(RSS)ஆளுநர்....

 மிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் உரை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்ததன் பின்னணியில் மூளையாக செயல்பட்ட மூத்த அமைச்சர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இடம்பெற்றிருந்த பல வார்த்தைகளையும், சில பக்கங்களையும் தனது பேச்சில் தவிர்த்தார்.

இப்படி ஏதாவது நிகழலாம் என்பதை திமுக- மூத்த அமைச்சர்கள் முன்கூட்டியே உணர்ந்தார்களோ என்னவோ, தங்களிடமிருந்த ஆளுநர் உரையின் நகலை மிக கவனமுடன் வாசித்தபடியே வந்தபோது அதனைக் கண்டுபிடித்துவிட்டனர்.

குறிப்பாக திமுக-வின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் அருகே சென்று ஏதோ பேசினார். 

அவர் தலையசைத்ததும் அவையிலிருந்து வெளியேறி சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.

இந்த நிலையில்தான், ஆளுநர் ரவி தனது உரையை 10.48 மணிக்கு முடித்தார். 

அடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் உரையை 11.31 மணிக்கு தமிழில் வாசித்து முடித்தார்.

 அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் துரைமுருகனால் தயாரிக்கப்பட்ட 2 பக்க தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் கொடுக்கப்பட்டது.

சபாநாயகர் வாசித்து முடித்ததும், இருக்கையில் இருந்து எழுந்த மு.க.ஸ்டாலின், "சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, ஏற்கெனவே அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் சபாநாயகரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் பேசிய பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன்" என தெரிவித்தார்.

அப்போதுதான், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உஷாராகி தனது கட்சி உறுப்பினர்களுடன் அவையிலிருந்து வெளியேறினார்.

அதேபோல் ஆளுநரும் தனக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டுவருவதை தனது உதவியாளர் மூலம் அறிந்து, மரபுப்படி தேசியகீதம் பாடுவதற்குகூட காத்திருக்காமல் சபையில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினார்.

---------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?