிலாக நமது முன்னோர்கள் இந்தியக் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தார்கள்.
- என்றெல்லாம் பேசி இருக்கிறார் பிரதமர் அவர்கள். மொகலாயர்கள் ஆட்சி காலம் மோசமாக இருந்தது என்பதும், பிரிட்டிஷ் ஆட்சி காலம் இந்தியாவின் பாரம்பர்யப் பெருமைகளைச் சிதைத்துவிட்டது என்பதுதான் பிரதமர் உரையின் உள்ளடக்கமாக இருக்கிறது. அவர் வலியுறுத்தும் பரந்த மனப்பான்மை கொண்டதாக அவர் பேச்சு இல்லை. அதே குறுகிய எண்ணம் கொண்டதாகவே இருக்கிறது.
“தொன்மை மற்றும் இடைக்காலங்களில் நிலவிய இந்திய வரலாறு குறித்த அறிவியலுக்குப் புறம்பான பார்வை, வகுப்பு உணர்வுகள் பரவுவதற்கான முக்கியக் கருவியாகவும், அத்தகைய சித்தாந்தத்தின் முக்கிய அம்சமாகவும், அதன் விளைவாகவும் திகழ்ந்தது. உண்மையில் வரலாற்றை வகுப்புவாத ரீதியில் விளக்குவது இந்தியாவில் வகுப்புவாதத்தின் முக்கியமான சித்தாந்தமாக உள்ளது" என்று இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா எழுதி இருக்கிறார்.
"வகுப்புவாதச் சித்தாந்தத்தின் அடிப்படையில் வகுப்பறை வரலாறு இருந்தால், கல்வியைப் பரப்புவது என்பது வகுப்புவாதத்தைப் பரப்புவதாக ஆகிவிடும்" என்று எச்சரித்தார் பிபின் சந்திரா.
இசுலாமியர்களும், ஆங்கிலேயர்களும் அன்னிய ஆட்சியாளர்கள், அவர்கள் கொடுமையை மட்டுமே செய்தார்கள் என்று கட்டமைக்க நினைப்பதுதான் இன்றைய வகுப்புவாத கருத்தாக்கம் ஆகும்.
இதன் மூலமாக மதமோதல்க க்கு வித்திடுவதே இதன் உள்நோக்கம் ஆகும். இசுலாமிய மன்னர்களின் மதநல்லிணக்கக் கருத்துக்களை மறைப்பதும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சில சீர்திருத்த முயற்சிகளை மறைப்பதும் இதன் உள்ளடக்கம் ஆகும்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் சில சட்டங்கள் போடப்பட்டன. அவை எதற்காக வந்தன என்பதை அறிந்தால், முந்தைய பாரம்பர்யம் என்ன செய்து கொண்டு இருந்தது என்பதை அறியலாம்.
1795 - பெண் குழந்தைகளைக் கொல்லுதல் கொலைக்கும் சமமானது என அறிவிப்பு.1811 - அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டது.
1812 - உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க கல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு வெல்லெஸ்லி கடிதம் அனுப்பினார். சமயக் கோட்பாடுகளை மனதில் கொண்டு செயல்படவும் என்று அவருக்கு நீதிமன்றம் பதில் அனுப்பியது. உடன்கட்டை ஏறுதலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
1817 - அனைத்துச் சாதியினரும் ஓடு வேய்ந்த வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார் மன்றோ.
1817 - திருவிதாங்கூர் பிரிட்டிஷ் ரெஜிமெண்ட் பேராளராக மன்றோ இருந்தபோது ஈழவர், நாடார் முதலிய சாதியினர் பொன் வெள்ளி அணியலாம் என்று உத்தரவிட்டார்.
1819 - சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதலுக்கு முழுத்தடை.
1830 - சென்னை மாநிலத்தில் உடன்கட்டை எனப்படும் சதிக்கு தடை.
1832 - காமக்கினியாள் கோவிலில் நரபலிக்குத் தடை விதிக்கப்பட்டது. இக்கோவில் 1565 முதல் நரபலி கொடுக்கப்பட்டு வந்த கோவிலாகும்.
1833 - உடன்கட்டை ஏறுதலை தடை செய்ததை எதிர்த்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
1833 - பட்டயச் சட்டத்தின்படி சாதி, சமய, நிற வேறுபாடுகளின் அடிப்படையில் இந்தியர் யாரும் வேலை வாய்ப்பினை இழந்துவிடக்கூடாது எனக் கூறியது. பிரிட்டிஷாருக்கும் இந்தியருக்கும் வேலைகள் பெறுவதில் வேற்றுமை கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
1833 - பிரிட்டிஷ் பேரரசில் அடிமை முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆறு வயதுக்கு உட்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொழிற் பயிற்சி தந்து விடுவிக்க வேண்டும்.
1835 - இந்தியக் கல்வி, சட்டம் பற்றி ஆராய மெக்காலே அமர்த்தப்பட்டார். அனைவரும் படிக்க இது வழிவகை செய்தது.
1837 - இந்திய தண்டனைச் சட்டத்தை மெக்காலே எழுதினார். அனைவர்க்கும் சட்டம் பொதுவானது.
1837 - மதம் மாறிய இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கும் முன்னோர் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம் வந்தது. சிலர் எதிர்த்ததால் இதை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தனர்.
1841- கோவில் போன்ற சமய நிறுவனத் தொடர்பை கம்பெனி விலக்கிக் கொண்டது. கோவில்கள் மீண்டும் தர்மகர்த்தா முறைக்குப் போனது.
1856 - விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது. விதவைகள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு பரம்பரைச் சொத்தில் உரிமை உண்டு என்றது இச்சட்டம்.
1861- அடிமைகளை வைத்திருப்பது தண்டிக்கப்படும் சட்டம் ஆனது.
1891- திருமண வயது மசோதா அறிமுகம். சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது.
1892 - ஆதிதிராவிடர் நிலம் மற்றும் சொத்து வாங்குவதை தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
1909 - இந்திய கவுன்சில் சட்டப்படி முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதி நிதித்துவ முறைப்படி தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இனம், வகுப்பு அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டது. சென்னை சட்டமன்றத்தில் அனைத்து தரப்பினரும் நுழைந்தார்கள்.
இவை அனைத்தும் என்ன சொல்கிறது? பாரம்பர்யம் என்ற பெயரால் பெண்களும், ஏழைகளும், எளிய மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் எப்படி ஒடுக்கப்பட்டுக் கிடந்தார்கள் என்பதையும், அதில் இருந்து சட்டபூர்வமான விடுதலைக்கு வழி அமைக்கப்பட்டது எப்படி என்பதையும் அறியலாம்.
இவர்கள் சொல்லிக் கொள்ளும் “கலாச்சாரப் பெருமைகள்“ எத்தகைய சிறுமைத்தனங்களை புனிதப்படுத்தி வைத்திருந்தன என்பதை இதன் மூலமாக அறியலாம்.
‘குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து வரலாற்றை அணுகக் கூடாது' என்று பிரதமர் சொல்வது உண்மை.
முதலில் மோடி,பாஜக,RSS கும்பல்தான் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.
-----------------------------------------------------+-----------